ரவா தோசை செய்வது எப்படி | Rava Dosa Recipe in Tamil

ரவா தோசை செய்முறை | Rava Dosa Recipe in Tamil Language

Rava Dosa Recipe in Tamil: வணக்கம் நண்பர்களே இன்றைய சமையல் குறிப்பு பகுதியில் ரவா தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம். பொதுவாக ரவாவில் உப்புமா அல்லது கேசரி செய்து தான் பார்த்திருப்போம். அதிலும் சிலருக்கு காலை உணவாக உப்புமா செய்தால் பிடிக்கவே பிடிக்காது. இனி ரவையில் உப்புமா செய்வதற்கு பதிலாக தோசை செய்து கொடுங்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அதுமட்டுமில்லாமல் வீட்டில் உள்ளவர்களிடமிருந்து உங்களுக்கு பாராட்டுக்கள் குவியும். சரி வாங்க மொறு மொறு ரவா தோசை எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

 1. ரவை – அரை கிலோ
 2. அரிசி மாவு – 400 கிராம்
 3. மைதா – 250 கிராம்
 4. மிளகு – கால் டேபிள் ஸ்பூன்
 5. சீரகம் – கால் டேபிள் ஸ்பூன்
 6. பச்சை மிளகாய் – 1
 7. இஞ்சி – கால் டேபிள் ஸ்பூன்
 8. வெங்காயம் – 1
 9. கொத்தமல்லி – தேவையான அளவு
 10. கருவேப்பிலை – தேவையான அளவு
 11. சர்க்கரை – கால் டேபிள் ஸ்பூன்
 12. எள் விதை – கால் டேபிள் ஸ்பூன்
 13. உப்பு – தேவையான அளவு
 14. நல்லெண்ணெய் – தேவையான அளவு

ரவா தோசை செய்யும் முறை – ஸ்டேப்: 1

 • முதலில் ஒரு பாத்திரத்தில் அரை கிலோ ரவா, 400 கிராம் அரிசி மாவு, மற்றும் கால் டேபிள் ஸ்பூன் மிளகை இடித்து அதில் போட வேண்டும்.

ரவா தோசை – ஸ்டேப்: 2

 • பின்னர் அதன் மேல் பொடிதாக நறுக்கிய கொத்தமல்லி, கால் டேபிள் ஸ்பூன் சீரகம், கால் டேபிள் ஸ்பூன் எள், 250 கிராம் மைதா, தேவையான அளவு சர்க்கரை ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.

rava dosa recipe in tamil

ரவா தோசை செய்வது எப்படி? ஸ்டேப்: 3

 • அதன் பிறகு அதில் நறுக்கிய வெங்காயம் 1, நறுக்கிய பச்சை மிளகாய் 1, கால் டேபிள் ஸ்பூன் தோல் சீவிய நறுக்கிய இஞ்சி, தேவையான அளவு உப்பு போன்றவற்றை சேர்த்து தேவையான அளவு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி மாவை Batter போல (Thin) ரெடி செய்து கொள்ள வேண்டும்.

ரவா தோசை செய்யும் முறை – ஸ்டேப்: 4

 • பின்னர் அடுப்பில் தோசை கல்லை வைத்து கொள்ள வேண்டும். பின் வெங்காயத்தை நல்லெண்ணெயில் தடவி பின்னர் அதை தோசை கல்லின் மேல் தடவ வேண்டும்.

Rava Dosa Recipe in Tamil – ஸ்டேப்: 5

 • இப்போது நாம் ரெடி Batter (மாவை) தோசை கல்லில் ஊற்ற வேண்டும். ரவா தோசை வெந்து வரும் நிலையில் அதன் மேல் நல்லெண்ணெயை ஊற்ற வேண்டும். ரவா தோசை கோல்டன் பிரவுன் கலர் வந்தவுடன் எடுத்து விடலாம்.
 • இப்போது ஹோட்டல் ஸ்டைல் ஒரு மொறு மொறு ரவா தோசை தயார் ஆகிவிட்டது.
 • குறிப்பு: ரவா தோசை மொறு மொறுப்பாக வருவதற்கு மாவை தண்ணீர்போல கரைத்து கொள்ளுங்கள்.
ஐந்தே நிமிடத்தில் தோசை மாவு இல்லாமல் மொறுமொறு தோசை
பன்னீர் மசாலா தோசை செய்முறை விளக்கத்துடன்

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal