வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

1 கப் ரவை இருக்கா அப்போ இந்த மாதிரி குலாப்ஜாமூன் செய்து பாருங்க..!

Updated On: June 15, 2023 8:06 AM
Follow Us:
---Advertisement---
Advertisement

ரவையில் குலாப்ஜாமூன் செய்வது எப்படி..?

வணக்கம் நேயர்களே..! இன்றைய பதிவில் நாம் அனைவருக்கும் மிகவும் பிடித்த குலாப்ஜாமூன் செய்வது எப்படி.? அதுவும் நமது வீட்டில் உள்ள 1 கப் ரவை வைத்து செய்வது எப்படி.? என்று தான் பார்க்கப் போகின்றோம். பொதுவாக குலோப்ஜாமூனை பால் பவுடர் அல்லது கடைகளில் கிடைக்கக்கூடிய குலாப்ஜாமூன் மிக்ஸை பயன்படுத்தித்தான் செய்திருப்போம். ஆனால் இந்த பதிவில் கூறியிருப்பது  போல் ஒருமுறை செய்துப் பாருங்கள் மீண்டும் மீண்டும் செய்து சுவைப்பீர்கள்.

இதையும் பாருங்கள் ⇒ விரிசல் இல்லாமல் குண்டு குண்டு குலாப் ஜாமுன் செய்யணுமா அப்போ இந்த டிப்ஸை மட்டும் ட்ரை பண்ணுங்க போதும்

குலோப்ஜாமூன் தேவையான பொருட்கள் :

முதலில் ரவை குலாப்ஜாமூன் செய்வதற்கு தேவையான பொருட்களை பார்க்கலாம்.

  1. ரவை – 1 கப் 
  2. நெய் – 1 1/2 டேபிள் ஸ்பூன் 
  3. பால் – 1 1/4 கப் 
  4. சர்க்கரை – 1 1/2 கப் 
  5. தண்ணீர்1 1/2 கப் 
  6. ஏலக்காய் தூள் – 1 1/4 டீஸ்பூன் 
  7. கேசரி பவுடர் – 1/2 டீஸ்பூன்
  8. பேக்கிங் சோடா – 1/2 டீஸ்பூன்
  9. எண்ணெய் – தேவையான அளவு 

குலோப்ஜாமூன் செய்முறை :

 gulab jamun recipe in tamil

ஸ்டேப் – 1 :

முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு கடாயை வைத்து அதில் 1 1/2 டேபிள் ஸ்பூன் நெய் சேர்க்கவும். அதில் 1 கப் ரவையை சேர்த்து 4-5 நிமிடத்திற்கு அதில் உள்ள பச்சை வாசம் போகின்ற அளவுக்கு மட்டும் வறுத்துக் கொள்ளவும்.

ஸ்டேப் – 2 :

இதனுடன் 1 கப் அளவுக்கு பாலை ஊற்றி நன்கு வேகவிடவும். பின்னர் இதனை மற்றொரு பாத்திரத்தில் மாற்றி ஆறவிடவும். சூடு ஆறியவுடன் அதனுடன் மீதமுள்ள 1/2 கப் பால், 1/4 டீஸ்பூன் ஏலக்காய்த்தூள் மற்றும் 1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து இதனை நன்கு பிசைந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு வந்தவுடன் அதனை சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.

ஸ்டேப் – 3 :

பின்னர் அடுப்பில் ஒரு அடிகனமான பாத்திரத்தை வைத்து அதில் நாம் எடுத்து வைத்திருந்த 1 1/2 கப் சர்க்கரையை சேர்த்து அதனுடன் 1 1/2 கப் தண்ணீரை ஊற்றி அதில் உள்ள சர்க்கரை கரையும் வரை கொதிக்கவிடவும்.

ஓரளவு கொதித்து ரொம்ப தண்ணீராகவும் இல்லாமல் ரொம்ப கெட்டியாக சர்க்கரை பாகுபோலவும் இல்லாமல் குலாப்ஜாமுனின் மேலே ஊற்றக்கூடிய ஜீரா போல் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். மேலும் இதனுடன் 1/2 டீஸ்பூன் கேசரி பவுடர் மற்றும் 1 டீஸ்பூன் ஏலக்காய் தூளை சேர்த்து நன்கு கொதித்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.

ஸ்டேப் – 4 :

பின்பு அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு கடாயை வைத்து அதில் குலாப்ஜாமூன் உருண்டைகளை பொரிக்கின்ற அளவுக்கு எண்ணெயை ஊற்றி அதில் நாம் முன்பு உருட்டி வைத்திருந்த உருண்டைகளை போட்டு பொரித்துக் கொள்ளவும்.

ஸ்டேப் – 5 :

rava gulab jamun seivathu eppadi tamil

பொரித்து எடுத்த அனைத்து உருண்டைகளையும்  செய்து வைத்துள்ள சர்க்கரை ஜீராவில் 5-6 நிமிடத்திற்கு ஊறவைத்து பிறகு இதனை பரிமாறலாம்.

இப்பொழுது நமது மிகவும் சுவையான மற்றும் மிருதுவான ரவை குலாப்ஜாமூன் ரெடி..! வாங்க சுவைக்கலாம். நீங்களும் இந்த ரவை குலாப்ஜாமூனை செய்து சுவைத்து பாருங்கள்.

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal Kurippugal

 

Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

Bread Spring Roll Recipe in Tamil

School -ல் இருந்து வரும் குழந்தைகளுக்கு இந்த மாதிரி ஸ்நாக்ஸ் செஞ்சி கொடுங்க..!

paruppu sadam in cooker tamil

பக்கத்து தெரு வரைக்கும் மணக்கும் ஐயர் வீட்டு பருப்பு சாதம் செய்வது எப்படி.?

Food To Boost Child Memory in Tamil

குழந்தைகளுக்கு ஞாபக மறதி நீங்கி ஞாபகசக்தி அதிகரிக்க இதை மட்டும் செய்து கொடுங்கள்..!

அடிக்கிற வெயிலுக்கு வீட்டிலேயே கேரட் ஐஸ் கிரீம் இந்த மாதிரி செஞ்சி சாப்பிட்டு பாருங்க..! டேஸ்ட் வேற லெவல இருக்கும்..!

mutton murtabak recipe in tamil

வாட்டர் பாட்டில் இருந்தால் ருசியான ஜாலர் முர்தபா செய்து பாருங்கள்

Mutton Fry Recipe  

பக்ரீத் ஸ்பெஷல் செட்டிநாடு மட்டன் பொரிச்ச கறி

Homemade Ice Cream Recipe in Tamil

இந்த 2 பொருட்கள் இருந்தால் போதும் வீட்டிலே 4 வகையான ஐஸ்கிரீம் செய்யலாம்..!

பஞ்சாபி லஸ்ஸி செய்வது எப்படி | Sweet Lassi Recipe in Tamil

முருகருக்கு பிடித்த திருப்பாகம் செய்வது எப்படி.?