பொறி அரிசி உருண்டை செய்வது எப்படி? Rice Ball Recipe In Tamil..!

பொறி அரிசி உருண்டை செய்வது எப்படி? Rice Ball Recipe In Tamil..!

நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பொதுநலம் பதிவில் வித்தியாசமான பொறி அரிசி உருண்டை(Rice Ball Recipe) எப்படி செய்யலாம்னு பார்க்கலாம். இந்த பொறி உருண்டை குழந்தைகள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த ரெசிபியை இன்னக்கி வீட்டிலே எப்படி பன்னலாம்னு பார்ப்போம் வாங்க..!

newமொறு மொறுன்னு மசாலா காரப்பொரி செய்முறை..! Kara pori recipe in tamil

பொறி அரிசி உருண்டை செய்ய தேவையான பொருட்கள்:

  1. பச்சரிசி – 1 கப் 
  2. தண்ணீர் – 3 கப் 
  3. வெல்லம் – 4
  4. தேங்காய் துருவல் – 1 மூடி 
  5. உப்பு – தேவையான அளவு 
  6. ஏலக்காய் – (சிறிதளவு அரைத்து வைத்தது)

பொறி அரிசி உருண்டை செய்முறை விளக்கம் 1:

Rice Ball Recipe: ஒரு கடாயை எடுத்துக்கொள்ளவும். கடாய் நன்றாக ஹீட் ஆனதும் பச்சரிசி 1 கப் எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக கடாயில் வறுத்து எடுத்துக்கொள்ளவும்.

அடுத்து இட்லி பானையில் 3 கப் அளவிற்கு தண்ணீர் எடுத்து அதில் வெல்லம் நான்கை நன்றாக வேக வைத்துக்கொள்ளவும்.

பருப்பு உருண்டை குழம்பு செய்வது எப்படி

பொறி அரிசி உருண்டை செய்முறை விளக்கம் 2:

Rice Ball Recipe: அடுத்து தேங்காய் 1 மூடி துருவி எடுத்துக்கொள்ளவும். அதன் பிறகு வறுத்த அரிசியை நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

பின் இட்லி பானையில் வேகவைத்த வெல்லப்பாவை வடிகட்டி கொள்ளவும்.

பொறி அரிசி உருண்டை செய்முறை விளக்கம் 3:

Rice Balls At Home: தனியாக கடாயில் வடிகட்டிய பாவில் அரைத்து வைத்த அரிசியை இதில் சேர்க்கவும்.

கட்டி இல்லாத அளவுக்கு நன்றாக கிளறிவிட வேண்டும்.

அதோடு துருவி வைத்துள்ள தேங்காய் துருவலை சேர்த்துக்கொள்ள வேண்டும். தேங்காய் துருவலை எல்லாவற்றையும் சேர்க்காமல் சிறிதளவு தனியாக  வைத்துக்கொள்ள வேண்டும்.

பொறி அரிசி உருண்டை செய்முறை விளக்கம் 4:

Rice Balls At Home: இதை நன்றாக கெட்டியான தன்மைக்கு வரும்வரை கிளறிவிடவேண்டும். அடுத்ததாக தேவையான அளவிற்கு உப்பு சேர்த்துக்கொள்ள வேண்டும்.

நன்றாக கெட்டியான தன்மைக்கு வந்த பிறகு அடுப்பில் இருந்து இறக்கிவிடலாம். கெட்டியான மாவை தனியாக ஒரு அகலமான தட்டில் வைத்துக்கொள்ளவும்.

newபானி பூரி வீட்டிலேயே செய்யலாமா ?

பொறி அரிசி உருண்டை செய்முறை விளக்கம் 5:

Rice Ball In Tamil: இந்த மாவை 10 நிமிடம் ஆற வைக்கவேண்டும். நன்றாக ஆறியபின் ஏலக்காய் அரைத்து வைத்ததை சிறிதளவு சேர்த்து நன்றாக கலந்துகொள்ளவும்.

இட்லி பானையில் தண்ணீர் சிறிதளவு வேகவைத்து கொள்ளவும்.

அடுத்து ஏலக்காய் சேர்த்த மாவை உருண்டை வடிவில் உருட்டி தனியாக சிறிதளவு தேங்காய் துருவல் வைத்திருப்பதில் உருண்டையை தொட்டு எடுக்கவும்.

பொறி அரிசி உருண்டை செய்முறை விளக்கம் 6:

Rice Ball In Tamil: அடுத்து இட்லி பானையில் வேகவைத்த தண்ணீரில் இட்லி தட்டு ஒன்று வைத்து அதன் மேல் துணி அல்லது வாழை இல்லை வட்டமாக நறுக்கி போடவும்.

அதன் பிறகு இட்லி பானையில் உருண்டை வடிவில் உருட்டி வைத்துள்ள உருண்டையை 10 நிமிடம் வேகவைக்க வேண்டும்.

பொறி அரிசி உருண்டை செய்முறை விளக்கம் 7:

Rice Ball Recipe In Tamil: நன்றாக வெந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி தனியாக அகலமான தட்டில் எடுத்துக்கொள்ளவும்.

சூடோடு சாப்பிடுவதை விட நன்றாக ஆறியபின் சாப்பிட்டால் சுவை அதிகமாக கிடைக்கும்.

அவ்ளோதான் இந்த சுவையான பொறி அரிசி உருண்டை ரெடி. இதை கண்டிப்பா வீட்ல செஞ்சி பாருங்க.

நன்றி வணக்கம்…🙏🙏🙏

new10 நாள் ஆனாலும் கெடாத மொறு மொறு சிப்ஸ்..! Evening Snacks..! Rice Flour Recipes..!
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil