மாலை நேர ஸ்னாக்ஸ் செய்து பாருங்கள்
தினம் தோறும் மாலையில் என்ன ஸ்னாக்ஸ் செய்வது என்று ஒரே யோசனையாக இருக்கும். தினமும் பள்ளியை முடித்து வீட்டுக்கும் வரும் பிள்ளைகள் கேட்பது சாப்பிட ஏதாவது செய்து தாருங்கள் என்று தான். உடனே சாதம் இருக்கு அதை சாப்பிடு என்று சொல்வீர்கள். அந்த மீந்துபோன சாதத்தை வைத்து சூப்பரான டிஸ் செய்து குழந்தைகளுக்கு கொடுங்கள்..! வாங்க அதை எப்படி செய்வது என்று பார்ப்போம்..!
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு -3
மீதம் உள்ள சாதம்
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 1
கடலை மாவு – 3 டேபிள் ஸ்பூன்
கருவேப்பிலை கொத்தமல்லி தழை – சிறிதளவு
மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
கரம் மசாலா – 3/4 ஸ்பூன்
இஞ்சி துருவல் – 1 ஸ்பூன்
எலுமிச்சை பழச்சாறு – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
ஸ்டேப்-1
முதலில் 3 உருளைக்கிழங்கையும் வேகவைத்து உரித்து வைத்துக்கொள்ளவும். பின்பு மீந்துபோன சாதத்தை கையாலோ அல்லது மிக்சியிலோ அரைத்துக்கொள்ளவும். அரைக்கும் போது தண்ணீர் சேர்க்கக்கூடாது.
ஸ்டேப்-2
பின்பு இரண்டையும் நன்றாக பிசைந்துகொள்ளவும். பின்பு பொடியாக நறுக்கி வைத்திருந்த வெங்காயம் , பச்சை மிளகாய் – 1 நறுக்கியது, கடலை மாவு – 3 டேபிள் ஸ்பூன், கருவேப்பிலை கொத்தமல்லி தழை – சிறிதளவு, மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன், கரம் மசாலா – 3/4 ஸ்பூன், இஞ்சி துருவல் – 1 ஸ்பூன், எலுமிச்சை பழச்சாறு – 2 டேபிள் ஸ்பூன், உப்பு தேவையான அளவு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். இதில் எண்ணெய் அல்லது தண்ணீர் ஊற்றக்கூடாது காரணம் வெங்காயத்திலும் சாதத்திலும் தண்ணீர் விடும் என்பதால் அதுவே போதும்.
ஸ்டேப்-2
இப்போது எண்ணையை ஊற்றி சூடானதும் மாவை நன்றாக வடை போல் கையில் தட்டிக்கொண்டு எண்ணையில் போட்டு வெந்ததும். தட்டில் தேங்காய் சட்னி வைத்து சாப்பிட்டால் சுவையோ சூப்பராக இருக்கும்.
இட்லி மாவு இல்லாத நேரம் இட்லி வேணும் என்றால் இந்த மாதிரி இட்லி செய்து சாப்பிடுங்கள்
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள் |