தை பொங்கலுக்கு இப்படி சர்க்கரை பொங்கல் செய்து அசத்துங்கள்..!

sakkarai pongal recipe in tamil

சர்க்கரை பொங்கல் செய்வது எப்படி.?

சர்க்கரை பொங்கல் என்றால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அதனால் வருகின்ற பொங்கலுக்கு சர்க்கரை பொங்கல் செய்வோம். சர்க்கரை பொங்கல் செய்து விட்டு அக்கம் பக்கம் வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுப்பீர்கள். அவர்களும் கொடுப்பார்கள். அதை சாப்பிட்டு விட்டு ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு மாதிரியாக சர்க்கரை பொங்கல் ருசி இருக்கும். அதில் ஒரு சர்க்கரை பொங்கல் ரொம்ப ருசியாக இருந்தால், எப்படி தான் சர்க்கரை பொங்கல் செய்திருப்பார்களோ என்று யோசிப்பீர்கள். அதற்கு பதில் சொல்லும் பதிவாக இது  இருக்கும். வாங்க சர்க்கரை பொங்கல் ருசியாக செய்வது எப்படி என்று படித்து தெரிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

சர்க்கரை பொங்கல் செய்ய தேவையான பொருட்கள்:

  1. பச்சரிசி – 1 கப்
  2. வெல்லம் – 2 கப்
  3. ஏலக்காய் பொடி – 1/2 தேக்கரண்டி
  4. நெய் – 3 மேஜைக்கரண்டி/ தேவையான அளவு
  5. முந்திரிப் பருப்பு – தேவையான அளவு
  6. காய்ந்த திராட்சை – தேவையான அளவு

சர்க்கரை பொங்கல் செய்முறை:

 sakkarai pongal recipe in tamil

ஒரு கப் பச்சரிசி, 1/2 பாசிப்பருப்பை கழுவி ஒரு கப் அரிசி கழுவிய தண்ணீரை எடுத்து கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் பானை வைத்து பால் ஊற்றி கொள்ளவும். அதில் அரிசி கழுவிய தண்ணீர் 4 கப் ஊற்றி மூடி வைக்கவும்.

இதையும்  செய்து பாருங்கள் ⇒ மிகவும் சுவையாக வெண்பொங்கல் செய்வது எப்படி?

sarkarai pongal seivathu eppdi

கொஞ்சம் நேரம் கழித்து பொங்கி வந்தவுடன் பொங்கலோ பொங்கல் என்று சொல்லிவிட்டு அரிசியை சேர்க்கவும்.

அரசி வெந்து வந்த பிறகு 2 கப் வெல்லத்தை சேர்த்து கலந்து விடவும். பிறகு நெய் ஊற்றி 10 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விடவும்.

அடுத்து அடுப்பில் கடாய் வைத்து நெய் ஊற்றி, அதில் முந்திரி, திராட்சை, ஏலக்காய் தூள் சேர்த்து சிவந்த நிறம் வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு செய்து வைத்துள்ள சர்க்கரை பொங்கலில் சேர்க்கவும். அவ்ளோ தாங்க சுவையான சர்க்கரை பொங்கல் ரெடி.!

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal Kurippugal