சமோசா செய்வது எப்படி | Samosa Recipe in Tamil

Advertisement

வெங்காய சமோசா செய்வது எப்படி | Onion Samosa Recipe in Tamil

நண்பர்களே..! இன்று நாம் பார்க்க போகிறது என்னவென்றால் எல்லாருக்கும் பிடித்த ஒன்றுதான்.  இது குழந்தைகளுக்கு மட்டும் பிடித்த ஒன்று அல்ல, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரொம்ப விரும்பி சாப்பிடக்கூடிய  ஒன்று வெங்காய சமோசா. இது செய்வது பெரிய விஷயம் அல்ல, வீட்டில் இருக்கும் பொருட்கள் போதும். இதை செய்து சாப்பிட்டு பாருங்கள். செய்வதை தெளிவாக காண்போம் வாங்க.

தேவையான பொருட்கள் :

  1. மைதா – 2 கப்
  2. கோதுமை மாவு – 1 கப்
  3. எண்ணெய் – தேவையான அளவு
  4. பெரிய வெங்காயம் – 2
  5. பச்சை மிளகாய் – 3
  6. இஞ்சி – சிறிய துண்டு
  7. மஞ்சள் தூள் – சிறிதளவு
  8. மிளகாய்த்தூள் – 1/2 ஸ்பூன்
  9. தனியாத்தூள் – 1 ஸ்பூன்
  10. சோம்பு – சிறிதளவு.
  11. உப்பு – தேவையான அளவு.
டேஸ்டான கீரை வடை செய்வது எப்படி

சமோசா செய்வது எப்படி தமிழ் | Samosa Recipe

Samosa Recipe|செய்முறை விளக்கம்:

ஸ்டேப் 1:

மைதா 2 கப், கோதுமை மாவு 1 கப் ,தேவையான அளவு உப்பு, கொஞ்சம் எண்ணெய் அதனுடன் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பிசைவும் படி பிசைந்து கொள்ளவும். பிசைந்த பிறகு மாவை 10 நிமிடம் ஊறவைக்கவும்.
ஸ்டேப் 2:

ஊற வைத்த மாவை உருண்டையாக பிடித்து வைத்துக்கொள்ளுங்கள். பிறகு சப்பாத்தி செய்யும் படி விசிரிக்கொள்ளவும்.
ஸ்டேப் 3:

வாணலியில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி அதில் நாம் எடுத்து வைத்த சோம்பு, பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம், கருவேப்பிலை, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள் சேர்த்து அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பின் அதை எடுத்துக்கொள்ளவும்.

இந்த Secret Recipe சேர்த்தால் போதும் மொறு மொறுன்னு உளுந்து வடை செய்யலாம்.!

ஸ்டேப் 4:

சமோசா போல் சுருட்டி கொள்ளவும். பின் அதில் செய்து வைத்த மசாலாவை வைக்கவும்.
ஸ்டேப் 5:

இப்பொது வாணலியில் எண்ணெய் ஊற்றி கொதிக்க வைக்கவும். பின் அதில் செய்து வைத்த சமோசாவை எண்ணெயில் போட்டு பொரிக்கவும்.
பின் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பிடித்த சுவையான சூப்பரான சமோசா ரெடி.

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்
Advertisement