இட்லி தோசைக்கு ஏற்ற சட்னி
நண்பர்களே வணக்கம்..! தினமும் ஒரே மாதிரியான சட்னி செய்து சாப்பிட பிடிக்கவில்லையா.? வீட்டில் இருக்கும் பெண்களை விட ஆண்கள் தான் சமையலில் ராஜாவாக இருக்கிறார்கள் ஏனென்றால் அவர்கள் தான் தனியாக வீடு எடுத்து சமைத்து சாப்பிடுவார்கள். அதாவது அவர்கள் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வரும் போது அனைத்து பொருட்களும் இருக்கும் ஆனால் அதனை வறுத்து அரைக்க அவ்வளவு சலிப்பாகஅதனை நினைப்பார்கள். இருக்கும் பொருட்களை அப்படியே அரைத்து சாப்பிட்டால் நல்லா இருக்கும் என்று நினைப்பார்கள். அவர்களுக்கு தான் இந்த சட்னி.
இந்த சட்னியை ஆண்களும் செய்யலாம் அதேபோல் வேலைக்கு சென்று வரும் பெண்களும் செய்யலாம். ஏனென்றால் இந்த சட்னி அரைக்க 1 நிமிடம் போதும் இருக்கும் பொருட்களை வைத்து அப்படியே அரைக்க வேண்டியது தான் வாங்க தெரிந்துகொள்ளலாம்..!
சூப்பர் சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
- பச்சை மிளகாய் – 5
- பூண்டு – 4
- பெரிய வெங்காயம் – 1
- வறுத்த வேர்க்கடலை – 1/2 கப்
- பொட்டுக்கடலை – 1/4 கப்
- புளி – சிறிதளவு
- கொத்தமல்லி – 2 கொத்து
- உப்பு – தேவையான அளவு
- தாளிக்க – தேவையான எண்ணெய்
- கடலைப்பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
- உளுத்தப்பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
- சீரகம் – 1/2 டீஸ்பூன்
- கடுகு – 1 ஸ்பூன்
- வரமிளகாய் – 2
- கருவேப்பிலை – 1 கொத்து
ஸ்டேப்: 1
முதலில் மிக்சி ஜாரை எடுத்துக்கொள்ளவும். அதன் பின் அதில் பச்சை மிளகாய் – 5, பூண்டு – 4, பெரிய வெங்காயம் – 1, வறுத்த வேர்க்கடலை – 1/2 கப், பொட்டுக்கடலை – 1/4 கப், புளி – சிறிதளவு, கொத்தமல்லி – 2 கொத்து, உப்பு – தேவையான அளவு சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
வெங்காயம் வாதக்காமல் இருந்தால் நல்லா இருக்காது என்று யோசிக்காதீர்கள், சூப்பராக இருக்கும். இப்போது அரைத்து வைத்துக்கொள்ளுங்கள்.
ஸ்டேப்: 2
இப்போது ஒரு கடாயை எடுத்துக்கொள்ளவும். அதில் எண்ணெய்யை ஊற்றி அதில் கடலைப்பருப்பு – 1 டேபிள் ஸ்பூன், உளுத்தப்பருப்பு – 1 டேபிள் ஸ்பூன், சீரகம் – 1/2 டீஸ்பூன் சேர்த்து வறுக்கவும் அதன் பின் அதில் கடுகு – 1 ஸ்பூன், வரமிளகாய் – 2 , கருவேப்பிலை – 1 கொத்து சேர்த்து வறுத்து அதில் அரைத்துவைத்த சட்னியில் ஊற்றி சூடான இட்லி தோசைக்கு சேர்த்து சாப்பிடுங்கள் சுவை சூப்பராக இருக்கும்.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 கோதுமை மாவு, மைதா மாவு இல்லாமல் சூப்பரான மசாலா பூரி செய்வது எப்படி வாங்க தெரிந்துகொள்ளலாம்..!
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal Kurippugal |