இதை 1 முறை உங்கள் வீட்டில் செய்து பாருங்கள்… அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள்…

Advertisement

Semiya Sweet Recipe in Tamil..! 

ஹலோ நண்பர்களே… இன்று நம் பதிவில் அனைவருக்குமே மிகவும் பிடித்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடிய ஒரு சுவையான ஸ்வீட் செய்வது எப்படி என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். இந்த ஸ்வீட் மட்டும் நீங்கள் ஒரு முறை செய்து சாப்பிட்டால் போதும் தினமும் சாப்பிட வேண்டும் என்று நினைப்பீர்கள். அவ்வளவு சுவையாக இருக்கும் இந்த சேமியா ஜாமுன் ஸ்வீட்.

இந்த சேமியா ஜாமுன் ஸ்வீட்டை நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் செய்து கொடுத்து அசத்தலாம்.  இன்று நம் பதிவில் அனைவருக்கும் மிகவும் பிடித்த சேமியா ஜாமுன் ஸ்வீட் செய்வது எப்படி என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். வாங்க நண்பர்களே சேமியா ஜாமுன் ஸ்வீட் செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.

சேமியா ஜாமுன் செய்ய தேவையான பொருட்கள்:

  1. சோள மாவு – 2 டேபிள் ஸ்பூன்
  2. சர்க்கரை – 4 டேபிள் ஸ்பூன்
  3. பால் – 1 கப்
  4. நெய் – 2 டீஸ்பூன்
  5. ஏலக்காய் தூள் – தேவையான அளவு
  6. சேமியா – 100 கிராம்

இதையும் கிளிக் செய்து பாருங்கள் ⇒ குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த அவல் லட்டு செய்வது எப்படி..?

சேமியா ஜாமுன் செய்முறை:

Step -1:

ஒரு கடாயில் 2 டேபிள் ஸ்பூன் சோள மாவை போட வேண்டும். பின் அதனுடன் 4 டேபிள் ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கொள்ள வேண்டும்.

Step -2: 

பின் அதனுடன் 1 கப் பால் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். நன்கு கலந்த பின்னர் அதை அடுப்பில்  வைக்க வேண்டும். பின் அதை அடி பிடிக்காமல் நன்றாக கிண்ட வேண்டும். இந்த பால் கெட்டியாக வரும் வரை நன்றாக கிண்ட வேண்டும்.

Step -3: 

இது கெட்டியாக வந்த உடன் அதில் 2 டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து கொள்ள வேண்டும். பின் அதனுடன் வாசனைக்காக சிறிதளவு ஏலக்காய் தூள் சேர்த்து கொள்ள வேண்டும்.

Step -4:

பின் 100 கிராம் சேமியாவை ஒரு பாத்திரத்தில் வைத்து அதில் சூடான தண்ணீர் ஊற்றி 1 நிமிடம் ஊறவைக்க வேண்டும். 1 நிமிடம் முடிந்த பிறகு சேமியாவை தண்ணீர் இல்லாமல்  வடிகட்டி எடுத்து கொள்ள வேண்டும்.

Step -5:

பின்பு ஊறவைத்த சேமியா உடன் 2 டேபிள் ஸ்பூன் சர்க்கரை சேர்த்துக்கொள்ள வேண்டும். அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

இதையும் கிளிக் செய்து பாருங்கள் ⇒ கோதுமை மில்க் கேக் செய்வது எப்படி

Step -6:

பின் ஒரு குழிப்பணியார கல் எடுத்து கொள்ள வேண்டும். அதில் சிறிதளவு நெய் தடவி கொள்ள வேண்டும்.

Step -7: 

பின் நாம் கலந்து வைத்துள்ள சேமியாவை எல்லா குழிகளிலும் கொஞ்சமாக வைக்க வேண்டும். பின் அதை நன்கு குழி போன்று செய்து கொள்ள வேண்டும்.

Step -8:

பின்னர் நாம் செய்து வைத்துள்ள கலந்து வைத்த சோள மாவை குழி பணியாரத்தில்  வைக்க வேண்டும். பின் மீதமுள்ள சேமியாவை இதன் மேல் வைத்து பணியாரம் போல் செய்து கொள்ள வேண்டும்.

Step -9:

பின்னர் இதை அடுப்பில்  வைத்து மூடி 10 நிமிடம் நன்றாக வேகவைக்க வேண்டும். பின்பு அதை திருப்பி கொள்ள வேண்டும். அதையும் 10 நிமிடம் நன்றாக வேக வைத்து பொன்னிறமாக வந்தவுடன் இறக்க வேண்டும்.

 இப்பொழுது அனைவருக்கும் மிகவும் பிடித்த சுவையான சேமியா ஜாமுன் தயார்..!

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal Kurippugal
Advertisement