வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

1 கப் ரவையை வைத்து புதிய சுவையில் அருமையான டிஸ் இப்படி செஞ்சி பாருங்க..!

Updated On: March 3, 2023 12:19 PM
Follow Us:
Semolina Potato Recipes in Tamil
---Advertisement---
Advertisement

Semolina Potato Recipes

ஹலோ நண்பர்களே..! தினமும் உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு ஒரே மாதிரியான ஸ்நாக்ஸ் செய்து கொடுத்து அலுத்து போய்விடாதா..? உங்களுக்கே அலுத்து போய்விட்டது என்றால் அப்போ குழந்தைகளுக்கு..! சரி உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு புதிய முறையில் சுவையான ஸ்நாக்ஸ் இந்த மாதிரி செய்து கொடுங்கள். குழந்தைகள் என்ன பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள். வாங்க நண்பர்களே ரவை மற்றும் உருளைக்கிழங்கை வைத்து அருமையான ஸ்நாக்ஸ் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇https://bit.ly/3Bfc0Gl

தேவையான பொருட்கள்:

 

  1. ரவை – 1/2 கப்
  2. அரிசி மாவு – 1/2 கப்
  3. உருளைக்கிழங்கு – 2
  4. வெங்காயம் – 2
  5. பச்சை மிளகாய் – 3
  6. சீரகம் – 1 ஸ்பூன்
  7. மிளகாய் தூள் – 1/4 ஸ்பூன்
  8. சாட் மசாலா – 1/4 ஸ்பூன்
  9. கொத்தமல்லி – சிறிதளவு
  10. உப்பு – தேவையான அளவு
  11. எண்ணெய் – தேவையான அளவு
உருளைக்கிழங்கை வைத்து மிகவும் சுவையான Break Fast இப்படி செஞ்சி சாப்பிட்டு பாருங்க..!

Semolina Potato Recipes in Tamil:

கடாயை அடுப்பில் வைக்கவும்: 

கடாயை அடுப்பில் வைக்கவும்

 

முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைக்க வேண்டும். பின் அதில் 2 ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் ஊற்றி கொள்ளவும். பின் அதில் 1 ஸ்பூன் அளவிற்கு சீரகம் சேர்த்து அதனுடன் ரவை 1/2 கப் அளவிற்கு சேர்த்து வதக்க வேண்டும்.

ரவையை நன்றாக வதக்க வேண்டும்

ரவையை நன்றாக வதக்க வேண்டும். ரவை வறுபடும் வாசனை வந்ததும் அதில் 1 கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ள வேண்டும்.

ரவையை நன்றாக வேகவிட வேண்டும். ரவை நன்றாக வெந்து கையில் ஒட்டாத பக்குவத்திற்கு வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி ஆறவிட வேண்டும்.

உருளைகிழங்கு பட்டாணி மசாலா ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்

அரிசிமாவு சேர்த்து கொள்ளவும்:

அரிசிமாவு சேர்த்து கொள்ளவும்

அடுத்து ரவை ஆறியதும் அதில் 1/2 கப் அளவிற்கு அரிசி மாவு சேர்த்து நன்றாக பிசைய வேண்டும். இதை நன்றாக சப்பாத்தி மாவு பிசைவது போல பிசைய வேண்டும்.

உருளைக்கிழங்கை வேகவைக்க வேண்டும்:

உருளைக்கிழங்கை வேகவைக்க வேண்டும்

உருளைக்கிழங்கை வேகவைத்து அதன் தோலை நீக்கி கொள்ளவும். பின் அதை மாவு போல நன்றாக மசித்து கொள்ள வேண்டும்.

பின் அதில் பொடிப்பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து கொள்ள வேண்டும். பின் அதில் சிறிதளவு உப்பு, மிளகாய் தூள் 1/4 ஸ்பூன், மஞ்சள் தூள் சிறிதளவு, சாட் மசாலா – 1/4 ஸ்பூன் மற்றும் கொத்தமல்லி தழை சேர்த்து நன்றாக பிசைய வேண்டும்.

என்னது உருளைக்கிழங்கை வைத்து இப்படி கூட பண்ணலாமா..?

கடாயில் எண்ணெய் ஊற்றவும்:

கடாயில் எண்ணெய் ஊற்றவும்

பின் நாம் பிசைந்து வைத்துள்ள ரவையை 2 பாதியாக பிரித்து உருட்டி கொள்ள வேண்டும். பின் அதை சப்பாத்தி கட்டையில் வைத்து தேய்த்து கொள்ளவும். அடுத்து மேல் படத்தில் உள்ளது போல கட்டமாக வெட்டி கொள்ள வேண்டும்.

உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து

அடுத்து நாம் கட்டமாக வெட்டி வைத்துள்ள ஒரு பாதியில் நாம் செய்து வைத்துள்ள உருளைக்கிழங்கு மசாலாவை வைத்து அதன் மேல் இன்னொரு பாதியை வைக்கவும். அதாவது மேல் படத்தில் உள்ளது போல செய்து கொள்ளவும்.

எண்ணெய் ஊற்றி கொள்ளவும்

பின் அடுப்பில் கடாயை வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கொள்ளவும். எண்ணெய் சூடானதும் அதில் நாம் செய்து வைத்துள்ளதை போட்டு பொன்னிறமாக பொறித்து எடுக்க வேண்டும்.

அவ்வளவு தான் நண்பர்களே புதிய ஸ்நாக்ஸ் ரெடி..! நீங்களும் இதுபோல செய்து உங்கள் வீடியோள் இருப்பவர்களுக்கு கொடுத்து பாருங்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள்.

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal Kurippugal
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now