சௌ சௌ பொரியல் | Chow Chow Fry Recipe in Tamil
எப்போதுவும் காய்கறிங்களை வாங்கி அதனை வருப்பது, குழம்பு வைப்பது என்று மட்டுமே வீட்டில் செய்வீர்கள். ஒரே காய்கறிகளை மட்டுமே வறுத்து தினமும் குழந்தைகளுக்கு கொடுப்பது வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
ஆனால் நிறைய காய்கறிகளை பொரியல் செய்து கூட்டு செய்து அதனை சாதத்தில் பிசைந்து சாப்பிட கொடுப்பார்கள் அது சுவைக்க மிகவும் சூப்பராக இருக்கும். ஆகவே இன்று சூப்பரான பொரியலை பற்றி தான் பார்க்க போகிறோம். வாங்க அது என்ன என்பதை பற்றி பார்ப்போம்..!
Sow Sow Poriyal Seivathu Eppadi:
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
- சௌ சௌ – 1/2 கிலோ
- தேங்காய் துண்டு – பாதி
- பச்சை மிளகாய் – 6 நறுக்கியது.
- வெங்காயம் – 1 நறுக்கியது
- காய்ந்த மிளகாய் – 4
- உளுத்தம் பருப்பு – 4 ஸ்பூன்
- கடலை பருப்பு – 3 ஸ்பூன்
- சீரகம் – 3/4 டீஸ்பூன்
- கடுகு – 1/4 டீஸ்பூன்
- கறிவேப்பிலை – 1 கொத்து
- கொத்தமல்லி – 1 கொத்து
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் – பொரியலுக்கு தேவையான அளவு.
Sow Sow Poriyal Seivathu Eppadi:
ஸ்டேப்: 1
முதலில் தேங்காயை பாதி எடுத்து துருவிகொள்ளவும்.
இதையும் சாப்பிட்டு பாருங்கள் 👉👉 முருங்கை கீரை முட்டை பொரியல் செய்வது எப்படி?
ஸ்டேப்: 2
பின்பு பாதி அளவு தேங்காயை எடுத்துக் கொள்ளவும். பின்பு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளவும். அதில் பச்சை மிளகாய் – 7, சீரகம் – 3/4 டீஸ்பூன் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
ஸ்டேப்: 3
கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு 1/4 டீஸ்பூன் சேர்த்து பொரிந்து வரும் நிலையில் சீரகம் சிறிதளவு சேர்க்கவும் பின்பு உளுத்தம்பருப்பு 4 ஸ்பூன், கடலை பருப்பு – 3 ஸ்பூன் சேர்க்கவும்.
ஸ்டேப்: 4
ஓரளவு வறுபட்டவுடன் அதில் காய்ந்த மிளகாயை பாதியாக நறுக்கி போடவும். கடைசியாக கருவேப்பிலை போட்டு வறுபட்டவுடன், நறுக்கி வைத்த வெங்காயத்தை சேர்க்கவும் 2 நிமிடம் வறுக்கவும்.
இதையும் சாப்பிட்டு பாருங்கள் 👉👉👉 புடலங்காய் கூட்டு செய்வது எப்படி?
ஸ்டேப்: 5
பின்பு வெங்காயம் வதங்கிய உடன் நறுக்கி வைத்த சவ் சவ்வை அதில் சேர்த்து ஒரு முறை அனைத்தையும் கலந்து விடவும். கலந்த பின் கடைசியாக உப்பு சேர்த்து கலந்து விடவும்.
ஸ்டேப்: 6
சவ் சவ் வேகும் அளவிற்கு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி வேக விடவும். 3 அல்லது 4 நிமிடத்தில் வெந்து விடும்.
ஸ்டேப்: 7
இப்போது எடுத்து பார்த்தால் வெந்துவந்திருக்கும் பின்பு அதில் நாம் அரைத்து வைத்த தேங்காயை எடுத்து அதில் சேர்க்கவும். அதனை ஒரு முறை கலந்து விடவும் இப்போது தண்ணீர் வற்றும் வரை கலந்துவிடும்.
ஸ்டேப்: 8
கடைசியாக துருவி வைத்த தேங்காயை எடுத்து அதில் சேர்த்து கொத்தமல்லி இலையை சேர்த்து இறக்கிவிடவும்.
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal Kurippugal |