சுவையான மொறு மொறு சோயா கட்லெட் செய்ய தெரியுமா..?

Soya Cutlet Recipe in Tamil

ஹாய் நண்பர்களே..! மாலை நேரத்தில் அனைவருக்கும் ஸ்னாக்ஸ் சாப்பிடு வேண்டும் என்பது போல இருக்கும். அதனால் நீங்கள் ஒரே மாதிரியான ஸ்னாக்ஸை செய்து கொடுத்து இருப்பீர்கள். இனி நீங்கள் ஒரே மாதிரியான ரெசிபிகளை செய்து கொடுக்காமல் இன்றைய பதிவினை பார்த்து கொஞ்சம் புதுசா ட்ரை பண்ணுங்க. சுவையான மொறு மொறு சோயா கட்லெட் செய்வது எப்படி இன்றைய பதிவை படித்து தெரிந்துகொண்டு உங்கள் வீட்டில் செய்து கொடுத்து அசத்துங்கள்.  வாங்க நண்பர்களே பதிவை தொடர்ந்து படித்து கொள்வோம்.

இதையும் படியுங்கள்⇒ மாலை நேரத்தில் டீயுடன் இந்த ஸ்னாக்ஸ் செஞ்சி சாப்பிட்டு பாருங்க..!

சோயா கட்லெட் செய்ய தேவையான பொருட்கள்:

 1. சோயா- 1 கிலோ 
 2. பச்சை மிளகாய்- 2
 3. பெரிய வெங்காயம்- 1
 4. உருளைகிழங்கு- 1
 5. இஞ்சி- 1 துண்டு
 6. பூண்டு- 3 பல் 
 7. மஞ்சள் தூள்- 1/4 ஸ்பூன் 
 8. மல்லி தூள்- 1/2 ஸ்பூன் 
 9. மிளகாய் தூள்- 1 ஸ்பூன் 
 10. அரிசி மாவு- 2 ஸ்பூன் 
 11. மைதா மாவு- 4 ஸ்பூன் 
 12. சோம்பு- 1/2 ஸ்பூன் 
 13. பிரெட்- 2
 14. உப்பு- சிறிதளவு 
 15. எண்ணெய்- தேவையான அளவு
 16. கறிவேப்பிலை- சிறிதளவு 

கட்லெட் செய்வது எப்படி.?

 

ஸ்டேப்- 1

முதலில் நீங்கள் 1 கிலோ சோயா பீன்ஸை எடுத்துக்கொண்டு சூடு தண்ணீரில் ஊறவைத்து விடுங்கள். அதன் பிறகு பச்சை மிளகாய், வெங்காயம் மற்றும் இஞ்சி இந்த மூன்றையும் நறுக்கி தனியாக வைத்துக்கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 2

அதன் பிறகு 1 உருளைக்கிழங்கை எடுத்துக்கொண்டு தண்ணீர் ஊற்றி நன்றாக அடுப்பில் வேக வைத்து அதன் மேல் உள்ள தோலை நீக்கி விடுங்கள்.

ஸ்டேப்- 3

இப்போது ஒரு மிக்சி ஜாரை எடுத்துக்கொண்டு அதில் நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, சோம்பு மற்றும் பூண்டு இவை அனைத்தையும் போட்டு அரைத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 4

சோயா பீன்ஸ் நன்றாக ஊறிய பிறகு அதனை தண்ணீர் இல்லாமல் சுத்தமாக வடிகட்டி மிக்சி ஜாரில் இருக்கும் பொருட்களுடன் சேர்த்து நன்றாக அரைத்து தனியாக வைத்து விடுங்கள்.

ஸ்டேப்- 5

அடுத்ததாக அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரத்தை வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் காய்ந்த பிறகு வெங்காயம் மற்றும் எடுத்து வைத்துள்ள மசாலா அனைத்தையும் சேர்த்து சிறிது நேரம் வதக்கி கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 6

இப்போது நீங்கள் ஒரு சிறிய பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் தோல் நீக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கு, வதக்கிய மசாலா, அதனுடன் 2 ஸ்பூன் அரிசி மாவு, தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு கறிவேப்பிலை அனைத்தையும் சேர்த்து நன்றாக உங்களுடைய கைகளால் பிசைந்து வடை போல செய்து ஒரு தட்டில் வைத்து விடுங்கள்.

ஸ்டேப்- 7

கடைசியாக 2 பிரெட் துண்டினை மிக்சி ஜாரில் போட்டு நைசாக அரைத்து கொள்ளுங்கள். அதன் பிறகு அடுப்பை பற்றி வைத்து அதில் ஒரு சிறிய பாத்திரத்தில் அரைத்த பிரெட் மாவை சூடு படுத்தி கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 8

இப்போது ஒரு சிறிய கிண்ணத்தில் 4 ஸ்பூன் மைதா மாவு அதற்கு தேவையான அளவு தண்ணீரில் ஊற்றி கலந்து கொள்ளுங்கள். இப்போது தட்டி வைத்துள்ள கட்லெட் பீஸை அதில் நனைத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 9

கடைசியாக அடுப்பை பற்ற வைத்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய்  ஊற்றி காய விடுங்கள். எண்ணெய்  காய்ந்த பிறகு ரெடி செய்து வைத்துள்ள கட்லெட் பீஸை அதில் போட்டு பொன் நிறமாக வந்தவுடன் எடுத்து விடுங்கள்.

அவ்வளவு தான் கட்லெட் தயார். இப்படி ஒரு முறை கட்லெட் செய்து கொடுங்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

5 நிமிடத்தில் மொறுமொறுனு ஸ்னாக்ஸ் செஞ்சி பாருங்க..!

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்