கோடையை புத்துணர்ச்சியாக மாற்ற 7 வகையான பானங்கள்..! Summer drinks recipe in tamil

Summer drinks

கோடையை புத்துணர்ச்சியாக மாற்ற 7 வகையான பானங்கள்..! Summer drinks recipe in tamil

100 டிகிரிக்கும் மேலே கொளுத்தும் வெயிலைச் சமாளிக்க முடியாமல், ஆரோக்கியமானவர்களே தடுமாறும்போது, குழந்தைகளும் முதியவர்களும் எப்படி வெப்பத்தின் உக்கிரத்தைத் தாங்குவார்கள்? வெயிலின் கடுமை, குழந்தைகளையும் முதியவர்களையும் தாக்காத அளவுக்கு, அவர்களைப் பாதுகாக்க வேண்டும். அந்த வகையில் கோடையில் புத்துணர்ச்சி அளிக்கும் 7 வகையான பானங்கள் எப்படி தயார் செய்யலாம் வாங்க பார்ப்போம்.

சுவையான நான்கு வகை மில்க் ஷேக் செய்வது எப்படி?

முதலாவதாக ஜிஞ்சர் மோர் செய்வது எப்படி: 

ஜிஞ்சர் மோர் செய்வது எப்படி

தேவையான பொருட்கள்:

  1. மோர் – 500 மில்லி
  2. பச்சை மிளகாய் – 1
  3. இஞ்சி – சிறிய துண்டு
  4. கறிவேப்பிலை/ கொத்தமல்லி – சிறிதளவு
  5. பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை
  6. உப்பு – தேவையான அளவு

செய்முறை விளக்கம்:

  • ஜிஞ்சர் மோர் செய்வதற்கு முதலில் மிக்ஸி ஜாரில் இஞ்சி, கறிவேப்பிலை, பச்சை மிளகாயை நைஸாக அரைத்துக்கொள்ளவும்.
  • அதன் பிறகு மோருடன் அரைத்து வைத்துள்ள விழுது, தேவையான அளவு உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, அதனுடன் நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லியை சேர்க்கவும்.
  • விருப்பம் உள்ளவர்கள் இவற்றில் ஐஸ் கட்டிகளை சேர்த்துக்கொள்ளலாம். அவ்ளோதாங்க இந்த ஜிஞ்சர் மோர் ரெடி.

இரண்டாவதாக மாதுளை ஜூஸ்:

மாதுளை ஜூஸ்

தேவையான பொருட்கள்:

  1. மாதுளம் பழம் – 1
  2. சர்க்கரை – 100 கிராம்
  3. தேன் – 2 டீஸ்பூன்
  4. பால் – 1 கப்

செய்முறை விளக்கம்:

  • முதலில் மாதுளம் பழத்தின் தோல் பகுதியினை நன்றாக உரித்து அதனுள் இருக்கும் முத்துவினை எடுத்து மிக்ஸி ஜாரில் நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
  • நன்றாக அரைத்த பிறகு அதனை வடிகட்டியால் வடிகட்டி அதனுடன் தேன், சர்க்கரை சேர்த்து கலக்கவும்.
  • இவற்றை குடிப்பதற்கு முன்பு ஆற வைத்துள்ள பால் அல்லது ஐஸ் கட்டிகள் சேர்த்து குடிக்கலாம். (குறிப்பு: பால் பிடிக்காதவர்கள் சேர்த்துக்கொள்ளாமலும் இருக்கலாம்).

மூன்றாவதாக நெல்லிக்காய் ஜூஸ்: 

நெல்லிக்காய் ஜூஸ்

தேவையான பொருட்கள்:

  1. நெல்லிக்காய் – பெரியது (10)
  2. தேன் – 1 கப்
  3. இளநீர் – 1

செய்முறை விளக்கம்:

  • நெல்லிக்காயினை சீவி உள்ளே இருக்கும் கொட்டை பகுதியை நீக்கி விடவும். மிக்ஸியில் சிறிதளவு தண்ணீர் விட்டு நெல்லிக்காயினை அரைத்து வடிகட்டி மீண்டும் தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும்.
  • அதன்பிறகு தேன் சேர்க்கவும். தேன் சேர்த்து நன்றாக கலக்கவும். நெல்லிக்காய் ஜூஸினை அருந்துவதற்கு முன்பு அவற்றில் இளநீர் சேர்த்த பிறகு கலந்து குடிக்கவும்.

நான்காவதாக Fruit custard ஜூஸ் செய்வது எப்படி (summer drinks recipe in tamil):

custard recipe in tamil:-

Fruit custard recipe

custard recipe in tamil – தேவையான பொருட்கள்:

  1. பால் – 1/2 லிட்டர்
  2. custard powder – 2 ஸ்பூன்
  3. திராட்சை, ஆப்பிள், வாழைப்பழம், மாதுளை, மாம்பழம் ஆகியவற்றை சிறிதளவு கட் செய்து வைத்து கொள்ளுங்கள்.

Fruit custard recipe in tamil செய்முறை விளக்கம்:

அடுப்பில் ஒரு காடாய் வைத்து அவற்றில் 1/2 லிட்டர் பசும் பால் ஊற்றி நன்றாக காய்ச்சி கொள்ளவும்.

பால் நன்கு கொதித்ததும் இரண்டு ஸ்பூன் custard powder-ஐ சேர்த்து நன்றாக கலந்து கொதிக்க விடவும்.

பின் அடுப்பை அணைத்து பாலினை நன்றாக ஆறவிடவும்.

பால் நன்கு ஆறியதும் ஒரு பவுலில் சேர்த்து ஊற்றி நறுக்கி வைத்துள்ள பழங்களை இதனுடன் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.

இந்த கலவையை பிரிட்சியில் 2 மணி நேரம் அப்படியே வைத்திருக்க வேண்டும்.

பின் தங்கள் குழந்தைகளுக்கு இந்த Fruit custard-ஐ அன்புடன் பரிமாறவும்.

இது வெயில் காலங்களில் செய்து சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும்.

வீட்டுலயே மிகச்சுவையான ஐஸ்கிரீம் செய்யலாம் அதுவும் கிரீம் இல்லாமல்

 


ஐந்தாவதாக கிர்ணி பழம் ஜூஸ் (kirni juice recipe in tamil):-

kirni juice recipe

 செய்ய தேவையான பொருட்கள்

  1. கிர்ணி பழம் – பாதி
  2. சர்க்கரை – 2 அல்லது 3 ஸ்பூன்

summer drinks recipe in tamil:

செய்முறை:

Kirni juice recipe in tamil:- முதலில் கிர்ணி பழத்தின் தோலை சீவிகொள்ளவும்.

அதனை சிறு சிறு துண்டுகளாக வெட்டி, மிக்ஸ்யில் சர்க்கரை சேர்த்து நன்கு மைய அரைக்கவும்.

அவ்வளவுதான் சுவையான கிர்ணி பழ ஜூஸ் (kirni palam juice benefits in tamil) தயார்.

இதனை பரிமாறும் போது ஐஸ் துண்டுகள் சேர்த்தும் பரிமாறலாம்.

இதனுடன் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு, தேன் கூட சேர்த்துக்கொள்ளலாம்


ஆறாவதாக ரோஸ் மில்க் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

ரோஸ் மில்க் செய்ய (summer drinks recipe in tamil) 

rose milk recipe

தேவையான பொருட்கள்:

  1. காய்ச்சிய பால் – ஒரு கிளாஸ்
  2. பிங்க் புட் கலர் – 3/4 தேக்கரண்டி
  3. ரோஸ் எசன்ஸ் – 3/4 தேக்கரண்டி
  4. தண்ணீர் – 1/2 கப்
  5. சர்க்கரை – 2 அல்லது 3 ஸ்பூன்

ரோஸ் மில்க் செய்முறை:

Rose milk recipe in tamil/ ரோஸ் மில்க் செய்வது எப்படி:- ஒரு சுத்தமான பவுலை எடுத்துக்கொள்ளவும், அவற்றில் காய்ச்சிய பாலை தேவையான அளவு ஊற்றிக்கொள்ளவும்.

பின் அதனுடன் 3/4 தேக்கரண்டி பிங்க் புட் கலர் மற்றும் 3/4 தேக்கரண்டி ரோஸ் எசன்ஸ் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

பின் 2 அல்லது 3 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

அவ்வளவு தான் சுவையான ரோஸ் மில்க் தயார்.

இதனை பரிமாறும் போது ஐஸ் துண்டுகள் சேர்த்தும் பரிமாறலாம்.

வீட்டிலேயே பலூடா செய்வது எப்படி ??? How to make falooda in tamil..!

 


ஏழாவதாக ஸ்வீட் லஸ்ஸி செய்ய:

sweet lassi

தேவையான பொருட்கள்:

  1. தயிர் – 1/4 கப்
  2. நன்கு சுண்ட காய்ச்சிய பால் – ஒரு கிளாஸ்
  3. சர்க்கரை – 2 ஸ்பூன்
  4. ஏலக்காய் தூள் – சிறிதளவு
  5. தண்ணீர் – ஒரு கிளாஸ்
  6. எலுமிச்சை ஜூஸ் – 1/2 ஸ்பூன்

செய்முறை / summer drinks recipes in tamil:

ஒரு மிக்சி ஜாரில் 1/4 கப் தயிர், ஒரு கிளாஸ் பால், ஒரு கிளாஸ் தண்ணீர், சிறிதளவு ஏலக்காய் தூள், 1/2 ஸ்பூன் எலுமிச்சை ஜூஸ் மற்றும் இரண்டு ஸ்பூன் சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து நன்றாக அடித்து எடுத்து கொள்ளவும்.

சுவையான ஸ்வீட் லஸ்ஸி தயார். இதனை பரிமாறும் போது ஐஸ் துண்டுகள் சேர்த்தும் பரிமாறலாம்.

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> samayal kurippu