Suraikai Chutney in Tamil
பெரும்பாலான வீடுகளில் தினமும் காலை உணவு என்றால் அது இட்லி தோசையாகத்தான் இருக்கும். இதற்கு சைடிஷாக வெங்காய சட்னி, தக்காளி சட்னி, தேங்காய் சட்னி, கார சட்னி போன்ற சட்னிகளை மட்டுமே செய்வார்கள். இதனை தினமும் சாப்பிட்டு சில பேர் இட்லி தோசைகளையே வெறுத்து விடுவார்கள். நீங்கள் தினமும் ஒரே மாதிரியான சட்னியை செய்து கொடுக்காமல் வேறு விதமான சட்னியை செய்து கொடுக்கலாம். எனவே உங்களுக்காகவே இன்றைய பொதுநலம்.காம் சமையல் பதிவில் சுரைக்காய் சட்னி எப்படி செய்வது என்பதை கொடுத்துள்ளோம். இந்த சட்னியை ஒரு முறை செய்து கொடுத்தீர்கள் என்றால் உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஓகே வாருங்கள் சுரைக்காய் சட்னி எப்படி செய்வது என்பதை இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇https://bit.ly/3Bfc0Gl
Sorakkai Chutney Seivathu Eppadi:
சுரைக்காய் சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
- சுரைக்காய்- தேவையான அளவு
- எண்ணெய்- 2 ஸ்பூன்
- உளுத்தம்பருப்பு- 1 ஸ்பூன்
- கடலை பருப்பு-1 ஸ்பூன்
- மிளகு- 1 ஸ்பூன்
- சீரகம்- 1 ஸ்பூன்
- சின்ன வெங்காயம்- 10
- பூண்டு- 10 பல்லு
- தக்காளி- 1
- கறிவேப்பிலை- 2 கொத்து
- காய்ந்த மிளகாய்- 5
- உப்பு- தேவையான அளவு
புதினா சட்னி, கொத்தமல்லி சட்னி இந்த மாதிரி செய்து பாருங்க |
சுரைக்காய் சட்னி செய்யும் முறை:
ஸ்டேப்: 1
முதலில் சுரைக்காவை தோலை சீவி விட்டு நன்றாக கழுவி சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்: 2
பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் அதில் உளுத்தம்பருப்பு, சீரகம், மிளகு மற்றும் கடலை பருப்பு ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக வறுத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்: 3
இதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளி மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளுங்கள்.
ஸ்டேப்: 4
இவை அனைத்தும் நன்றாக வதங்கியதும், அதனுடன் நறுக்கி வைத்த சுரைக்காய் சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி கொள்ளுங்கள்.
கோலார் சட்னி.. இந்த சட்னிக்கி வெங்காயம் வேண்டாம்.. தேங்காய் வேண்டாம் 5 நிமிடத்தில் தயார் செய்திடலாம் |
ஸ்டேப்: 5
இவை நன்றாக வதங்கியதும், சிறிது நேரம் ஆறவைத்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து எடுத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்: 6
பிறகு ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் அதில் 1 ஸ்பூன் கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, அரைத்து வைத்த சட்னியில் ஊற்றினால் சுவையான சுரைக்காய் சட்னி தயார்.!
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal Kurippugal |