இந்த தீபாவளிக்கு சுழியத்தை ஒட்டாமல் உடையாமல் இப்படி செய்து பாருங்கள்..!

Advertisement

சுழியம் செய்வது எப்படி?

ஹாய் நண்பர்களே..! இன்றைய சமையல் குறிப்பு பதிவில் சுழியத்தை ஒட்டாமல், உடையாமல் செய்வது எப்படி என்று பார்க்க போகிறோம். தீபாவளி என்றால் நிறைய வகையான பலகாரங்கள் செய்வது ஒரு பழக்கம். அந்த பலகாரத்தில் சுழியமும் ஒன்று. அந்த சுழியத்தை பூரணம் வெளியே வராமல் உடைந்து போகாமல் செய்வதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும். நீங்கள் இனி இந்த மாதிரி கஷ்டப்படாமல் சுழியத்தை ஈஸியாக செய்வது எப்படி என்று இந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்⇒ சுவையான குலாப் ஜாமூன் அல்வா இப்படி ஒருமுறை செய்து பாருங்கள்…!

சுழியம் செய்ய தேவையான பொருட்கள்:

  • கடலைப்பருப்பு- 100 கிராம் 
  • வெல்லம்- 100 கிராம் 
  • மைதா மாவு- 1/2 கப் 
  • தேங்காய் துருவியது- 3 தேக்கரண்டி 
  • ஏலக்காய்- 1/4 தேக்கரண்டி 
  • சுக்கு- 1/4 தேக்கரண்டி
  • நெய்- 2 தேக்கரண்டி 
  • உப்பு- சிறிதளவு 
  • எண்ணெய்- 1/4 லிட்டர் 

சுழியம் செய்முறை விளக்கம்:

சுசியம் செய்வது எப்படி

ஸ்டேப்- 1

முதலில் சுழியம் செய்வதற்கு 1/2 மணி நேரம் முன்பு கடலைபருப்பை தண்ணீரில் ஊறவைத்து விடுங்கள். 1/2 மணி நேரம் தண்ணீரில் நன்றாக ஊறிய பிறகு அதனை சுத்தமான தண்ணீரில் அலசி விடுங்கள்.

ஸ்டேப்- 2

அடுத்ததாக அந்த கடலைப்பருப்பை குக்கரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 4 விசில் வரும் வரை அடுப்பில் வேக வைத்து அதனை தண்ணீர் இல்லாமல் வடிகட்டி  மிக்சி ஜாரில் போட்டு 1 நிமிடம் நைசாக அரைத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 3

அடுத்து நீங்கள் சுழியதிற்கு தேவையான பூரணத்தை தயார் செய்ய வேண்டும். அதற்கு முதலில் அடுப்பில்  ஒரு பாத்திரத்தை வைத்து அதில் வெல்லத்தை நன்றாக நுணுக்கி போட்டு விடுங்கள். அந்த வெல்லத்தில் 1/4 டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றிவிடுங்கள்.

ஸ்டேப்- 4

இப்போது வெல்லம் கரைந்த பிறகு எடுத்து வைத்துள்ள சுக்கு தூள், ஏலக்காய் தூள், துருவிய தேங்காய் மற்றும் நெய் இவை அனைத்தையும் போட்டு லேசாக கிண்டி விடுங்கள். அதனுடன் அரைத்து வைத்துள்ள கடலை பருப்பையும் போட்டு 5 லிருந்து 6 நிமிடம் வரை கிண்டி நல்ல பதத்திற்கு வந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கி விடுங்கள்.

ஸ்டேப்- 5

நீங்கள் தயார் செய்த இந்த பூரணத்தை சிறிய சிறிய உருண்டையாக பிடித்து தனியாக வைத்து விடுங்கள். அதன் பிறகு நீங்கள் சுழியத்தை மாவில் போட்டு எடுப்பதற்கு தனியாக மாவு தயார் செய்ய வேண்டும்.

ஸ்டேப்- 6

ஒரு பாத்திரத்தில் மைதா மாவை கொட்டி அதில் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ளுங்கள். அதன் பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய விடுங்கள்.

எண்ணெய் காய்ந்த பிறகு உருண்டை பிடித்து வைத்துள்ள பூரணத்தை மைதா மாவில் போட்டு நனைத்து அதனை எண்ணெய் போட்டு எடுத்தால் சுழியம் ஓட்டாமல், உடையாமல் சுவையாக சாப்பிடலாம்.

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal Kurippugal
Advertisement