தயிர் லஸ்ஸி செய்வது எப்படி | Curd Lassi Recipe in Tamil
நண்பர்களே வணக்கம்..! கோடை காலம் என்றால் முதலில் ஞாபகம் வருவது ஜூஸ் தான். அதுவும் உடலுக்கு சத்தனா ஜூஸ் சாப்பிட வேண்டும் என்று யோசிப்பீர்கள். ஜூஸ் கடை சென்றால் அம்மா விரும்பி சாப்பிடக்கூடிய பாரம்பரிய ஜூஸ் தான் தயிர். அக்னி நட்சத்திரம் என்றால் வீட்டை விட்டு வெளியே செல்ல அச்சம் கொள்வீர்கள் அதற்குதான் வீட்டிலே இருக்கும் தயிரை வைத்து கோடை வெயிலை தாங்கும் உடலுக்கு சத்தான லஸ்ஸி செய்வது எப்படி என்பதை பார்க்க போகிறோம்.
கோடை காலத்தில் குழந்தைக்கு கொடுக்க வேண்டிய ஜூஸ் |
தேவையான பொருட்கள்:
- தயிர் – 2 கப்
- ஐஸ் கட்டி – 2
- சீனி -1/4 கப்
- எலுமிச்சை சாறு- சிறிதளவு
செய்முறை:
டிப்ஸ்:
- 2 கப் கெட்டி தயிரை எடுத்து மத்தியில் வேகமாக அடிக்கவும். பின் அதில் ஐஸ் கட்டி – 2, சீனி -1/4 கப், சிறிதளவு உப்பு சேர்த்து அரைக்கவும், கடைசியாக சின்ன கிண்ணத்தில் அரைத்த லஸ்ஸியை உற்றி எலுமிச்சை சாறு சிறிதளவு சேர்த்து குடிக்கவும். தினமும் குடித்து வந்தால் கோடை கால வெயிலை தாங்கமுடியும்.
மாம்பழம் லஸ்ஸி செய்வது எப்படி | Mango Lassi Recipe in Tamil:
தேவையான பொருட்கள்:
- மாம்பழம் – 1
- தயிர் – 2 கப்
- ஏலக்காய் தூள் 1/2 சிட்டிகை
- சீனி – 1/4 கப்
எலுமிச்சை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் |
செய்முறை:
டிப்ஸ்:
- நறுக்கிய மாம்பழம் – 1 எடுத்துகொள்ளவும். அதனை மிக்ஸியில் போட்டு அரைக்கவும். பின் அதனுடன் தயிர் -2 கப் சேர்த்து அதனையும் அரைக்கவும்.
- சிறிது நேரம் அரைத்த பிறகு அதில் ஏலக்காய் தூள் சேர்த்து அதனுடன் சீனி, சிறிதளவு உப்பு சேர்த்து அரைக்கவும். கடைசியாக சின்ன கிண்ணத்தில் உற்றி அதன் மீது குங்கும பூ சேர்த்து குடிக்கவும்.
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |