குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஸ்வீட் செய்வது எப்படி..?
ஹலோ இனிமையான நண்பர்களே… இன்றைய பதிவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு ஸ்வீட் செய்வது எப்படி என்பதை பற்றி தான் பார்க்கப்போகிறோம். ஸ்வீட் என்றாலே அனைவருக்கும் பிடித்த ஒரு விஷயம். நம் வாழ்வில் எந்த ஒரு நல்ல விஷயம் நடந்தாலும் இனிப்பு சாப்பிடுவது, இனிப்பு கொடுப்பது வழக்கம். நாம் எவ்வளவு தான் கடைகளில் கிடைக்கும் இனிப்புகளை வாங்கி சாப்பிட்டாலும் அதில் ஆரோக்கியத்தை பாதிக்கும் சில கெமிக்கல்கள் கலந்திருப்பார்கள்.
இனிப்பு வகைகளை நீங்கள் வீட்டிலே செய்து அசத்தலாம். அதுபோல உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு எதாவது ஸ்வீட் செய்து கொடுக்கலாம் என்று நினைப்பீர்கள். அந்த வகையில் இன்று நம் பதிவில் அனைவருக்கும் மிகவும் பிடித்த பிஸ்கட் பேடா ஸ்வீட் அடுப்பு இல்லாமல் செய்வது எப்படி என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க…
இதையும் கிளிக் செய்து பாருங்கள் ⇒ கோதுமை மில்க் கேக் செய்வது எப்படி
வீட்டிலே சூப்பரான ஸ்வீட் செய்வது எப்படி..?
நம் வீட்டிலிருக்கும் பொருட்களை வைத்தே நம் குழந்தைகளுக்கு அருமையான ஸ்வீட் செய்து கொடுக்கலாம். நீங்கள் வீட்டிலே செய்து கொடுக்கும் இந்த ஸ்வீட் ஆரோக்கியமானதாக இருக்கும். இந்த ஸ்வீட்டை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்… வாங்க நண்பர்களே இந்த பிஸ்கட் பேடா ஸ்வீட் செய்வது எப்படி என்பதை பற்றி பார்ப்போம்.
ஸ்வீட் செய்ய தேவையான பொருட்கள்:
- OREO கிரீம் பிஸ்கட் – 2 பாக்கெட்
- பால் பவுடர் – 2 டேபிள் ஸ்பூன்
- பால் – தேவையான அளவு
- முந்திரி – 10
- திராட்சை –10
- ஏலக்காய் தூள் – தேவையான அளவு
பிஸ்கட் பேடா ஸ்வீட் செய்வது எப்படி..?
ஸ்டெப்: 1
முதலில் ஒரு கிண்ணத்தில் எடுத்து கொள்ளவும். அதில் கிரீம் பிஸ்கட்களை சிறிய துண்டுகளாக உடைத்து வைத்து கொள்ளுங்கள். பின்னர் அதை மிக்ஸி-ல் போட்டு நன்கு அரைத்து எடுத்து கொள்ளுங்கள்.
ஸ்டெப்: 2
பின்னர் அரைத்த பிஸ்கட்களை ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்து கொள்ளுங்கள். அதனுடன் பால் பவுடர் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
ஸ்டெப்: 3
அதனுடன் எடுத்து வைத்துள்ள முந்திரி மற்றும் திராட்சைகளை போட வேண்டும்.
ஸ்டெப்: 4
பின் அதனுடன் சிறிதளவு ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். பிறகு அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் பால் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
சேமியா ஜாமுன் செய்வது எப்படி |
ஸ்டெப்: 5
நன்றாக பிசைந்த பின்னர் அதை சிறிய சிறிய துண்டுகளாக உருட்டி கொள்ளவும். சமமான அளவில் உருட்ட வேண்டும்.
அவ்வளவு தாங்க குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த பிஸ்கட் பேடா ஸ்வீட் தயார்..!
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal Kurippugal |