கோதுமை மாவில் பத்தே நிமிடத்தில் சுவையான ஸ்வீட் செய்முறை..! Sweet Recipes in Tamil ..! Wheat Flour Snacks Recipes..!

Advertisement

கோதுமை மாவில் பத்தே நிமிடத்தில் சுவையான ஸ்வீட் செய்முறை..! Sweet Recipes in Tamil ..! Wheat Flour Snacks Recipes..!

ஹாய் பிரண்ட்ஸ்..! இன்று வித்தியாசமான அனைவரும் சாப்பிட கூடிய கோதுமை மாவில் பத்தே நிமிடத்தில் ஸ்வீட் எப்படி செய்யலாம்னு பார்க்கலாம். இந்த இனிப்பு (Sweet Recipes in Tamil) பலகாரத்தை எல்லாரும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த பதிவை பார்த்து வீட்டில் உள்ள அனைவருக்கும் செய்து கொடுத்து சாப்பிடுங்கள்.

new10 நாள் ஆனாலும் கெடாத மொறு மொறு சிப்ஸ்..! Evening Snacks..! Rice Flour Recipes..!

 

சரி வாங்க இந்த சுவையான கோதுமை மாவு ஸ்வீட்(Sweet Recipes in Tamil) செய்வது எப்படி என்று இப்போது நாம் தெரிந்து கொள்வோம்.

கோதுமை மாவு ஸ்வீட் (Wheat Flour Snacks Recipes) – தேவையான பொருட்கள்:

  1. உருண்டை வெல்லம் – 1/3 கப் 
  2. தண்ணீர் – 1/3 கப் 
  3. நெய் – 1 ஸ்பூன் 
  4.  வாழைப்பழம் – 3 (நறுக்கியது)
  5. தேங்காய் துருவல் – 1/2 கப் 
  6. கோதுமை மாவு – 1/3 கப் 
  7. ஏலக்காய் தூள் – 1/2 ஸ்பூன் 

கோதுமை மாவு ஸ்வீட் (Wheat Flour Cake) செய்முறை ஸ்டேப் 1:

Sweet Recipes in Tamil step: 1 முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தில் உருண்டை வெல்லம்  1/3 கப்  அளவிற்கு சேர்த்துக்கொள்ளவும். பின் தண்ணீர்  1/3 கப் ஊற்றி நன்றாக கரைய வைக்கவும். வெள்ளம் நன்றாக கரைந்த பின் அடுப்பை நிறுத்திக்கொள்ளலாம். பின் வெல்லம் நீரை தனியாக வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.

கோதுமை மாவு ஸ்வீட் (Wheat Flour Recipe) செய்முறை ஸ்டேப் 2:

Sweet Recipes in Tamil step: 2 அடுத்து வாணலியில் நெய் 1 ஸ்பூன் சேர்த்து கொள்ளவும். இதனுடன் 3 நறுக்கிய வாழைப்பழத்தை நெய்யில் சேர்த்து வதக்கிக்கொள்ளவும். அதன்பிறகு தேங்காய் துருவலை சேர்த்து நன்றாக வதக்கவும். மாநிறம் வந்தவுடன் அடுப்பை நிறுத்தி கொள்ளலாம். இப்போ எடுத்து வைத்த வெல்ல தண்ணீரில் செய்து வைத்துள்ள தேங்காய் துருவல் கலவையை சேர்க்கவும்.

கோதுமை மாவு ஸ்வீட் (Wheat Flour Cake) செய்முறை ஸ்டேப் 3:

Sweet Recipes in Tamil step: 3 அடுத்ததாக 1/3 கப் அளவிற்கு கோதுமை மாவை சேர்த்துக்கொள்ளவும். கோதுமை மாவை சேர்த்த பின் நன்றாக மிக்ஸ் பண்ணிக்கவும். அதனுடன் 1/2 ஸ்பூன் ஏலக்காய் தூளை சேர்க்கவும். உங்களுக்கு தேவைப்பட்டால் இதனுடன் நட்ஸ் கூட சேர்த்துக்கொள்ளலாம். அவ்ளோதான் இந்த மாவு ரெடிங்க.

கோதுமை மாவு ஸ்வீட் (Wheat Flour Recipe) செய்முறை ஸ்டேப் 4:

Sweet Recipes in Tamil step: 4 இப்பொழுது தனியாக கேக் செய்ற அளவுக்கு ஒரு பாத்திரம் எடுத்துக்கொள்ளவும். அந்த பேனில் (pan) மாவு ஒட்டாமல் வருவதற்கு நெய் கொஞ்சம் தடவி கொள்ளலாம். நெய் தடவிய பிறகு ரெடி பண்ண மாவை இந்த பாத்திரத்தில் கொட்டவும். பின், ஒரு இட்லீ பாத்திரத்தில் 1 டம்ளர் அளவுக்கு தண்ணீர் எடுத்துக்கொள்ளவும்.

கோதுமை மாவு ஸ்வீட் (Wheat Flour Cake) செய்முறை ஸ்டேப் 5:

Sweet Recipes in Tamil step: 5 அந்த இட்லி பாத்திரத்தில் உள்ளே ஒரு வட்ட வடிவில் ஸ்டாண்ட்(stand) வைத்து கொள்ளவும். அந்த ஸ்டாண்ட் மேல் ஒரு பாத்திரத்தில் கொட்டிய மாவை இதன் மேல் வைக்கவும். அடுத்து மூடி போட்டு மூடிவிட்டு 10 நிமிடம் நன்றாக வேகவைக்க வேண்டும். நன்றாக வெந்த பிறகு எடுக்க வேண்டும்.

கோதுமை மாவு ஸ்வீட் (Wheat Flour Recipe) செய்முறை ஸ்டேப் 6:

Sweet Recipes in Tamil step: 6 அவ்ளோதாங்க இந்த கோதுமை மாவு கேக் ரெடிங்க. இந்த வட்ட வடிவில் உள்ள கேக்கை ஒரு தனி தட்டில் கொட்டி உங்களுக்கு புடித்த மாதிரி கட் பண்ணிக்கொள்ளலாம். இந்த கேக் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ரொம்பவே புடிக்கும். மறக்காம வீட்ல ட்ரை பண்ணி பாருங்க ஃப்ரண்ட்ஸ்.




Double Decker Kalakand Sweet Recipes in Tamil – டபுள் டெக்கர் கலாகண்ட் செய்முறை..!

ஹாய் பிரண்ட்ஸ்… இன்று நாம் முற்றிலும் வித்தியாசமான குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய, மிகவும் சுவையான டபுள் டெக்கர் கலாகண்ட் செய்வது எப்படி என்று இப்போது நாம் பார்க்கலாம். இது ஒரு ஸ்விட் வகை ரெசிபி (Sweet Recipes in Tamil), இந்த டபுள் டெக்கர் கலாகண்ட் செய்வதற்கு மிகவும் எளிமையாக இருக்கும். அதிக நேரம் ஆகாது.

பலவகையான பன்னீர் ரெசிபி செய்முறை தெரிஞ்சிக்கலாம் வாங்க..!

 

சரி வாங்க இந்த சுவையான டபுள் டெக்கர் கலாகண்ட் (Sweet Recipes in Tamil) செய்வது எப்படி என்று இப்போது நாம் தெரிந்து கொள்வோம்.

டபுள் டெக்கர் கலாகண்ட் (Double Decker Kalakand Sweet Recipes Tamil) தேவையான பொருட்கள்:-

  1. பால் – 1 லிட்டர்
  2. பன்னீர் – 200 கிராம்
  3. இனிப்பு இல்லாத கோவா – 200 கிராம்
  4. ஏலக்காய் தூள் – 1 தேக்கரண்டி
  5. சர்க்கரை – ஒரு கப்
  6. நெய்
  7. சூடான பால் – ஒரு மேசைக்கரண்டி
  8. கொக்கோ தூள் – 2 தேக்கரண்டி
  9. பிஸ்தா – பொடிதாக நறுக்கியது சிறிதளவு
காளான் 65 செய்வது எப்படி..? செய்முறை விளக்கம்..!

Double Decker Kalakand Sweet Recipes in Tamil – டபுள் டெக்கர் கலாகண்ட் செய்முறை ஸ்டேப்: 1

அடுப்பில் ஒரு கடாய் வைத்து ஒரு லிட்டர் பாலை ஊற்றி நன்றாக காய்ச்ச வேண்டும். பால் நன்கு கொதித்து சுண்டியதும். துருவி வைத்துள்ள பன்னீரை இந்த பாலுடன் சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும்.

பன்னீர் சேர்த்த பிறகு இதனுடன இனிப்பில்லாத கோவாவை சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும்.

பன்னீரும், கோவாவும் பாலில் நன்றாக மிக்ஸ் ஆனதும், அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும். கலவையானது நன்கு கெட்டி பதத்திற்கு வரும் வரை அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கிளறிவிட வேண்டும்.

கலவை ஓரளவு கெட்டியானதும் ஒரு தேக்கரண்டி ஏலக்காய் தூள் சேர்த்து கிளறிவிட வேண்டும்.

Double Decker Kalakand Sweet Recipes in Tamil – டபுள் டெக்கர் கலாகண்ட் செய்முறை ஸ்டேப்: 2

பின்பு ஒரு கப் சர்க்கரை சேர்த்து கலவையை கிளறிவிட வேண்டும். சர்க்கரை சேர்த்தவுடன் கலவையானது கொஞ்சம் இளகும் பயப்பட வேண்டாம். அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கலவை கெட்டியாகும் வரை கிளறிக்கொண்டே இருக்கவும். இந்த கலவை கெட்டியானதும் அடுப்பில் இருந்து இறக்கி, கலவையை சரிபாதியாக பிரித்து கொள்ளவும்.

இப்பொழு ஒரு கேக் டின் அல்லது சதுரமான ஒரு டப்பாவை எடுத்துக்கொள்ளவும் அவற்றில் நெய் தடவி செய்து வைத்துள்ள டபுள் டெக்கர் கலாகண்ட் கலவையின் ஒரு பாதியை எடுத்து இந்த கேக் டின்னில் சேர்த்து சமன் படுத்த வேண்டும்.

Double Decker Kalakand Sweet Recipes in Tamil – டபுள் டெக்கர் கலாகண்ட் செய்முறை ஸ்டேப்: 3

அடுத்ததாக ஒரு பாத்திரத்தில் காய்ச்சிய பால் ஒரு மேசைக்கரண்டி எடுத்துக்கொண்டு, அதனுடன் இரண்டு ஸ்பூன் கொக்கோ பவுடர் சேர்த்து நன்றாக கரைத்து கொள்ளவும். இந்த கலவையை மீதியுள்ள டபுள் டெக்கர் கலாகண்ட் கலவையுடன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

இந்த கலவையையும் அதே கேக் டின்னில் வைத்துள்ள கலவையின் மேல் வைத்து சமம் படுத்த வேண்டும். சமன் படுத்திய பிறகு பொடிதாக நறுக்கி வைத்துள்ள பிஸ்தாவை இந்த கலையின் மேல் தூவிவிட்டு ஒரு சிறிய ஸ்பூனை கொண்டு அழுத்திவிடவும். இவ்வாறு செய்வதினால் பிஸ்தா உதிராமல் இருக்கும்.

பெங்களூர் ஸ்பெசல் சிக்கன் தம் பிரியாணி செய்வது எப்படி ..!

Double Decker Kalakand Sweet Recipes in Tamil – டபுள் டெக்கர் கலாகண்ட் செய்முறை ஸ்டேப்: 4

செய்து வைத்துள்ள இந்த கலாகண்ட் ரெசிபி நன்கு ஆறும்வரை அதாவது 1 முதல் 2 மணி நேரம் வரை கேக் டின்னில் வாய்த்திருக்க வேண்டும். அப்போதுதான் கலாகண்ட் ரெசிபி நன்கு செட்டாகும்.. தேவையெனில் 1 மணி நேரம் பிரிட்ஜில் குளிர வைக்கலாம்.

ஒரு மணிநேரம் கழித்து தங்களுக்கு எவ்வளவு சயிஸ் வேண்டுமோ, அந்த அளவிற்கு கட் செய்து கொள்ளவும் அவ்வளவு தான் சுவையான டபுள் டெக்கர் கலாகண்ட் ரெசிபி தயார்.

கண்டிப்பாக தங்கள் வீட்டில் செய்து பாருங்கள் மிகவும் சுவையாக இருக்கும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு சிறந்த ஸ்விட் ரெசிபி (Sweet Recipes in Tamil) இதுவே.

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சுவை சுவையான சமையல் குறிப்புகள்!!!
Advertisement