தர்பூசணி தோலில் சட்னி
வணக்கம் பொதுநலம்.காம் நேயர்களே..! இன்றைய பதிவில் நாம் பார்க்கப்போகும் ரெசிபி என்னவென்றால் தர்பூசணி தோலில் சட்னி செய்வது எப்படி..! என்பதை பற்றித்தான் பார்க்கப்போகிறோம். நாம் அனைவரும் இதுவரை இட்லி, தோசைக்கு தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, பூண்டு சட்னி என்று பலவிதமான சட்னி அரைத்து சாப்பிட்டிருப்போம். ஆனால், இதுபோல் மிகவும் எளிமையான மற்றும் மிகவும் சுவையான ஒரு சட்னி அரைத்து சாப்பிட்டிருக்க மாட்டோம். அதுதான் நம்மளுடைய தர்பூசணி தோல் சட்னி. நாம் அனைவரும் இதுவரை தர்பூசணி பழத்தில் உள்ள சதைப்பகுதியை சாப்பிட்டுவிட்டு அதனுடைய தோலை தூக்கியெறிந்து இருப்போம் ஆனால் இந்த பதிவை முழுதாக படித்தால் இனிமேல் அப்படி செய்யமாட்டீர்கள்.
இதையும் பாருங்கள் => தர்பூசணி தோலில் அல்வா செய்வது எப்படி
தேவையான பொருட்கள்:
முதலில் தர்பூசணி தோல் சட்னி செய்வதற்கு தேவையான பொருட்களை பார்க்கலாம்.
- தர்பூசணி தோல் – 2 சிறிய துண்டுகள்
- தேங்காய் எண்ணெய் – 1 1/2 டேபிள்ஸ்பூன்
- கடுகு – 1/4 டீஸ்பூன்
- சீரகம் – 1/4 டீஸ்பூன்
- உளுத்தம் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
- கடலைப்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்
- கருவேப்பிலை – தேவையான அளவு
- காய்ந்த மிளகாய் – 5
- பூண்டு – 2 பற்கள்
- இஞ்சி – சிறிய துண்டு
- தக்காளி – 2
- புளி – சுண்டைக்காய் அளவு
- நல்ல எண்ணெய் – 1/4 டீஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
செய்முறை :
ஸ்டேப் – 1
முதலில் நாம் எடுத்துவைத்திருக்கும் 2 சிறிய துண்டுகள் தர்பூசணி தோலை நன்கு தண்ணிர் ஊற்றி கழுவி சுத்தம் செய்துவிட்டு அதனுடை மேற்பகுதியில் உள்ள தடிமனான பச்சைநிற தோலை செதுக்கி எடுத்துவிட்டு அதனை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
ஸ்டேப் – 2
பின்பு அடுப்பை பற்றவைத்து அதில் ஒரு காடாயை வைத்து அதில் நாம் எடுத்துவைத்திருக்கும் 1 1/2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய்யை சேர்த்து அதில் 1/4 டீஸ்பூன் கடுகு சேர்த்து அது நன்கு பொரிந்தவுடன் ,அதனுடன் 1/4 டீஸ்பூன் சீரகம், 2 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு, 1 டேபிள் ஸ்பூன் கடலைப்பருப்பு சேர்த்து இவையெல்லாம் நன்கு பொன்னிறமாக வறுபடும் வரை வறுத்துக்கொள்ளவும்.
ஸ்டேப் – 3
பிறகு அதனுடன் தேவையான அளவு கருவேப்பிலை, 5 காய்ந்த மிளகாய் சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளவும் பின்பு இதனுடன் நாம் முன்பே நறுக்கி வைத்திருந்த தர்பூசணி தோலை சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளவும்.
அடுத்து நாம் எடுத்துவைத்திருத்த 2 பற்கள் பூண்டு, சிறிய துண்டு இஞ்சி இவற்றையும் சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.
ஸ்டேப் – 4
இவை அனைத்தும் வதங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் நாம் எடுத்துவைத்திருத்த 2 தக்காளியை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி இதனுடன் சேர்த்து நன்கு வதக்குங்கள்.
பின்னர் அதில் தேவையான அளவு உப்பை சேர்த்துக் கொள்ளவும் அதனுடனே ஒரு சுண்டைக்காய் அளவு புளியை சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 5
இவை அனைத்தும் நன்கு வதங்கிய பிறகு அதனுடன் 1/4 டீஸ்பூன் நல்ல எண்ணெய்யை சேர்த்து இரண்டு, மூன்று நிமிடத்திற்கு நன்கு வதங்கவிடவும். பிறகு அதனை அடுப்பிலிருந்து இறக்கி 5 நிமிடத்திற்கு சூடு ஆற விடவும் பின்பு அதனை ஒரு மிக்சி ஜாரில் போட்டு நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
அவ்வளவு தான் நம்மளுடைய மிகவும் சுவையான தர்பூசணி தோல் சட்னி ரெடியாகிவிட்டது வாங்க சுவைக்கலாம்..! நீங்களும் இந்த தர்பூசணி தோல் சட்னியை செய்து சாப்பிட்டு பாருங்கள்.
இதையும் பாருங்கள் => வெங்காயத்தில் பாயாசம் செய்வது எப்படி
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள்!!! |