நாக்கை தாளம் போட வைக்கும் தயிர் சேமியா – How to Make

Advertisement

நாக்கை தாளம் போட வைக்கும் தயிர் சேமியா (thayir semiya)

தயிர் பொதுவாக குளிர்ச்சி தன்மையுடையது. தயிரை தினமும் நாம் உணவில் அதிகளவு எடுத்து கொண்டால் மிகவும் நல்லது. இந்த தயிரை நாம் சாதத்தில் அதிகளவு சேர்த்துக்கொள்வோம், இல்லையென்றால் லேசியாக குடிப்போம் அல்லவா இப்போது தயிரை வைத்து சுவையான, ஆரோக்கியமான குறிப்பாக வித்தியாசமான தயிர் சேமியா (thayir semiya) எப்படி செய்வது என்று பார்ப்போமா..!

தேவையான பொருட்கள்:

  1. சேமியா – 2 கப்
  2. தயிர் – 3 கப்
  3. தண்ணீர் – 1 கப்
  4. கடுகு – 1/4 டீஸ்பூன்
  5. கறிவேப்பிலை – சிறிது
  6. உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
  7. வர மிளகாய் – 3
  8. பச்சை மிளகாய் – 1
  9. பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை
  10. எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
  11. முந்திரி பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
  12. தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன் (துருவியது)
  13. சர்க்கரை – 1 சிட்டிகை
  14. உப்பு – தேவையான அளவு

செய்முறை:

முதலில் பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்.

பின்பு அவற்றில் சிறிதளவு உப்பு மற்றும் சிறிதளவு எண்ணெய் சேர்த்து ஒரு முறை கொதிக்க வைக்கவும்.

பிறகு அவற்றில் சேமியாவை சேர்த்து வேகவைக்கவும்.

சேமியா வேந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி,அவற்றில் இருக்கும் தண்ணீரை வடிகட்டி விடவும்.

பின் சேமியாவை ஒரு முறை குளிர்ந்த நீரால் அலசி தண்ணீரை வடிகட்டி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, வர மிளகாய், பெருங்காயத்தூள் மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.

பின்பு தயிரை சேர்க்க வேண்டும்.

பின்னர் மிக்சியில் முந்திரி, பச்சை மிளகாய் மற்றும் தேங்காவை சேர்த்து அரைத்து கொள்ளவும். இந்த அரைத்த கலவையையும் இந்த தயிரில் சேர்த்துகொள்ள வேண்டும்.

இறுதியாக வேகவைத்துள்ள சேமியாவையை இந்த தயிரில் சேர்த்து நன்றாக கிளறி விடவும்.

அவ்வளவுதான் சுவையான நாக்கை தாளம் போட வைக்கும் சுவையான தயிர் சேமியா (thayir semiya) தயார்.

இவற்றை அனைவருக்கும் அன்புடன் பரிமாறவும்.

சுவையான ரவா ஜாமுன் செய்முறை..!

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவல்களுக்கு பொதுநலம்.com யை தொடர்ந்து பாருங்கள்.

Advertisement