தேங்காய் பாறை போடுவது எப்படி.?
வணக்கம் நண்பர்களே..! இந்த தீபாவளிக்கு என்ன பலகாரம் செய்வது என்று யோசித்து கொண்டிருப்பீர்கள்.! சில நபர்கள் என்னென்ன பலகாரம் செய்வது என்று லிஸ்ட் போட்டு வைத்திருப்பார்கள். அந்த லிஸ்ட்டில் தேங்காய் பாறை கண்டிப்பாக இருக்கும். ஆனால் இந்த தேங்காய் பாறை எல்லாருமே செய்வார்கள். அது தேங்காய் பாறையாக வந்திருக்காது. தூள் தூளாகவும், பீஸ் எடுத்தவுடன் உடைந்து போகும் இந்த மாதிரியான தேங்காய் பாறை தான் செய்வார்கள். நீங்கள் தேங்காய் பாறை செய்தால் இந்த பதிவை படித்து செய்யுங்கள். சூப்பரான தேங்காய் பாறை செய்யலாம்.
இதையும் படியுங்கள் ⇒ தீபாவளி ஸ்பெஷல் இஞ்சிக்கொத்து செய்வது எப்படி?
தேங்காய் பாறை செய்ய தேவையான பொருட்கள்:
- தேங்காய்- 2 கப்
- நெய்- சிறிதளவு
- சீனி – 1 1/2 கப்
- பால் – 3 தேக்கரண்டி
- முந்திரி –10
தேங்காய் பாறை செய்முறை:
ஸ்டேப்:1
முதலில் தேங்காயை எடுத்து துருவி 2 கப் எடுத்து கொள்ளுங்கள். பின் அடுப்பை பற்ற வைத்து கடாயை வைத்து கொள்ளுங்கள். கடாய் சூடானதும் 2 கப் துருவிய தேங்காயை சேர்க்கவும். அதில் சீனி 1 1/2 கப் சேருங்கள்.
ஸ்டேப்:2
பின் அதில் 3 தேக்கரண்டி பால் சேர்த்து கலந்து விடுங்கள். சீனி உருகிய பதம் வந்ததும் அடுப்பை மிதமான தீயிலே வைக்க வேண்டும். பின் சிறிது நேரம் வேகட்டும்.
ஸ்டேப்:3
பின் மற்றொரு கடாயில் 1 தேக்கரண்டி நெய் ஊற்றவும். அதில் உடைத்த முந்திரி பருப்பை சேர்த்து வதக்குங்கள். முந்திரி பொன்னிறம் வந்தவுடன் அடுப்பை அனைத்து விடுங்கள்.
ஸ்டேப்:4
அடுப்பில் இருக்கும் தேங்காயை நன்றாக கிண்டி விடுங்கள். இல்லயென்றால் அடிபிடித்துவிடும். பின் அதில் 1 தேக்கரண்டி நெய் சேர்க்கவும். பின் வறுத்து வைத்த முந்திரியை சேர்த்து கலந்து விடவும். பின் அடுப்பை அணைத்து விடவும்.
ஸ்டேப்:5
பிறகு ஒரு பெரிய தட்டு எடுத்து கொள்ளுங்கள். அதில் நெய் சிறிதளவு தட்டு முழுவதும் தடவி கொள்ளுங்கள். பின் அந்த தட்டில் செய்து வைத்திருக்கின்ற தேங்காயை சேர்த்து பரப்பி விடவும். சிறிது நேரம் அப்படியே ஆறட்டும். ரொம்பவும் ஆற விடாதீங்க. அப்பறம் பீஸ் சரியாக வராது. இப்பொழுது உங்களுக்கு விருப்பப்பட்ட வடிவில் நறுக்கி கொள்ளுங்கள்.
ஸ்டேப்:6
அவ்ளோ தாங்க சுவையான கட்டு கட்டாக தேங்காய் பாறை ரெடி.! இது போல் இந்த தீபாவளிக்கு தேங்காய் பாறை செய்து அசத்துங்கள்.
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal Kurippugal |