ஈஸியான முறையில் தேங்காய் போலி இப்படி செஞ்சி பாருங்க..! சூப்பரா இருக்கும்..!

Advertisement

Thengai Poli Seivathu Eppadi

இன்றைய பதிவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடிய தேங்காய் போலி எப்படி செய்வது என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். தேங்காய் போலியை பலரும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த தேங்காய் போலியை இனி கடையில் வாங்கி சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை. வீட்டிலேயே சுலபமான முறையில் தேங்காய் போலி சுலபமாக செய்து அசத்தலாம். வாங்க நண்பர்களே தேங்காய் போலி எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம்..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇https://bit.ly/3Bfc0Gl

தேங்காய் போலி எப்படி செய்வது..? 

தேங்காய் போலி எப்படி செய்வது

தேவையான பொருட்கள்:

  1. மைதா மாவு – 1 கப்
  2. தேங்காய் துருவல் – 1 கப்
  3. மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
  4. வெல்லம் – 3/4 கப்
  5. ஏலக்காய் தூள் – 1/2 ஸ்பூன்
  6. உப்பு – தேவையான அளவு

மைதா மாவு எடுத்து கொள்ளவும்:

முதலில் ஒரு கிண்ணத்தில் 1 கப் அளவிற்கு மைதா மாவு எடுத்து கொள்ள வேண்டும். பின் அதில் 1/4 டீஸ்பூன் அளவிற்கு உப்பு மற்றும் 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து விட வேண்டும்.

பின் அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல பிசைந்து எடுத்து கொள்ள வேண்டும். ஆனால் அழுத்தமாக பிசைய கூடாது.

பின் அதில் எண்ணெய் அல்லது நெய் சேர்த்து மறுபடியும் பிசைந்து கொள்ள வேண்டும். மாவு பிசைந்து 1 மணிநேரம் வரை அப்படியே மூடி வைக்க வேண்டும்.

தேங்காய் இருந்தால் போதும் மிகவும் ருசியான ஸ்வீட் செய்து அசத்தலாம்..!

கடாயை அடுப்பில் வைக்கவும்: 

கடாயை அடுப்பில் வைக்கவும்

பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் துருவிய தேங்காய் 1 கப் அளவிற்கு போட வேண்டும். பின் அந்த தேங்காயை 5 நிமிடம் வதக்கி கொள்ள வேண்டும். தேங்காய் வதக்கும் போது ஒரு வாசனை வரும். அதன் பின் அடுப்பில் இருந்து இறக்கி ஆறவிட வேண்டும்.

தேங்காய் ஆறியதும் அதை ஒரு மிக்சி ஜாரில் போட்டு அதனுடன் இடித்த வெல்லம் 3/4 கப் , 1/2 ஏலக்காய் தூள் சேர்த்து மூன்றையும் நன்றாக அரைத்து எடுத்து கொள்ள வேண்டும்.

போலி செய்யும் முறை:

போலி செய்யும் முறை

நாம் அரைத்த தேங்காய் துருவலை சிறிய உருண்டைகளாக பிடித்து வைத்து கொள்ள வேண்டும்.

ஒரு வாழை இலை எடுத்து கொள்ளவும். பின் நாம் பிசைந்து வைத்துள்ள மாவை அதில் வைத்து கைகளால் ஒரு அளவிற்கு சப்பாத்தி போல தட்டி கொள்ள வேண்டும்.

பின் அதில் நாம் உருட்டி வைத்துள்ள தேங்காயை வைத்து மூடி மறுபடியும் உருட்டி கொள்ள வேண்டும்.

பின் அதை மறுபடியும் இலையில் வைத்து சப்பாத்தி போல தட்டி தோசைக் கல்லில் போட்டு எடுக்க வேண்டும். அவ்வளவு தான் நண்பர்களே மிகவும் சுவையான தேங்காய் போலி தயார்..!

இதையும் கிளிக் செய்து பாருங்கள் ⇒ குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த அவல் லட்டு செய்வது எப்படி..?

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal Kurippugal
Advertisement