டர்கிஷ் டிலைட் சுலபமாக வீட்டில் எப்படி செய்வது ?

Advertisement

டர்கிஷ் டிலைட் சுலபாமக  செய்வது எப்படி 

வணக்கம் நண்பர்களே  இன்றைய சமையல் குறிப்பு பகுதியில் டர்கிஷ் டிலைட் ஸ்வீட் ரெசிபி   வீட்டில் எப்படி சுலமபாக செய்யலாம் என்று பார்க்கலாம். பொதுகவே இனிப்பு என்றால் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் விரும்பி சாப்பிடுவார்கள்.  அதுமட்டும் இல்லாமல் வீட்டில் நடக்கும் விசேஷத்திற்கும் பொதுவாக எல்லாரும் இனிப்பு செய்து கொண்டாடி வருவார்கள். அந்த வகையில் மிகவும் எளிதாக எல்லாருக்கும் பிடித்த மாதிரி டர்கிஷ் டிலைட் குறைவான பொருட்கள் வைத்து  எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க.

1 கப் பால் மட்டும் போதும் சுவையான ஸ்வீட் செய்யலாம் வாங்க

டர்கிஷ் டிலைட் செய்வதற்கு தேவையான பொருட்கள்:

  1. சர்க்கரை -2கப்
  2. தண்ணீர்
  3. எலுமிச்சை
  4. சோளமாவு – 1/2 கப்
  5. கேசரிபவுடர்
  6. ரோஸ் எசன்ஸ்

ஸ்டேப் 1:

முதலில் ஒரு கடாயை எடுத்து கொண்டு மிதமான சூட்டில் வைத்து கொண்டு, கடாய் சூடானதும் அதில் 2 கப் சர்க்கரை சேர்த்து கொண்டு, கூடவே 1/4 கப் தண்ணீர் சேர்த்து கொள்ள வேண்டும். சர்க்கரை முழுகும் அளவிற்கு தண்ணீர் சேர்த்தால் போதும்.

ஸ்டேப் 2:

அதன் பிறகு 1/2 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து விட வேண்டும். சர்க்கரை பாவு கொத்தித்து கொஞ்சம் கெட்டியாக வரும் வரை கிளறிவிட வேண்டும். அந்த பாவு கொத்தித்த பிறகு ஒரு கிண்ணத்தில் தண்ணீர் வைத்து அந்த பாவினை அதில் ஒரு சொட்டு விட்டு பார்க்கவும். அது கரையாமல் கெட்டியாக இருந்தால் பாவு ரெடி.

ஸ்டேப் 3:

மறுபடியும்  மற்றொரு கடாயை எடுத்து அதில் 1/2 கப் சோளமாவு சேர்த்து,  1 1/2 கப் தண்ணீர் சேர்த்து கலந்து விட வேண்டும். கலந்த விட்ட பிறகு தான் அடுப்பில் சமைக்க வேண்டும்.

ஸ்டேப் 4:

கலந்து விட்ட சோளமாவை கண்ணாடி பதம் வரும் வரை கலந்து விட  வேண்டும். அதன் பிறகு நம்ப ரெடி செய்த்துவைத்த சர்க்கரை பாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கலந்து விட வேண்டும்.

ஸ்டேப் 5:

சர்க்கரை பாவு சேர்த்து கலந்த பின்பு கொஞ்சம் தளதளன்னு ஆகிவிடும். அப்பொழுது அடுப்பை மிதமான சூட்டில் வைத்தது அடிபிடிக்காமல் கலந்து கொண்டு இருக்க வேண்டும். டர்கிஷ் டிலைட் இழுக்கும் பதம் வரும் வரை கலந்து விடவேண்டும். 35 நிமிடம் கலந்து விட வேண்டும்.

ஸ்டேப் 6:

அதன் பிறகு கெட்டி பதம் வந்த பிறகு கலர் பவுடர் சேர்த்து, ரோஸ் எசன்ஸ் சேர்த்து கலந்து விட வேண்டும். அதன் பிறகு ஒரு தட்டு அப்படி இல்லை என்றால் பவுலில்  எண்ணெய்  தடவி அதில்  கடாயில் உள்ள டர்கிஷ் டிலைட் கலந்து விட்டு சிறிதுநேரம் கழித்து அதனை சிறிய துண்டுகளாக கட்  செய்த்து, சோளமாவு அதில் தூவி கலந்துவிட்ட பிறகு  ருசியான டர்கிஷ் டிலைட் ரெடி.

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal Kurippugal

 

Advertisement