முட்டை இல்லாமலே ஆம்லெட் செய்ய தெரியுமா.?

Advertisement

வெஜ் ஆம்லெட்

வணக்கம் நண்பர்களே..! முட்டையில் ஆம்லெட்டை காலை, மாலை, இரவு என மூன்று வேளையும் சாப்பாட்டிற்கு சைடிஷாக விரும்பி சாப்பிடுகின்றனர். ஒரு சிலருக்கு முட்டையில் ஆம்லெட் பிடிக்காது. அப்படி முட்டையில் ஆம்லெட் பிடிக்காதவர்களுக்கு இந்த வெஜ் ஆம்லெட் ரெசிபி மிகவும் பிடித்தமானதாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் இது புரட்டாசி மாதம் என்பதால் சிலர் வீட்டில் அசைவ உணவுகள் சாப்பிட மாட்டார்கள். அதனால் உங்களுக்கு ஆம்லெட் சாப்பிட முடியவில்லை என்று கவலை வேண்டாம். இந்த பதிவில் வெஜ் ஆம்லெட் செய்வது எப்படி என்று தெரிந்துகொண்டு வீட்டிலே செய்து சாப்பிட்டு பார்க்கலாம் வாங்க..!

இதையும் படியுங்கள்⇒ கறிக்குழம்பு சுவையில் உடைத்த முட்டை குழம்பு இப்படி                             செஞ்சு பாருங்க..!

வெஜ் ஆம்லெட் செய்ய தேவையான பொருட்கள்:

  • மஞ்சள் பாசி பருப்பு- 1 1/2 கப் 
  • வெங்காயம்- 2
  • பச்சை மிளகாய்- 5
  • கேரட்- 1 
  • காய்ந்த மிளகாய்- 1/2
  • மிளகு சீரகம்- 1 தேக்கரண்டி 
  • சோடா உப்பு- தேவையான அளவு 
  • உப்பு- தேவையான அளவு 
  • பெருங்காயத் தூள்- 1/4 தேக்கரண்டி 
  • இஞ்சி- தேவையான அளவு 
  • கொத்தமல்லி– சிறிதளவு 

வெஜ் ஆம்லெட் செய்முறை விளக்கம்:

omelette in tamil

ஸ்டேப்- 1

முதலில் மஞ்சள் பாசி பருப்பை நீரில் ஊறவைத்து தோல் இல்லாமல் நன்றாக அலசி தண்ணீர் இல்லாமல் சுத்தமாக வடிகட்டி தனியாக வைக்கவும். அதன் பிறகு வெங்காயம், பச்சைமிளகாய் இந்த இரண்டையும் சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி தனியாக வைத்து கொள்ளவும். அடுத்ததாக கேரட்டை எடுத்து கொண்டு அதனை துருவி ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.

ஸ்டேப்- 2

அடுத்ததாக ஒரு மிக்சி ஜாரில் வடிகட்டி வைத்துள்ள பாசி பருப்புடன், நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து தண்ணீர் இல்லாமல் நன்றாக அடை மாவு பதத்திற்கு அரைத்து கொள்ள வேண்டும். அரைத்து முடித்தவுடன் மாவை ஒரு தனி பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 3

அரைத்து வைத்துள்ள அடை மாவுடன்  நறுக்கிய வெங்காயம், துருவிய கேரட், கருவேப்பிலை, கொத்தமல்லி, தேவையான அளவு உப்பு, காய்ந்த மிளகாய் இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். கலந்து வைத்துள்ள மாவுடன் மிளகு சீரகம் தூள் மற்றும் சோடா உப்பு தேவையான அளவு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். கலந்த மாவை 5 நிமிடம் அப்படியே வைக்க வேண்டும்.

ஸ்டேப்- 4

5 நிமிடம் கழித்த பிறகு அடுப்பை பற்ற வைத்து அதில் தோசை கல்லை வைக்க வேண்டும். கல் சூடேறியவுடன் அடை மாவை ஆம்லெட் ஊற்றுவது போல் தோசை கல்லில் ஊற்ற வேண்டும். அடுப்பை மீடியம் தீயில் வைத்து அந்த ஆம்லெட் மேலே எண்ணெய் தேவையான அளவு ஊற்றி ஆம்லெட் வெந்தவுடன் சாப்பிட வேண்டியது தான். அவ்வளவு தான் சுவையான வெஜ் ஆம்லெட் தயார்.

கிராமத்து ஸ்டைல் முட்டை குழம்பு வைப்பது எப்படி?

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>  சமையல் குறிப்புகள்
Advertisement