வெஜிடபிள் குருமா செய்வது எப்படி? | Vegetable Kurma Recipe Tamil

Advertisement

வெஜிடபிள் குருமா வைப்பது எப்படி? | Veg Kurma Recipe Tamil

வணக்கம் நண்பர்களே இன்றைய சமையல் குறிப்பு பகுதியில் இட்லி, தோசை சப்பாத்தி, பூரி, பரோட்டா அனைத்திற்கும் ஏற்ற சுவையான வெஜிடபிள் குருமா செய்வது எப்படி என்று பார்க்கலாம். இந்த குருமா சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். சரி வாங்க காலை மற்றும் இரவு உணவிற்கு ஏற்ற சைடிஷ் வெஜிடபிள் குருமா மிகவும் ருசியாக எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க.

Veg Kurma Seivathu Eppadi:

மசாலா அரைப்பதற்கு தேவையான பொருட்கள்:

  1. தனியா – 1 டேபிள் ஸ்பூன்
  2. சோம்பு –  1 டேபிள் ஸ்பூன்
  3. சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்
  4. மிளகு – பத்து
  5. பட்டை – சிறிய துண்டு
  6. கிராம்பு – 3
  7. ஏலக்காய் – 2
  8. காய்ந்த மிளகாய் – 2
  9. பொட்டுக்கடலை – 1/2 டேபிள் ஸ்பூன்
  10. இஞ்சி – 1 (நறுக்கியது)
  11. பூண்டு – 3 பல்
  12. பச்சை மிளகாய் – 1
  13. முந்திரி பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
  14. கச கசா – 1 டேபிள் ஸ்பூன்
  15. துருவிய தேங்காய் – 3 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

ஸ்டேப்: 1 – Vegetable Kurma Recipe Tamil Style:

Kurma Seivathu Eppadi: ஒரு கடாயில் 1 டேபிள் ஸ்பூன் தனியா, 1 டேபிள் ஸ்பூன் சோம்பு, 1 டேபிள் ஸ்பூன் சீரகம், மிளகு 10, சிறிய துண்டு பட்டை, கிராம்பு 3, ஏலக்காய் 2, சிவப்பு மிளகாய் 2, பொட்டுக்கடலை 1/2 டேபிள் ஸ்பூன் சேர்த்து மீடியம் flame-ல் வைத்து வறுக்கவும்.

ஸ்டேப்: 2 – வெஜிடபிள் குருமா:

வறுத்தவுடன் இதை ஆறவிட்டு பின்பு மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும். பின் அதில் நறுக்கிய இஞ்சி 1, பூண்டு 3, முந்திரி பருப்பு 1 டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் 1, கச கசா 1 டேபிள் ஸ்பூன், துருவிய தேங்காய் 3 டேபிள் ஸ்பூன் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ளவும்.

குருமா செய்வதற்கு தேவையான பொருட்கள்:

  1. எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
  2. பெரிய வெங்காயம் – 1 (நறுக்கியது)
  3. தக்காளி – 1 (பொடிதாக நறுக்கியது)
  4. மஞ்சள் தூள் – 1/4 டேபிள் ஸ்பூன்
  5. மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
  6. உப்பு  – 1 டேபிள் ஸ்பூன்
  7. உருளைக்கிழங்கு – 1 கப் நறுக்கியது
  8. கேரட் – 1 கப் நறுக்கியது
  9. பீன்ஸ் – 1 கப் நறுக்கியது
  10. பச்சை பட்டாணி – 1/2 கப்
  11. கொத்தமல்லி இலை – நறுக்கியது

வெஜிடபிள் குருமா செய்முறை:

ஸ்டேப்: 1

வெஜிடபிள் குருமா: ஒரு கடாயில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய பெரிய வெங்காயம் 1 சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். வெங்காயம் வதங்கிய பின் அதில் நறுக்கிய தக்காளி 1, 1/4 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள், மிளகாய் தூள் 1 டேபிள் ஸ்பூன் சேர்த்து வதக்கவும்.

ஸ்டேப்: 2 

அதன் பிறகு அதில் 1 டேபிள் ஸ்பூன் உப்பு, நறுக்கிய உருளைக்கிழங்கு 1 கப், நறுக்கிய கேரட் 1 கப், நறுக்கிய பீன்ஸ் 1 கப், பச்சை பட்டாணி அரை கப் சேர்த்து நன்றாக கிளறி விடவும்.

ஸ்டேப்: 3 

பின் அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி பாதியளவு வேக வைக்கவும். காய்கறி வெந்தவுடன் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை சேர்த்து 15 நிமிடம் வேக வைக்கவும்.

15 நிமிடம் கழித்து நறுக்கிய கொத்தமல்லி இலையை தூவி அடுப்பை அணைக்கவும். இப்போது சூடான, சுவையான வெஜிடபிள் குருமா தயார்.

ஹோட்டல் இட்லி சாம்பார் செய்வது எப்படி?

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil
Advertisement