வெண்பொங்கல் செய்வது எப்படி? | Ven Pongal Recipe in Tamil
நம் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை அன்று அனைவரது வீட்டிலும் செய்ய கூடிய உணவில் ஒன்று வெண்பொங்கல் மற்றும் சர்க்கரை பொங்கல். பொங்கலன்று இந்த இரண்டு வகையான பொங்கலையும் செய்து இறைவனுக்கு படைத்து விட்டு பின்னர் நாம் உண்பது வழக்கம். வெண்பொங்கல் நம் நாட்டின் பாரம்பரியமான உணவு வகைகளில் ஒன்று. நாம் இந்த தொகுப்பில் சுவையான வெண்பொங்கல் செய்வது எப்படி? என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் – வெண்பொங்கல் எப்படி செய்வது?
- பச்சரிசி – 1 கப்
- பாசிப்பருப்பு – அரை கப்
- நெய் – 2 டேபிள் ஸ்பூன்
- பெருங்காய தூள் – கால் டேபிள் ஸ்பூன்
- இஞ்சி – 1 (பொடிதாக நறுக்கியது)
- பச்சை மிளகாய் – 3 (கீறியது)
- தண்ணீர் – 5 கப்
- உப்பு – தேவையான அளவு
செய்முறை – வெண்பொங்கல் எப்படி செய்வது?
முதலில் ஒரு கடாயில் 1 கப் பச்சரிசி, அரை கப் பாசிப்பருப்பு இரண்டையும் சேர்த்து 2 நிமிடம் வறுத்து கொள்ளவும். வறுத்த பின்பு இதனை நீரில் கழுவி கொள்ளவும்.
ஸ்டேப்: 2 – Venpongal Seivathu Eppadi:
பின் ஒரு குக்கரில் 2 டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து சூடாக்கவும். பின் அதில் கால் டேபிள் ஸ்பூன் பெருங்காய தூள், 1 துண்டு இஞ்சி பொடிதாக நறுக்கியது, கீறிய மூன்று பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி கொள்ளவும்.
ஸ்டேப்: 3 – வெண்பொங்கல் எப்படி செய்வது?
பின் அதில் வறுத்து அலசி வைத்திருக்கும் பச்சரிசி மற்றும் பாசிப்பருப்பை சேர்க்கவும். அதன் பிறகு அதில் ஐந்து கப் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து மிதமான சூட்டில் நான்கு விசில் வரும் வரை வேக வைக்கவும்.
ஸ்டேப்: 4 – Venpongal Seivathu Eppadi in Tamil:
நான்கு விசில் வந்தவுடன் பிரஷர் போன பிறகு குக்கரை திறக்கவும், இப்பொழுது பருப்பு மற்றும் சாதம் நன்றாக வெந்திருக்கும்.
வெண்பொங்கல் தாளிப்பதற்கு தேவையான பொருட்கள்:
- நெய் – 2 டேபிள் ஸ்பூன்
- முந்திரி – சிறிதளவு
- மிளகு – 1 டேபிள் ஸ்பூன்
- சீரகம் – 2 டேபிள் ஸ்பூன்
- கருவேப்பிலை – சிறிதளவு
செய்முறை – Venpongal Seivathu Eppadi:
- வெண்பொங்கலை தாளிக்க வேண்டும், அதற்கு ஒரு கடாயில் 2 டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து உருக்கி கொள்ளவும்.
- நெய் உருகிய பிறகு சிறிதளவு முந்திரி சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்து கொள்ளவும்.
ஸ்டேப்: 2 – Venpongal Seivathu Eppadi in Tamil:
- முந்திரி பொன்னிறம் ஆன பிறகு அதில் 1 டேபிள் ஸ்பூன் மிளகு, 2 டேபிள் ஸ்பூன் சீரகம், சிறிதளவு கருவேப்பிலை சேர்த்து வதக்கி கொள்ளவும். இந்த தாளிப்பை வெண் பொங்கலில் சேர்த்து கிளறி கொள்ளவும், பின் அதில் 2 டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து கிண்டவும்.
- இப்பொழுது சுட சுட சுவையான வெண்பொங்கல் தயார்.
கோவில் ஸ்டைல் புளியோதரை செய்வது எப்படி |
கோவில் சர்க்கரை பொங்கல் செய்வது எப்படி |
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள் |