வெண்டைக்காய் தோசை செய்வது எப்படி.?
வணக்கம் நண்பர்களே..! வெங்காய தோசை, மசாலா தோசை, முட்டை தோசை, பொடி தோசை என்று இன்னும் பல வகையான தோசைகளை சாப்பிட்டுருப்போம். இது மாதிரி ஒரே தோசை செய்து சாப்பிடாமல் இந்த வெண்டைக்காய் தோசை செய்து சாப்பிட்டு பாருங்கள். வெண்டைக்காய் பலருக்கும் பிடிக்காது. வெண்டைக்காய் வழவழப்பு தன்மையாக இருக்கும். இனிமேல் வெண்டைக்காயை இப்படி செய்து கொடுத்தீர்கள் என்றால் பிடிக்காதவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். வாங்க வெண்டைக்கை தோசை எப்படி செய்வது என்று படித்து தெரிந்துகொள்ளலாம்.
இந்த தோசையும் செய்து பாருங்கள் ⇒ ரவா தோசை செய்வது எப்படி.?
வெண்டைக்காய் தோசை செய்ய தேவையான பொருட்கள்:
- புழுங்கல் அரிசி – 200கி
- வெந்தயம் – 1 தேக்கரண்டி
- வெண்டைக்காய் – 10
- பெரிய வெங்காயம் – 2
- பச்சை மிளகாய் – 2
- எண்ணெய் – 2 தேக்கரண்டி
- கடுகு – 1 தேக்கரண்டி
- உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
- சீரகம் – 1/2 தேக்கரண்டி
- பச்சரிசி மாவு – 3 தேக்கரண்டி
- கொத்தமல்லி தழை- சிறிதளவு
- உப்பு – தேவையான அளவு
- தண்ணீர் – தேவையான அளவு
வெண்டைக்காய் தோசை செய்முறை:
ஸ்டேப்:1
முதலில் புழுங்கல் அரிசியை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். பிறகு ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த புழுங்கல் அரிசி, வெந்தயம் 1 தேக்கரண்டி சேர்த்து 4 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
ஸ்டேப்:2
ஊற வைத்த அரிசியை தண்ணீர் இல்லாமல் மிக்சியில் சேர்க்க வேண்டும். அதில் சிறிதாக நறுக்கிய 10 வெண்டைக்காய், பச்சை மிளகாய் 1 போட்டு தண்ணீர் ஊற்றி இட்லி மாவு அரைப்பது போல் அரைத்து கொள்ள வேண்டும்.
ஸ்டேப்:3
அடுப்பை பத்த வைத்து கடாயை வைக்க வேண்டும். அதில் 1 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றவும். கடுகு 1தேக்கரண்டி, உளுத்தப்பருப்பு 1 தேக்கரண்டி, சீரகம் 1/2 தேக்கரண்டி, நறுக்கிய வெங்காயம் 2, சேர்த்து வதக்க வேண்டும். கொத்தமல்லி தழையும் சேர்த்து வதக்க வேண்டும்.
ஸ்டேப்:4
அரைத்து வைத்த மாவுடன் வதக்கியதை சேர்க்கவும். தோசை மாவு எந்த பதத்தில் தண்ணீர் ஊற்றுவோமோ அந்த அளவுக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். தேவையான அளவு, பச்சரிசி மாவு 3 தேக்கரண்டி சேர்த்து கரைத்து கொள்ளவும்.
ஸ்டேப்:5
அடுப்பில் தோசை கல்லை போட்டு சூடானதும் கரைத்து வைத்த மாவை தோசை ஊற்றி எடுத்தால் சுவையான வெண்டைக்காய் தோசை ரெடி.. ருசிக்கலாம் வாங்க..
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள் |