பிள்ளைகளுக்கு தொடர் சளி இருமல் பிரச்சனை இருக்கா அப்போ இதை செய்து கொடுங்கள்

Advertisement

வெற்றிலை ரசம் செய்வது எப்படி?

அனைவருக்கும் அன்பு வணக்கம் பொதுவாக அனைவருக்கும் இந்த கொரோனா காலத்தில் சளி இருமல் பிடித்துகொண்டால் மிகவும் பயம் இருக்கும். இப்போது கொரோனா இல்லை என்றாலும் சளி இருமல் பிடித்தால் மிகவும் பயமாக இருக்கும். நமக்கு உடல் நிலை சரி இல்லையென்றாலும் இந்த ரசத்தை செய்து கொடுங்கள். முக்கியமாக சளி இருமல் இருந்தால் இந்த ரசத்தை செய்து சாப்பிடுங்கள். அது என்ன ரசம் மட்டும் சாப்பிட சொலிக்கிறீர்கள் என்று நினைப்பீர்கள்.

நாம் வீட்டில் இப்போது செய்யும் ரசம் போல் இது இருக்காது. இன்று நாம் சளி இருமலுக்கு மருந்தாக இந்த வெற்றிலை ரசம் இருக்கும். வாங்க அதனை எப்படி செய்யவேண்டும் என்பதை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

  • வெற்றிலை : 4
  • பூண்டு : 10 பல்
  • புளி : எலுமிச்சை பழம் அளவு ஊறவைக்கவும்.
  • தக்காளி : 2
  • பெருங்காயம் : 1 சிட்டிகை
  • மஞ்சள் தூள் : 1/4 டீஸ்பூன்
  • மிளகு : 1 டீஸ்பூன்
  • சீரகம் : 1 1/2 டீஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் : 5
  • இஞ்சி : 1 துண்டு
  • கடுகு : 1/4 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை : ஒரு கொத்து
  • கொத்தமல்லி இலை – சிறிதளவு
  • உப்பு மற்றும் எண்ணெய் – தேவையான அளவு.

ஸ்டேப் -1

முதலில்  மிளகை, சீரகம் உரலில் அல்லது அம்மியில் பிடித்துக்கொள்ளவும். அதன் பின் அதில் பூண்டு, இஞ்சி சேர்த்து இடித்துகொள்ளவும்.

ஸ்டேப் -2

எலுமிச்சை அளவு ஊறவைத்த புளியை தண்ணீர் ஊற்றி கரைத்துக்கொள்ளவும். பின்பு அதனுடன் தக்காளியை நன்கு கரைத்துக்கொள்ளவும்.

கரைத்த பின் அதில் தேவையான அளவு உப்பு சேர்த்த்துக்கொள்ளவும்.

ஸ்டேப் -3

அடுப்பை பற்றவைத்து அதில் கடாயை வைத்து அதில் எண்ணெய் விட்டு கடுகு போட்டு பொரிந்த பின் கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் அரைத்த சீரகம் மற்றும் பூண்டு விழுது, பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் சேர்த்து ஒரு கிளறு கிளறவும்.

ஸ்டேப் -4

பின்பு அதில் கரைத்து வைத்த புளி கரைசலை அதில் ஊற்றி சிறு துண்டுகளாக்கிய வெற்றிலை, நறுக்கிய கொத்தமல்லி இலையை சேர்த்து மிதமான சூட்டில்  கொதிக்கவிடவும்.

கொதிக்க வரும் நிலையில் அதாவது நுரை நிரப்பிய நிலையில் அடுப்பை நிறுத்திவிடவும். இதை குழந்தைகளுக்கு ரஞ் போல் இருக்குமே தவிர மருந்துபோல் இருக்காது.

உங்களுக்கு கல்யாணத்தில் சாப்பிடும் ரசத்தை செய்யவேண்டும் என்று நினைப்பவர்கள் இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும் ⇒ கல்யாண ரசம் வைப்பது எப்படி

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil
Advertisement