தர்பூசணி தோலில் அல்வா
வணக்கம் பொதுநலம்.காம் நேயர்களே..! இன்று நாம் பார்க்கப்போகும் ரெசிபி தர்பூசணி தோலில் அல்வா செய்வது எப்படி..! நாம் அனைவருக்கும் இனிப்பு சாப்பிடுவது என்றால் பிடிக்கும். அதிலும் சுவையான அல்வா என்றால் மிகவும் பிடிக்கும் அதுபோல் இன்று நாம் பார்க்கப்போகும் ரெசிபியும் அப்படித்தான் மிகவும் சுவையான ஒரு அல்வா தான் அதுவும் தர்பூசணி தோலில் அல்வா. நாம் அனைவரும் தர்பூசணி சாப்பிட்டிருப்போம் ஆனால் அதில் உள்ள சதைப்பகுதியை மட்டும் சாப்பிட்டிவிட்டு தோலை தூக்கி போட்டிடுவோம்.
இந்த ரெசிபியை ஒருமுறை செய்து சாப்பிட்டு பாருங்கள் பிறகு நீங்கள் எப்போதும் அந்த தோலை தூக்கியே போடமாட்டீர்கள். சரி வாங்க பதிவிற்குள்செல்வோம் வாங்க இந்த பதிவை முழுவதும் படித்து பயன்பெறுங்கள்.
தேவையான பொருட்கள் :
முதலில் தர்பூசணி தோல் அல்வா செய்வதற்கு தேவையான பொருட்களை பார்ப்போம்.
- தர்பூசணி தோல் – 2 சிறிய துண்டு
- நெய் – 3 டீஸ்பூன்
- ரவை -1 டீஸ்பூன்
- கடலைமாவு -1 டீஸ்பூன்
- பால் – 1/4 கப்
- சர்க்கரை -1/2 கப்
- கேசரி பவுடர் – 1/4 டீஸ்பூன்
- முந்திரி பருப்பு – 6
செய்முறை:
ஸ்டேப் -1
முதலில் நாம் எடுத்திருக்கும் தர்பூசணி தோலை நன்றாக கழுவி சுத்தம் செய்துவிட்டு பிறகு அதன் மேற்புறத்தில் உள்ள தடிமனான பச்சை நிற தோலை செதுக்கி எடுத்து விடவேண்டும். பிறகு அதனை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி அதனை ஒரு மிக்சி ஜாரில் போட்டு நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
ஸ்டேப் -2
இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு கடாயை வைத்து அதில் 1 டீஸ்பூன் நெய்யை ஊற்றி அந்த நெய்யில் எடுத்து வைத்திருந்த முந்திரி பருப்பை போட்டு நன்றாக வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
ஸ்டேப் -3
அதன் பிறகு அதே கடாயில் இன்னொரு டீஸ்பூன் நெய்யை ஊற்றி நாம் எடுத்துவைத்திருக்கும் 1 டீஸ்பூன் ரவையை சேர்த்து நன்றாக கலந்துவிடவும் அந்த ரவை நன்றாக வறுபட்டதும் அதனுடன் நாம் எடுத்திருக்கும் 1 டீஸ்பூன் கடலைமாவை சேர்த்து நன்றாக கலந்துவிடவும்.
ஸ்டேப் :4
இந்த ரவை கடலை மாவு வறுபட்டதும் அதனுடன் நாம் அரைத்து வைத்திருந்த தர்பூசணி தோல் பேஸ்டை சேர்த்து நன்றாக கலந்துவிடவும். இந்த கலவை நன்றாக வெந்தவுடன் அதனுடன் நாம் எடுத்து வைத்திருந்த 1/4 கப் பாலை ஊற்றி அதை நன்றாக கலந்துவிடவும்.
ஸ்டேப் :5
இவையெல்லாம் நன்றாக வெந்தவுடன் அதனுடன் நாம் எடுத்து வைத்திருந்த 1/2 கப் சர்க்கரையை சேர்த்து நன்றாக கலந்துவிடவும். பிறகு இதனுடன் 1/4 டீஸ்பூன் கேசரி பவுடரை சேர்த்து நன்றாக கலந்து விடவும். அதனுடன் மேலும் 1 டீஸ்பூன் நெய்யை ஊற்றி நன்றாக கலந்துவிடவும். கடைசியாக நாம் முன்பு வறுத்து வைத்திருந்த முந்திரியை சேர்த்து இறக்கி வைத்துவிட வேண்டும்.
அவ்வளவுதான் நம்முடைய தர்பூசணி தோலின் அல்வா ரெடி வாங்க சுவைக்கலாம்..! நீங்களும் இந்த அல்வாவை செய்து பாருங்கள்.
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த அவல் லட்டு செய்வது எப்படி..?
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal Kurippugal |