கோதுமை மாவில் இனிப்பு புட்டு செய்வது எப்படி..! Godhumai Sweet Puttu In Tamil..!
godhumai puttu ingredients in tamil: அனைவருக்கும் வணக்கம்..! இன்றைய பொதுநலம்.காம் பதிவில் ஒரு சூப்பரான ரெசிபி பார்க்க போறோம். வீட்டில் இருக்கும் கோதுமை மாவில் இனிப்பு புட்டு(Puttu Recipes) எப்படி செய்யலாம்னு பார்க்கலாம். வீட்டில் இருக்கும் அனைவருக்கும் தினமும் ஒரே உணவை சாப்பிட்டு அலுத்து போய் இருக்கும். அதனால் காலை உணவு வித்தியாசமான வகையில் இருக்க கோதுமை மாவில் இனிப்பு புட்டு செய்வது எப்படி என்று முழுமையாக படித்து தெரிந்துக்கொள்ளுவோம்..!
கோதுமை மாவில் பத்தே நிமிடத்தில் சுவையான ஸ்வீட் செய்முறை..! Sweet Recipes in Tamil ..! Wheat Flour Snacks Recipes..! |
Godhumai Puttu Seivathu Eppadi Tips in Tamil..!
இனிப்பு புட்டு செய்ய – தேவையான பொருட்கள்:
- கோதுமை மாவு – 1 கப்
- உப்பு – தேவையான அளவு
- வெது வெதுப்பான தண்ணீர் – 1/2 கப்
- தேங்காய் துருவல் – சிறிதளவு
- ஏலக்காய் தூள் – சிறிதளவு
- சர்க்கரை – 2 டேபிள் ஸ்பூன்
கோதுமை மாவு புட்டு செய்முறை விளக்கம் 1:
முதலில் கடாயில் 1 கப் அளவிற்கு கோதுமை மாவை மிதமான அளவு வறுத்து கொள்ளவும். வறுத்த பிறகு கோதுமை மாவை தனியாக தட்டில் ஆற வைக்க வேண்டும். இப்பொது சிறிதளவு உப்பு சேர்த்து கிளறிவிட வேண்டும். அடுத்து வெதுவெதுப்பான நீரை மாவில் தெளித்து புட்டு போல் செய்ய வேண்டும்.
கோதுமை இனிப்பு புட்டு செய்முறை விளக்கம் 2:
இப்போது புட்டு போல் செய்ததை மிக்ஸி ஜாரில் போட்டு 2 தடவை அரைத்து கொள்ளவும். அடுத்து இட்லி பாத்திரத்தை எடுத்து தண்ணீர் கொதிக்க வைத்து கொள்ள வேண்டும். தண்ணீர் கொதித்த பிறகு இட்லி பாத்திரத்தில் துணியை நனைக்காமல் மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்த புட்டு மாவை இதில் சேர்க்கவும்.
ரொம்ப டேஸ்ட்டான கோதுமை மாவில் ஸ்வீட் செய்வது எப்படி? Godhumai sweet in tamil..! |
கோதுமை மாவில் இனிப்பு புட்டு செய்வது எப்படி செய்முறை விளக்கம் 3:
அடுத்து கோதுமை மாவுடன் சிறிதளவு தேங்காய் துருவல் சேர்த்து மூடி 3 நிமிடம் வேகவைக்க வேண்டும். நன்றாக புட்டு வெந்த பிறகு தனியாக பாத்திரத்தில் கொட்டி வைக்கவும். அடுத்ததாக நறுமணத்திற்காக சிறிதளவு ஏலக்காய் தூளை சேர்த்து கலந்துக்கொள்ள வேண்டும்.
கோதுமை புட்டு செய்முறை விளக்கம் 4:
ஏலக்காய் தூள் சேர்த்து கலந்த பிறகு சர்க்கரை 2 டேபிள் ஸ்பூன் அளவிற்கு சேர்த்து மிக்ஸ் செய்ய வேண்டும். அவ்ளோதாங்க இந்த சுவையான இனிப்பு புட்டு ரெடி. இதை எல்லாரும் வீட்ல ட்ரை பண்ணி பாருங்க..!
கேரளா ஸ்டைல் அவியல் ரெசிபி செய்வது எப்படி..! Kerala Aviyal Recipe In Tamil..! |
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள் |