White Kuska Recipe in Tamil
அன்பு உள்ளம் கொண்ட நண்பர்களுக்கு வணக்கம்..! குஸ்கா என்றாலே நம் அனைவருக்கும் பிடிக்கும். அசைவம் சாப்பிடாதவர்கள் கூட இந்த குஸ்காவை விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய வெள்ளை குஸ்கா நாம் வீட்டிலேயே செய்து சாப்பிடலாம். அந்த வகையில் இன்று இந்த சமையல் குறிப்பு பதிவின் மூலம் பிரியாணியே தோற்று போகும் சுவையில் வெள்ளை குஸ்கா செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
பெங்களூர் ஸ்பெசல் சிக்கன் தம் பிரியாணி செய்வது எப்படி ..! |
வெள்ளை குஸ்கா செய்வது எப்படி..?
வெள்ளை குஸ்கா – தேவையான பொருட்கள்:
- அரிசி – 300 கிராம்
- தக்காளி – 2
- பெரிய வெங்காயம் – 3
- பச்சை மிளகாய் – 5
- நெய் – 2 ஸ்பூன்
- இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன்
- புதினா – 1 கைப்பிடி அளவு
- கொத்தமல்லி – 3 கொத்து
- கறிவேப்பில்லை – 1 கொத்து
- பட்டை – 2
- கிராம்பு – 2
- ஏலக்காய் – 2
- லவங்கம் – 2
- தண்ணீர் – தேவையான அளவு
- எண்ணெய் – தேவையான அளவு
- உப்பு – தேவையான அளவு
- எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்
ஸ்பெஷல் முட்டை பிரியாணி செய்வது எப்படி? |
வெள்ளை குஸ்கா செய்முறை:
செய்முறை -1
முதலில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லி மற்றும் புதினா எல்லாவற்றையும் பொடிப் பொடியாக நறுக்கி எடுத்து கொள்ள வேண்டும்.
செய்முறை -2
முதலில் குஸ்கா செய்ய தேவையான அளவு பாத்திரத்தை அடுப்பில் வைத்து கொள்ளுங்கள்.
பின் அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக சூடானதும் அதில் பட்டை, கிராம்பு, லவங்கம் போட்டு அதனுடன் பொடி பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதில் கறிவேப்பில்லை மற்றும் புதினா சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
செய்முறை -3
அடுத்து நாம் நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். தக்காளியின் பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்க வேண்டும்.
வெங்காயம் தக்காளி நன்றாக வதங்கிய பின் அதில் 2 ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
பின் அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொள்ள வேண்டும்.
செய்முறை -4
அடுத்து நாம் எந்த கிளாசில் அரிசி அளந்து எடுக்கிறோமோ அந்த கிளாஸ் அளவிற்கு தண்ணீர் சேர்த்து கொள்ள வேண்டும்.
அதாவது, 1 கிளாஸ் அரிசி எடுத்து கொள்கிறீர்கள் என்றால், அதே கிளாஸ் மூலம் 2 முறை தண்ணீர் சேர்த்து கொள்ள வேண்டும்.
அரிசியை கழுவி 10 நிமிடம் வரை நன்றாக ஊறவைக்க வேண்டும்.
செய்முறை -5
தண்ணீர் சேர்த்த பின் அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து அதனுடன் 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.
தண்ணீர் நன்றாக கொதித்த பின் நாம் ஊற வைத்துள்ள அரிசியை சேர்த்து கொள்ள வேண்டும். பின் பாத்திரத்தை 10 நிமிடங்கள் வரை மூடி வைக்க வேண்டும்.
செய்முறை -6
10 நிமிடம் கழித்து தண்ணீர் நன்றாக வற்றிய பின் அதை நன்றாக கிளறி விட வேண்டும்.
பின் அடுப்பை குறைத்து வைத்து 10 லிருந்து 15 நிமிடம் வரை மூடி வைக்க வேண்டும். பின் அதில் நெய் மற்றும் கொத்தமல்லி சேர்த்து இரக்க வேண்டும்.
அவ்வளவு தான் நண்பர்களே..! பிரியாணியே தோற்கும் அளவிற்கு சுவையான வெள்ளை குஸ்கா ரெடி..! இது போன்ற சுவையில் வெள்ளை குஸ்கா நீங்களும் உங்கள் வீட்டில் செய்து சாப்பிட்டு பாருங்கள்..!
மீன் பிரியாணி செய்வது எப்படி |
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |