Yalpanam Chicken Recipe in Tamil
அனைவருக்கும் இனிய வணக்கங்கள் நண்பர்களே..! இன்றைய பதிவில் மிகவும் ருசியான யாழ்ப்பாணம் சிக்கன் வறுவல் செய்வது எப்படி என்பதை பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். பொதுவாக சிக்கன் வறுவல் என்றாலே அசைவ பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும். அப்படி நீங்கள் விரும்பி சாப்பிடக்கூடிய சிக்கன் வறுவலை ஒரு முறை இந்த மாதிரி செய்து சாப்பிட்டுப் பாருங்கள் மீண்டும் மீண்டும் செய்து சாப்பிட தோன்றும். அப்படிப்பட்ட மிகவும் சுவையான சிக்கன் வறுவல் எப்படி செய்வது என்பதை பற்றி விரிவாக இன்றைய பதிவில் காணலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
சிக்கன் வறுவல் செய்வது எப்படி..?
முதலில் இந்த யாழ்ப்பாணம் சிக்கன் வறுவல் செய்வதற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.
- சிக்கன் – 1 கிலோ
- சின்ன வெங்காயம் – 40
- பச்சை மிளகாய் – 6
- பூண்டு – 6 பல்
- சோம்பு – 2 டீஸ்பூன்
- இஞ்சி – சிறிய துண்டு
- மிளகுத்தூள் -4 டீஸ்பூன்
- தனியாத்தூள் – 2 டீஸ்பூன்
- மஞ்சள்த்தூள் – 1/2 டீஸ்பூன்
- சோம்புத்தூள் – 2 டீஸ்பூன்
- கரம் மசாலாத்தூள் – 2 டீஸ்பூன்
- தயிர் – 2 டேபிள் ஸ்பூன்
- தேங்காய்பால் – 6 டேபிள் ஸ்பூன்
- கறிவேப்பிலை – தேவையான அளவு
- எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்
- தண்ணீர் – தேவையான அளவு
- எண்ணெய் – தேவையான அளவு
- உப்பு – தேவையான அளவு
செய்முறை:
ஸ்டேப் – 1
முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 1 கிலோ சிக்கனை நன்கு சுத்தம் செய்துகொள்ளுங்கள். பின்னர் அதனுடன் தேவையான அளவு உப்பு , 2 டீஸ்பூன் மிளகுத்தூள் மற்றும் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள்.
ஸ்டேப் – 2
பின்னர் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் தேவையான அளவு எண்ணெயை ஊற்றி நாம் தயார் செய்து வைத்துள்ள சிக்கனை போட்டு நன்கு வறுத்து தனியாக வைத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 3
அதன் பிறகு ஒரு மிக்சி ஜாரில் நாம் எடுத்து வைத்துள்ள 40 சின்ன வெங்காயத்தையும் அதனுடன் 6 பச்சை மிளகாய், சிறிய துண்டு இஞ்சி மற்றும் 6 பூண்டு பல் ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்துக் வைத்து விடுங்கள்.
சிக்கன் கிரேவி இப்படி செஞ்சு பாருங்க டேஸ்ட் சும்மா ஆளா தூக்கும்
ஸ்டேப் – 4
பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் தேவையான அளவு எண்ணெயை ஊற்றி அதில் 2 டீஸ்பூன் சோம்பு, தேவையான அளவு கறிவேப்பிலை மற்றும் நாம் அரைத்து வைத்துள்ள மசாலா ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 5
இவையெல்லாம் நன்கு வதங்கிய பிறகு அதனுடன் 2 டீஸ்பூன் மிளகுத்தூள், 2 டீஸ்பூன் தனியாத்தூள், 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள், 2 டீஸ்பூன் சோம்புத்தூள், 2 டீஸ்பூன் கரம் மசாலாத்தூள், தேவையான அளவு உப்பு மற்றும் 2 டேபிள் ஸ்பூன் தயிர் ஆகியவற்றை சேர்த்து மீண்டும் வதக்கிக் கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 6
இவை அனைத்தும் நன்கு வதங்கிய ஒன்றுடன் ஒன்று கலந்த பிறகு அதனுடன் சிறிதளவு தண்ணீரை ஊற்றி நன்கு வதக்கிக் கொண்டு பின்னர் அதனுடன் நாம் முன்னரே வறுத்து எடுத்து வைத்துள்ள சிக்கனை சேர்த்து சிறிதுநேரம் மசாலா ஒன்றாகும் படி வேக விடுங்கள். அதன் பிறகு அதனுடன் 6 டேபிள் ஸ்பூன் தேங்காய் பாலை ஊற்றி நன்கு கலந்து அடுப்பிலிருந்து இறக்கிக் கொள்ளுங்கள்.
இப்போது நமது மிகவும் ருசியான யாழ்ப்பாணம் சிக்கன் வறுவல் தயார் ஆகிவிட்டது வாங்க சுவைக்கலாம். நீங்களும் இந்த யாழ்ப்பாணம் சிக்கன் வறுவலை உங்கள் வீட்டில் தயார் செய்து சுவைத்துப் பாருங்கள்.
வீடே மணக்க கேரளா ஸ்டைல் சிக்கன் சுக்கா செய்ய தெரியுமா
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள் |