ஜமீன்தார் சிக்கன் செய்வது எப்படி..? | Zamindar Biryani in Tamil
பிரியாணி என்பது சிறு குழந்தைககள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த உணவாகும். ஒரு சிலருக்கு மூன்று வேலையையும் பிரியாணியை கொடுத்தாலும் சாப்பிடுவார்கள். அதேபோல் பிரியாணியில் பல வகைகள் உள்ளது..! அதனை சொல்லிக்கொண்டே போகலாம்.
சிலர் இரவு நேரங்களில் கூட சாப்பிடுவார்கள். நீங்கள் உங்கள் வீட்டில் சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி என்று ஒரே மாதிரியான பிரியாணியை மட்டுமே செய்து சாப்பிடுவோம்..! ஆனால் ஜமீன்தார் வீட்டு பிரியாணி செய்ய தெரியுமா..? தெரிவில்லை என்றால் இந்த பதிவின் வாயிலாக ஜமீன்தார் வீட்டு சிக்கன் பிரியாணி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம் வாங்க..!
Jamindaru Veetu Chicken Biryani Recipe in Tamil:
குறிப்பு: பிரியாணிக்கு தேவையான அளவு அரிசியை கழுவி ஊறவைக்கவும், 2 வெங்காயம், 5 பச்சை மிளகாய் – நறுக்கி எடுத்து கொள்ளளவும்.
செய்முறை:
கடாயில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து 2 பட்டை, கிராம்பு, ஏலக்காய் லவங்கம், 10 மிளகு சேர்த்து ஒரு முறை கலந்துகொள்ளவும். அடுத்து அதில் நைசாக நறுக்கிய 1 பெரிய வெங்காயம், 5 பச்சை மிளகாய், 1 கைப்பிடி புதினா சேர்த்து வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
அடுத்து அதனை ஒரு மிக்சி ஜாரில் எடுத்து தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இப்போது பிரியாணிக்கு தேவையான மசாலா ரெடி.
ருசியான சேமியா மட்டன் பிரியாணி செய்வது எப்படி?
அடுத்து ஒரு கிண்ணத்தை எடுத்துக் கொள்ளவும். அதில் 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள், 1 கப் தயிர் சேர்த்து கொஞ்சம் உப்பு சேர்த்து அதில் சுத்தம் செய்து வைத்துள்ள சிக்கனை போட்டு கலந்து கொள்ளவும்.
அடுத்து காடாயில் எண்ணெய் சேர்த்து அதில் பிரிஞ்சி இலை, ஏலக்காய் மட்டும் சேர்த்து கொள்ளலாம். அது கூடவே நைசகா நறுக்கிய 1 வெங்காயம் சேர்த்துக் கொள்ளவும். அதனையும் ஒரு முறை வதக்கிக் கொள்ளவும்.
அடுத்து 1 டேபிள் ஸ்பூன் அல்லது 1.1/2 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கவும். அடுத்து 10 முந்திரி பருப்பு சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கிக் கொள்ளவும்.
ஆந்திரா ஸ்பெஷல் கொண்டா ரெட்டி சிக்கன் பிரியாணி செய்வது எப்படி..?
இப்போது அரைத்து வைத்துள்ள பேஸ்டை சேர்க்கவும். அடுத்து பிரியாணிக்கு தேவையான அளவு உப்பு சேர்க்கவும். எண்ணெய் தனியாக பிரிந்து வரும் அடுத்து நாம் கலந்து வைத்துள்ள சிக்கனை இதில் சேர்க்கவும். அதில் பாதி எலுமிச்சை பழத்தின் சாறு சேர்த்து ஒரு முறை கலந்துகொள்ளவும்.
அடுத்து சிக்கன் வேகும் அளவிற்கு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். அதனை அப்படியே வேகவிட்டாலும் சரி அல்லது விசில் போட்டு வேகவிட்டாலும் சரி இருக்கட்டும். வெந்தபின் நாம் ஊறவைத்துள்ள அரிசியை அதில் சேர்த்து கலந்து கொள்ளவும். அடுத்து 1 டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்துக்கொள்ளவும்.
இப்போது அதனை கொஞ்ச நேரம் மூடி வைக்கவும் அடுத்து கொஞ்சம் நேரம் கழித்து அதனை திறந்து மெதுவாக கலந்து விடவும்.
அடுத்து விசில் போட்டு 1 விசில் விடவும். விசில் வந்த உடன் திறந்து உங்களுக்கு பிடித்த மாதிரி பிரியாணி ரெடி ஆகிவிட்டது. அப்படியே அதற்கு ஏற்ற தயிர் பச்சடி சேர்த்து சாப்பிடுங்கள் அவ்வளவு தான் சுவை அள்ளும்..!
இதையும் செய்து பாருங்கள் 👉👉👉 கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் கம கமக்கும் இறால் பிரியாணி செய்வது எப்படி?
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal Kurippugal |