அறிவியல் விடுகதைகள் | Science Riddles in Tamil

Science Riddles in Tamil

அறிவியல் சார்ந்த விடுகதைகள் | Science Riddles in Tamil

ஒவ்வொரு மாணவர்களுக்கும் ஒவ்வொரு பாடத்தின் மேல் ஈர்ப்பு இருக்கும். அதில்  அனைத்து மாணவர்களுக்கும் அறிவியல் மீது நிறையவே ஈர்ப்பு இருக்கும். இந்தியாவின் வளர்ச்சிக்கு அறிவியல் எவ்வளவு முக்கியமோ அதே போன்று மாணவர்களின் அறிவை மேம்படுத்துவதற்கு அறிவியல் முக்கியம். மாணவர்களின் யோசிக்கும் திறனை மேம்படுத்துவதற்கும், அறிவு வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும் பயன்பட்டு வரும் அறிவியல் பற்றிய சில கேள்விகளை விடுகதை வடிவில் படிக்கலாம் வாங்க.

அறிவியல் விடுகதைகள்:

  1. கடல் நீரில் நீச்சல் அடிப்பது நன்னீரில் நீச்சல் பழகுவதை விட எளிமையானது ஏன்?

விடை: ஆறு, குளம் போன்றவற்றில் இருக்கும் நன்னீரின் அடர்த்தி குறைவாக இருக்கும்,  கடல் நீரில் அடர்த்தி அதிகமாக இருப்பதால் நன்னீரில் நீச்சல் பழகுவதை விட கடல் நீரில் நீச்சல் அடிப்பது எளிமையானது.

கடல் நீரில் அடர்த்தி அதிகமாக இருப்பதற்கான காரணம் உப்பின் செறிவே ஆகும்.

2. கண்ணாடி அல்லது பீங்கான் போன்ற பாத்திரங்களில் சூடான பானங்களை பயன்படுத்தும் போது கண்ணாடி அல்லது பீங்கான் பாத்திரங்கள் உடைவதற்கான காரணம் என்ன?

விடை: அதிக வெப்பம் பொருட்களை விரிவடைய செய்யும்,  பாத்திரத்தின் உட்பகுதி அதிக வெப்பத்தால் விரைவாக விரிவடையும், வெளிப்பகுதி விரிவடைவதற்கு கொஞ்சம் தாமதம் ஆகும்.

கண்ணாடி அல்லது பீங்கான் பாத்திரத்தின் உட்பகுதி விரைவாக விரிவடைவதாலும், வெளிப்பகுதி விரிவடைவதற்கு தாமதம் ஏற்படுவதாலும் சூடான பானங்களை ஊற்றும் போது பாத்திரங்கள் உடைகின்றன.

அறிவியல் புதிர் கேள்விகள்:

3. ஐஸ் கட்டியை திறந்த வெளியில் வைக்கும் பொழுது வெண்ணிறமான புகை வெளிப்படுவது ஏன்?

விடை: ஐஸ் கட்டியை வெளியில் வைக்கும் பொழுது அதை சுற்றியுள்ள காற்று ஐஸ் கட்டியை குளிர்வடைய செய்கிறது. ஐஸ் கட்டி அதிகமாக குளிர்வடையும் பொழுது அந்த காற்றில் உள்ள ஈரப்பதம் நீர்திவலைகளாக மாறி, அந்த அறையில் இருக்கும் காற்று மேலும் கீழுமாக நகரும் போது, இந்த நீர்திவலைகளும் நகர்வதால் வெண்ணிறமான புகை வெளிப்படுகிறது.

4. எந்த கிரகம் மிகக் குறுகிய ஆண்டைக் கொண்டுள்ளது?

விடை: மெர்க்குரி (Mercury)

அறிவியல் புதிர்கள் – Ariviyal Pudhir in Tamil 

5. என்னால் சூடாக இருக்க முடியும், குளிர்ச்சியாக இருக்க முடியும், கடினமாக இருக்க முடியும், எல்லா தடைகளையும் கடந்து போக முடியும் நான் யார்?

விடை: தண்ணீர்

6. எனக்கு உணவு கொடுத்தால் நான் வாழ்வேன் ஆனால் தண்ணீர் கொடுத்தால் இறந்து விடுவேன் நான் யார்?

விடை: நெருப்பு

அறிவியல் விடுகதைகள்:

7. நான் பாறை போல் கடினமாக இருப்பேன் ஆனால், சூடான நீரில் போட்டால் உடனே உருகி விடுவேன் நான் யார்?

விடை: ஐஸ் கட்டி

8. நான் கல்லை போல கடினமாக இருப்பேன் ஆனால் உங்கள் உடலில் இருப்பேன் நான் யார்?

விடை: பற்கள்

Science Riddles in Tamil:

9. நான் தாவரங்களுக்கு உதவும் வாயு ஆனால் என்னை எரிவாயு நிலையத்தில் வாங்க முடியாது நான் யார்?

விடை: கார்பன் டை ஆக்சைடு

10. துளைகள் நிறைய இருக்கும் ஆனால் தண்ணீரை என்னால் உறிஞ்ச முடியும் நான் யார்?

விடை: ஸ்பாஞ்ச்

தமிழில் விடுகதைகள் கேள்வி பதில்
கணக்கு புதிர் கேள்வி பதில்கள்

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Today Useful Information in Tamil