எச்சம் என்றால் என்ன அதன் வகைகள் | Residue Definition in Tamil
நண்பர்களே வணக்கம் இன்று பொதுநலம்.காம் பதிவில் எச்சம் என்றால் என்ன என்பதை பற்றி பார்க்க போகிறோம். தமிழில் ஒரு ஒரே விதமான வார்த்தையாக இருக்கும் ஆனால் பல விதமான பொருள்படும். அந்த வகையில் இலக்கணத்தில் பல வகையான எச்சம் இருக்கிறது அதனை பின்பு பதிவில் தெளிவாக பார்ப்போம். எச்சம் என்பதை பற்றி இந்த பதிவில் தெளிவாக காண்போம் வாங்க.
உரிச்சொல் என்றால் என்ன? அதன் வகைகள்..! |
எச்சம் பொருள்:
- தமிழில் சொல்லோ சொல்லின் பொருளோ முழுமை பெறாமல் குறைந்து நிற்பதை இலக்கணம் எச்சம் என்னும் சொல்லால் தமிழ் இலக்கணம் குறிப்பிடுகிறது. ஒரு எச்சம் பெயரை கொண்டு முடிந்தால்
எடுத்துக்காட்டு:
- ஒரு ஆசிரியர் அவன் படித்தான் என்று கேட்கும் சொல் வினைமுற்று ஆகும்.
- படித்த, படித்து என்ற சொற்களில் பொருள் முற்றுப்பெறவில்லை. இதுமாதிரி பொருள் முற்றுபெறாமல் எஞ்சி இருக்கின்ற சொல் தான் எச்சம் ஆகும். இந்த எச்சம் இரண்டு வகைப்படும்.
எச்சம் என்றால் என்ன அவை எத்தனை வகைப்படும்:
- பெயரெச்சம்
- வினையெச்சம் என இரு வகைப்படும்.
பெயரெச்சம் விளக்கம்:
முற்றுப் பெறாத ஒரு வினைச்சொல் ஒரு பெயரைக்கொண்டு முடிந்தால் அது பெயரெச்சம் எனப்படும். ஒரு எச்சம் பெயரை கொண்டு முடிந்தால் பெயரெச்சம் ஆகும்.
எடுத்துக்காட்டு:
- படித்த மாணவன்
- படித்த பள்ளி
- படித்த புத்தகம்
- படித்த ஆண்டு
- படித்த என்பது எச்சம் ஆகும் மாணவன் என்பது பெயர் என்று இரண்டும் சேர்ந்து வந்தால் அது பெயரெச்சம் ஆகும். பெயரெச்சம் இரண்டு வகைப்படும் அது தெரிநிலைப் பெயரெச்சம், குறிப்பு பெயரெச்சம் என இரு வகைப்படும்.
வினையெச்சம் விளக்கம்:
- ஒரு எச்சம் வினையை கொண்டு முடிந்தால் அது வினையெச்சம் ஆகும்.
எடுத்துக்காட்டு:
- படித்து முடித்தான்
- படித்து வியந்தான்
- படித்து மகிழ்ந்தான்
- இவ்வாறு படித்து என்பது எச்சம் முடித்தான் என்பது வினை சொல்லை கொண்டு முடித்ததால் அது வினையெச்சம் ஆகும்.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |