எழுவாய் என்றால் என்ன? | Ezhuvay Enral Enna

Ezhuvay Enral Enna

தோன்றா எழுவாய் என்றால் என்ன? Thondra Ezhuvai Enral Enna

வணக்கம் நண்பர்களே.. இன்றைய இலக்கணம் சார்ந்த பகுதியில் எழுவாய் என்றால் என்ன? அவை எத்தனை வகைப்படும் என்பதை படித்து தெரிந்துக்கொள்ளலாம். இலக்கணம் சார்ந்த கேள்விகளானது அரசு நடத்தி வரும் அனைத்து போட்டி தேர்வுகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது போன்ற பல இலக்கணம் சார்ந்த கேள்விகளை எங்கள் பதிவில் பதிவிட்டு வருகிறோம். வாங்க இப்போது எழுவாய் என்றால் என்ன என்பதை முழு விளக்கத்துடன் படித்து தெரிந்துக்கொள்ளலாம்..

தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும்?

எழுவாய் என்றால் என்ன?

எழுவாய் என்பது ஒரு வசனத்தில் செயலை காட்டும் சொல்மீது யார், எது, எவை என வினவும் போது கிடைக்கும் பதில் எழுவாய் ஆகும்.

எடுத்துக்காட்டு:

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram, Youtube" சேனல Join" பண்ணுங்க: Pothunalam Telegram Pothunalam Youtube

  • “கண்ணன் பந்து விளையாடினான்” என்ற வாசகத்தில் ‘கண்ணன்’ என்ற சொல் எழுவாய் ஆகும்.
  • சிவா பந்து விளையாடினான். இதில் “சிவா” எழுவாய் ஆகும்.

எழுவாய் எத்தனை வகைப்படும்:

தமிழ் இலக்கணப்படி ஒரு வசனம் மூன்று வகையாக பிரிக்கப்படும். அவை:

  • எழுவாய்,
  • செயப்படுபொருள்,
  • பயனிலை
சொல் என்றால் என்ன?

எழுவாய் பிரித்து எழுதுக:

  • எழுவாய் = எழு + வாய்

அதன் விளக்கம்:

  • ஒரு சொற்றொடர் எழுவதற்கு வாய் (தொடக்கம்) போன்று அமைவதால் எழுவாய் எனப்பட்டது.
  • பெயரின் பொருளை வேறுபடுத்திக் கொண்டிருப்பது வேற்றுமை.
  • ஒரு சொற்றொடரில் முதலில் நிற்கும் எழுவாய், அதாவது பெயர் எந்த வித வேறுபாடும் அடையாது இயல்பாக அமைந்தால் முதல் வேற்றுமை எனப்படும்.

எடுத்துக்காட்டு:

(“முருகன் வந்தான்”) இதில் முருகன் என்ற சொல் எழுவாய் அல்லது முதல் வேற்றுமை ஆகும். இதனை எழுவாய்த்தொடர் என்றும் கூறுவதுண்டு.

தோன்றா எழுவாய் என்றால் என்ன?

வாக்கியத்தில் எழுவாய் வெளிப்படையாகத் தோன்றாது காணப்படுமாயின் அது ‘தோன்றா எழுவாய்’ எனப்படும்.

இலக்கணம் என்றால் என்ன?

 

எடுத்துக்காட்டு:

“பணத்தை என்னிடம் தந்தான்.” இங்கு யார் தந்தான்? என்று வினாவுதல் ‘அவன்’ அல்லது ‘ஒரு பெயர்’ பதிலாக வரும். இதுவே இங்கு எழுவாய் ஆகும்.

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Today Useful Information in Tamil