ஐஞ்சிறு காப்பியங்கள் சிறப்புகள் | Iynchiru Kaapiyangal

Advertisement

ஐஞ்சிறு காப்பியங்கள் | ஐஞ்சிறு காப்பியங்கள் சிறப்புகள்

பதினெண் மேற்கணக்கு நூல்களுக்கு அடுத்து ஒரு நூலின் முழு காப்பியத்தை விரிவாக எடுத்துரைப்பதற்காக தொடர்நிலை செய்யுள்கள் உருவாகியது. அதுவே காப்பியங்கள் என அழைக்கப்பட்டன. அவை ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள் என இரண்டாக பிரிக்கப்பட்டன.  அவற்றில் ஒன்றான ஐஞ்சிறு காப்பியங்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

காப்பியம் என்பது அறம், பொருள், இன்பம், வீடு என்று சொல்லக்கூடிய நால்வகை பொருள்களாகும். இந்த நால்வகை பொருள்களும் ஒன்று சேர்ந்து ஒரு காப்பியத்தில் இருந்தால் அதனை ஐம்பெருங்காப்பியங்கள் என்றும், இவற்றில் ஏதேனும் ஒரு பொருள் குறைந்து ஒரு காப்பியம் காணப்பட்டாலும் அதனை ஐஞ்சிறு காப்பியங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.

ஐஞ்சிறு காப்பியங்கள் எவை? | ஐஞ்சிறு காப்பியங்கள் விளக்குக.?

  • உதயண குமார காவியம்
  • நாக குமார காவியம்
  • யசோதர காவியம்
  • சூளாமணி
  • நீலகேசி

இந்த காப்பியங்களின் இலக்கண நூல் தண்டியலங்காரம். இவை ஐந்தும் சமண காப்பியங்கள்.

ஐஞ்சிறு காப்பியங்கள் வரலாறு | ஐஞ்சிறு காப்பியங்கள் குறித்து எழுதுக.?

ஐஞ்சிறு காப்பியங்கள் – உதயண குமார காவியம்:

  • இக்காப்பியம் சதானிகன் என்ற அரசனின் வரலாறையும் பின் அவனது மகனாகிய உதயணன் வரலாற்றையும் எடுத்துரைக்கிறது. உதயணன் நான்கு பெண்களை மணந்து இறுதியில் துறவு கொள்வதே இக்கதையின் சுருக்கமாகும். இந்நூலில் எவ்வித காவிய நடையும் இயல்பும் இல்லாமல் பெருங்கதை என்னும் இலக்கியத்தைச் சுருக்கி எளிமைப்படுத்தி கூறுவதால் இதனை பெருங்கதை இலக்கியம் என்றும் கூறலாம்.
  • இந்நூல் ஆறு காண்டங்களையும், 369 விருத்தப்பாக்களையும் உடையது. இந்நூலின் ஆசிரியர் பெயர் கிடைக்கப் பெறவில்லை. இந்நூலின் காலம் கி.பி.15-ஆம் நூற்றாண்டு.
ஆறுகாண்டங்கள் 
உஞ்சைக் காண்டம்
இலாவாணக் காண்டம்
மகத காண்டம்
வத்தவ காண்டம்
நரவாகன காண்டம்
துறவுக் காண்டம்

 

நாககுமார காவியம்:

  • இக்காப்பியம் நாக பஞ்சமியின் வரலாற்றை எடுத்துரைக்கும் காப்பியமாகும். இந்நூல் முழுவதும் பெண்ணின் மனம் மற்றும் போகத்தையும் பேசுகிறது. தலைவன் 519 பெண்களை மணக்கிறான் அதை தவிர காவியத்தில் இலக்கிய சுவையோ, காவிய நயமோ இல்லை.
  • இந்நூலின் ஆசிரியர் பெயர் கிடைக்கப்பெறவில்லை. ஆனால் இந்த நூலை இயற்றிய ஆசிரியர் சமண சமயத்தை சார்ந்த பெண் துறவி. இந்நூல் 5 சருக்கங்களையும் 170 விருத்தப்பாக்களையும் உடையது. இந்நூலின் காலம் கி.பி.16-ஆம் நூற்றாண்டு. இந்நூல் அழிந்து போன நூல். இருப்பினும் ஜீவபந்து ஸ்ரீபால் என்ற சமன அறிஞர் உதவியால் மு.சண்முகம் பிள்ளை என்பவர் பதிவிட்டுள்ளார்.

யசோதர காவியம்:

  • இந்நூலின் ஆசிரியர் பெயர் கிடைக்க பெறவில்லை. இது 5 சருக்கங்களையும்  320 விருத்தப்பாக்களையும் உடையது. இந்நூலின் காலம் கி.பி.13-ஆம் நூற்றாண்டு. இது வடமொழி நூலை தழுவி எழுதப்பட்டது ஆகும். இராசமாபுரத்து அரசன் மாரிதத்தன் என்பவருக்கு உயிர்களை பலியிடுவது தவறு என்பதை உணர்த்துவதற்காக எழுதப்பட்ட நூலாகும். மறு ஜென்மம், ஒழுக்கம், சிற்றின்பம், பேரின்பம் போன்றவற்றை விரிவாக கூறுகிறது.
  • கர்மத்தின் விளைவையும், இசை காமத்தை ஊக்குவிக்கும் என்ற கருத்தை எடுத்துரைக்கும் இந்நூலின் கதை உத்தரபுராணத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்றும் புட்பந்தர் எனும் நூலின் தமிழ் வடிவம் என்றும் இதன் ஆசிரியர் வெண்ணாவலுடையார் வேள் என்றும் சிலர் கூறுகிறார்கள்.
ஐம்பெரும் காப்பியங்கள்
தொல்காப்பியம் வரலாறு

சூளாமணி:

  • இந்நூலின் ஆசிரியர் தோலாமொழித் தேவர் ஆவர். இது 12 சருக்கங்களையும் 2131 விருத்தப்பாக்களையும் உடையது. ஆருகத மகாபுராணம் எனும் நூலை தழுவி இயற்றப்பட்டது.
  • திவிட்டன், விசயன் எனும் வடநாட்டு வேந்தனின் வரலாறை கூறுவது இந்நூல். பாகவத கதையில் வரும் பலராமன், கண்ணன் போன்று இக்காப்பியத்திலும் இரு தலைவன் உள்ளார்கள். இக்காப்பியமும் பாகவதமும் கதை நிகழ்ச்சியில் ஒரே மாதிரியாக உள்ளன.
  • அவனி சூளாமணி என்னும் பாண்டியன் அவையில் அரங்கேறியதால் இந்நூலின் காலம் கி.பி 9-ம் நூற்றாண்டை சேர்ந்திருக்கலாம் என அறியப்படுகிறது. இந்நூல் சிறுகாப்பிய நூல் என கருதப்பட்டாலும் பெருங்காப்பியத்திற்கு தேவையான அறம், பொருள், இன்பம், வீடு என்று சொல்லக்கூடிய நால்வகை பொருள்களும் இந்நூலில் உள்ளது.

நீலகேசி:

  • ஐம்பெருக்காப்பியங்களுள் ஒன்றான குண்டலகேசி என்னும் பௌத்த காவியத்துக்கு எதிராக எழுதப்பட்ட சமண காப்பியமாகும். சமயத் தத்துவத்தினும் சமணத் தத்துவமே உயர்ந்தது என்பதை உணர்த்துவதற்காக எழுதப்பட்டது. தமிழில் எழுதப்பட்ட முதலாவது தருக்க நூல் இதுவெனக் கூறப்படுகின்றது. இந்நூலின் ஆசிரியர் பெயர் கிடைக்க பெறவில்லை. இது 10 சருக்கங்களையும் 894 பாக்களையும் உடையது. இந்நூலின் காலம் கி.பி.10-ஆம் நூற்றாண்டு.
இதுபோன்று பொது அறிவு சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> GK  in Tamil

 

Advertisement