Advertisement
கிச்சன் டிப்ஸ் இன் தமிழ் | Useful Kitchen Tips in Tamil
வணக்கம் நண்பர்களே இன்றைய பொதுநலம்.காம் பதிவில் இல்லத்தரசிகளுக்கு பயன்படும் வகையில் சூப்பரான சமையலறை டிப்ஸை தெரிந்து கொள்ளலாம். பெண்களுக்கு ஒரு தனி உலகம் என்றால் அது கிச்சன் தான். சமையலறையில் செய்ய வேண்டிய வேலைகளை ஈசியாக செய்ய சில எளிய குறிப்புகளை தெரிந்து வைத்து கொண்டால், கடினமான வேலைகளையும் சுலபமாக செய்து விடலாம். அந்த வகையில் பெண்களின் வேலையை எளிமையாக்குவதற்கான ஒரு டிப்ஸை இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.
டிப்ஸ்: 1
- கிச்சன் டிப்ஸ்: நன்றாக சமைக்க தெரிந்தவர்களுக்கு உப்பு எந்த அளவிற்கு போட வேண்டும் என்று தெரிந்திருக்கும், ஆனால் ஒரு சிலர் உப்பை அதிகமாக அல்லது குறைவாக போட்டு விடுவார்கள். குறைவாக போட்டால் கூட மீண்டும் உணவில் உப்பை சேர்த்து கொள்ளலாம் அதிகமாகிவிட்டால் யாரும் சாப்பிட முடியாது.
- குழம்பில் உப்பு அதிகமாகிவிட்டால் உருளை கிழங்கை சேர்த்து கொள்ளலாம். கூட்டு, பொரியலில் உப்பு அதிகமாகிவிட்டால் 2 டேபிள் ஸ்பூன் பொட்டுக்கடலையை பவுடர் போல அரைத்து கொள்ளவும்.
- பின் பொரியல் நன்றாக வெந்ததும் கடைசி 2 நிமிடத்தில் பொட்டுக்கடலை மாவை சிறிதளவு சேர்த்து கொஞ்ச நேரம் வேகவைத்து இறக்கி விடலாம். இப்பொழுது உங்களுக்கு உப்பின் அளவு சமமாகிவிடும்.
டிப்ஸ்: 2
- Kitchen Tips in Tamil: குக்கரில் வைக்கும் சாதம் நல்ல Soft-ஆக மற்றும் உதிரி உதிரியாக இருப்பதற்கு, முதலில் அரிசியை கழுவி கொள்ளவும். பின் அந்த அரிசியில் குளிர்ந்த நீர் (Ice Water) சேர்த்து 30 நிமிடம் ஊறவைத்து கொள்ளவும். பின் அந்த நீரை வடிக்கட்டி கொள்ளவும்.
- அதன் பிறகு அரிசிக்கு தேவையான சாதாரண தண்ணீர் சேர்த்து 2 விசில் வரும் வரை வேகவைக்கவும். இந்த முறையை செய்தால் சாதம் இனி குக்கரில் வைத்தாலும் உதிரி உதிரியாக வரும்.
டிப்ஸ்: 3
- சமையலறை டிப்ஸ்: டீ நல்ல சுவையாகவும், கலராகவும் இருப்பதற்கு டீத்தூளில் தேவையான அளவு ஏலக்காய் தட்டி போடவும் மற்றும் அதில் காபீ பவுடர் 1 டேபிள் ஸ்பூன் சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும்.
- இதன் மூலம் நீங்கள் போடும் டீக்கு புதிய சுவை கிடைக்கும், வீட்டில் உள்ளவர்கள் உங்களின் டீயை குடித்துவிட்டு பாராட்டுவார்கள்.
டிப்ஸ்: 4
- பொதுவான சமையல் டிப்ஸ்கள்: பருப்பு, அரிசி, உளுந்து போன்றவற்றில் வண்டு வராமல் இருப்பதற்கு தேங்காய் ஓடு மற்றும் பூண்டு காம்பை காயவைத்து அதில் போட்டு வைக்கவும்.
- இந்த டிப்ஸ் வண்டு, பூச்சி போன்றவை அரிசியில் வராமல் இருப்பதற்கு உதவியாக இருக்கும்.
டிப்ஸ்: 5
- New Kitchen Tips in Tamil: சாம்பார் வைக்கும் போது பருப்பை கழுவி விட்டு தண்ணீர் ஊற்றி 2 நிமிடம் வேகவைக்கவும்.
- பின் பருப்பின் மேல் உள்ள நுரையை மட்டும் தனியாக எடுத்து விட்டு, நீங்கள் எப்போதும் போல சாம்பாருக்கு சேர்க்கும் பொருளை சேர்த்து குழம்பு வைக்கலாம். இப்படி செய்தால் வாயு மற்றும் செரிமான பிரச்சனை வராது.
சமையலறை குறிப்பு – பிரிட்ஜ் பராமரிப்பு ..! |
டிப்ஸ்: 6
- சமையலறை டிப்ஸ்: பால் எவ்வளவு நேரம் வைத்து காய்ச்சினாலும் கீழே வழியாமல் இருப்பதற்கு பாத்திரத்தின் மேல் வடிக்கட்டியை வைக்கவும் (வடிகட்டி Stainless steel ஆக இருக்க வேண்டும்). இப்படி செய்தால் பால் பொங்கினாலும் கீழே வழியாது.
டிப்ஸ்: 7
- கிச்சன் டிப்ஸ்: மீன் வறுவல் செய்யும் போது அதில் மசாலா நன்றாக சேர்வதற்கு, மீனை சுத்தம் செய்து விட்டு அதில் 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள், காஷ்மீரி மிளகாய் தூள் 1 டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் சிறிதளவு, மிளகு தூள் அரை டேபிள் ஸ்பூன், கால் டேபிள் ஸ்பூன் சீரக தூள், தேவையான அளவு உப்பு, 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து 10 -15 நிமிடம் ஊறவைத்து பின்னர் வறுக்கவும்.
- இந்த டிப்ஸ் மூலம் மீன் வறுவலில் மசாலா நன்றாக சேர்ந்திருக்கும் மற்றும் மீன் வறுவல் சுவையாகவும் இருக்கும்.
டிப்ஸ்: 8
- Easy Kitchen Tips in Tamil: மாவு அரைத்து அதனை பிரிட்ஜில் வைத்து மறுநாள் காலை எடுக்கும் போது பொங்கி வழிந்திருக்கும்.
- இதனை தவிர்ப்பதற்கு வாழை இலையை சிறிய துண்டாக வெட்டி எடுத்து மாவின் மீது மூடி வைத்தால் மாவு பொங்கி வழியாமல் இருக்கும்.
டிப்ஸ்: 9
- பயனுள்ள கிச்சன் டிப்ஸ்: வாழைக்காயை நறுக்கும் முன் கைகளில் உப்பு தூளை தடவிக் கொண்டால் கைகளில் பிசுபிசுப்பும், கரையும் வராது.
டிப்ஸ்: 10
- கிச்சன் டிப்ஸ்: வதங்கி போன காய்கறிகள் மேல் எலுமிச்சை பழச்சாறு பிழிந்துவிட்டால், காய்கறிகள் வதங்கிய தன்மை மாறி புதியது போல இருக்கும்.
20 சிறந்த சமையல் அறை டிப்ஸ் |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழிநுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Useful Information In Tamil |
Advertisement