வாகனம் வைத்திருப்பவர்கள் சாலை வரி செலுத்த வேண்டுமா..?

Advertisement

சாலை வரி என்றால் என்ன..? | What is Road Tax Details in Tamil

நண்பர்களே நாம் பயன்படுத்தும் பொருட்களில் பெரும்பாலான பொருள்களுக்கு வரி செலுத்தி வருகிறோம்..! அந்த வகையில் நாம் ரோட்டில் செல்கிறோம் அல்லவா அதற்கு வரி செலுத்துவது பற்றி உங்களுக்கு தெரியுமா..? அல்லது வாகனம் வைத்திருப்பவர்கள் கண்டிப்பாக வரை செலுத்த வேண்டுமா என்பதை பற்றி தெளிவாக இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்வோம் வாங்க..!

சாலை வரி என்றால் என்ன..?

கார் வாங்கும் அனைவருமே இந்த சாலை வரியை செலுத்தவேண்டும். இந்த சாலை வரியானது மாநிலம் தழுவிய வரியாகும். அதாவது ஒவ்வொரு மாநிலத்தின் அரசாங்கமும் அதன் சொந்த மாவட்டத்தில் அதை விதிக்கும் பொறுப்பு. சாலை வரி தொடர்பாக மற்ற மாநிலத்திலும் இந்த சாலை விதிமுறைகள் மாறுபடுகிறது. ஒவ்வொரு மாநிலமும் வசூலிக்கும் வரி வித்தியாசமாக இருப்பதால் மொத்த வரி அளவு மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும்.

ஒரு வருடத்திற்கு மேல் வாகனம் வைத்திருப்பவர்கள் கட்டாயம் ஒரு வருடத்திற்கு முழு தொகையையும் முன் கூட்டியே செலுத்தவேண்டும் என்று மத்திய மோட்டார் வாகன சட்டம் கட்டாயம் ஆக்குகிறது.

ஏன் சாலை வரி செலுத்தவேண்டும்:

நமது இந்தியாவில் 80 சதவீதம் சாலைகள் மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. ஆகவே அது அனைத்தையும் பராமரிக்கும் மொத்த செலவுகளையும் மாநில அரசு செய்து வருகிறது. மேலும் நாட்டின் அதிவேக நெடுஞ்சாலைகளைத் தவிர, அவை அனைத்தும் இந்திய அரசின் பொறுப்பாகும். இந்த நெடுஞ்சாலையை அமைக்க ஒவ்வொரு மாநிலமும் கையாளுவதால் சாலை வரியை நாம் செலுத்தி தான் ஆகவேண்டும்.

நிர்மலா சீதாராமன் மென்மேலும் மகிழ்ச்சியை அளித்து வருகிறார்.! பெண்களுக்கான சிறந்த திட்டம்

யார் சாலை வரி செலுத்தவேண்டும்:

வாகனங்கள் வாங்கும் ஷோரூம் பொறுத்து மாறுபடும். அதாவது அந்த விலையின் அடிப்படையில் மாறுபடும். சாலை வரி கணக்கீடு பின்வரும் விஷயங்களைப் பொறுத்தது. அதனை வாகனத்தின் இருக்கை திறன், வாகனத்தின் எஞ்சின் திறன், வாகனத்தின் வயது, வாகனத்தின் எடை என இதனை பொறுத்து மாறுபடும்.

சாலை வரி எப்போது செலுத்தவேண்டும்:

ஒரு வாகனத்தை பதிவு செய்யும் போது, ​​ஒரு தனிநபர் சாலை வரி செலுத்த வேண்டும். பல்வேறு மாநில அரசுகளின் பல்வேறு அளவுகோல்களின் அடிப்படையில், சாலை வரி செலுத்துதல் ஆண்டுதோறும் அல்லது ஒரே நேரத்தில் செலுத்தப்படுகிறது.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 ஜிஎஸ்டி என்றால் என்ன?

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil
Advertisement