Saiva Ilakkiyam in Tamil..!
வணக்கம் அன்பான நேயர்களே… இன்றைய பொதுநலம்.காம் பதிவில் சைவ இலக்கியங்கள் பற்றி தெரிந்து கொள்ள போகிறோம். நம் தமிழ் மொழியில் பல புலவர்கள் இயற்றிய பல்வேறு வகையான நூல்கள் இடம்பெற்றுள்ளன. நம் தமிழ் மொழி உலக நாடுகள் அனைத்திலும் சிறந்த மொழியாக விளங்குகின்றது.
நம் தமிழ் நாட்டிற்கு சைவ இலக்கியம் ஒரு தனிச் சிறப்பு வாய்ந்ததாக இருந்தது. இந்த சைவ இலக்கியங்கள் நமக்கு பல தகவல்களை கூறுகிறது. இந்த சைவ இலக்கியத்தை பல்வேறு புலவர்கள் இயற்றியுள்ளனர். சைவ இலக்கியம் பற்றிய மேலும் சில தகவல்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க…
இதையும் தெரிந்து கொள்ளுங்கள் ⇒ திருமுருகாற்றுப்படை நூல் குறிப்பு
சைவ இலக்கியம் என்றால் என்ன..?
சிவபெருமானை முதற்கடவுளாக வைத்து சைவ சமயத்தினை பற்றிய இலக்கியங்களை கூறுவதால் இந்நூல் சைவ இலக்கியம் என்று கூறப்படுகிறது. இந்நூலில் சைவ நெறிப் பற்றியும், சிவபெருமானை பற்றியும் புகழ்ந்து இந்நூலில் பாடப்பட்டுள்ளது. சைவ நெறிகளை மக்களுக்கு பரப்புவதற்காக இயற்றப்பட்டவை தான் சைவ இலக்கியங்கள்.
சைவ இலக்கிய வரலாறு:
இந்த நூல் சைவ மதத்தினை பற்றி மக்களிடம் பரப்பவும், சைவ மதத்தின் முதற்கடவுளான சிவபெருமானை பற்றி புகழ்ந்து பாடுவதற்காகவும் பல்வேறு இலக்கியங்கள் தமிழில் எழுந்தன. இந்த இலக்கியங்கள் சைவ மதத்தை பற்றி கூறுவது மட்டுமல்லாமல் தமிழின் பெருமைகளை கூறுவதாக அமைந்தன.
இந்த இலக்கியத்தில் சைவத்தை பற்றிய நுண்ணிய கருத்துக்களை கூறியுள்ளன. கி.பி. 7 ஆம் நூற்றாண்டு முதல் 12-ஆம் நூற்றாண்டு வரையான காலங்களில் சிற்றிலக்கியம், பெருங்காப்பியம், சைவப் பனுவல்கள் என்று பல சைவ இலக்கியங்கள் இயற்றப்பட்டன. இந்நூல் கி.பி. 650 காலப் பகுதியில் தொடங்கி, 550 ஆண்டு காலம் தமிழ்மொழியைச் சைவ சமயமே ஆட்சி செய்தது என்று கூறப்படுகிறது.
இதையும் கிளிக் செய்து பாருங்கள் ⇒ பாரதியாரின் பாஞ்சாலி சபதம் நூல்
இந்நூலை ஔவையார், குமரகுருபரர், சிவப்பிரகாசர், உலகநாதர், நாயன்மார்கள், நால்வர் போன்றோர் சைவ சமயத்தின் பெரும் இலக்கிய நூல்களை இயற்றியுள்ளனர். பல்லவர் காலத்தில் இயற்றப்பட்ட சைவ இலக்கியங்களின் தொகுப்பினை பன்னிரு திருமுறைகள் என்கிறோம். இந்நூல் பன்னிரு திருமுறைகள் என்று அழைக்கப்படுகிறது.
இந்த திரு முறைகளை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்ட இலக்கிய நூல்கள் திருமுறை சார்ந்த நூல்கள் என்று கூறப்படுகிறது. இந்நூலை அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூன்று சிவனடியார்கள் சிவன் கோயில்களில் பாடிய பதிகம் என்று வரலாற்றில் சொல்லப்பட்டுள்ளது.
அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூவரும் இயற்றிய பதிகங்கள் மறைந்தவை போக மீதம் 8,000 பதிகங்கள் உள்ளன. அதுமட்டுமில்லாமல் மாணிக்கவாசகர் என்ற புலவரும் இந்நூலில் பதிகம் பாடினார்.
சைவ இலக்கிய நூல்கள் என்ன:
- திருமுறை சார்ந்த நூல்கள்
- சைவ சித்தாந்த நூல்கள்
- மொழி பெயர்ப்பு சைவ நூல்கள்
- தல புராணங்கள்
- வீரசைவ நூல்கள்
- பொது சைவ நூல்கள்
- பிற சைவ சித்தாந்த நூல்கள்
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |