தொகைநிலைத் தொடர்கள் | Thogai Nilai Thodar Endral Enna

Thogai Nilai Thodar Endral Enna

தொகைநிலைத் தொடர்கள் எத்தனை வகைப்படும் | Thogai Nilai Thodar Vagaigal in Tamil

நண்பர்களே வணக்கம் இன்று தமிழ் பதிவில் தொகைநிலைத் தொடர் என்றால் என்ன? என்பதையும் அதன் வகைகளையும் பற்றி பார்க்க போகிறோம். தமிழ் என்றாலே எல்லாருக்கும் பிடிக்கும் அதில் வரும் இலக்கணம் நிறைய அர்த்தங்களை தரும். அந்த வகையில் தொகைநிலைத் தொடர்கள் என்பதும் ஒரு இலக்கணம் தான் இதில் வரும் தொகைகள் வியக்க வைக்கும் வகையில் இருக்கும். அதனை இந்த பதிவில் படித்து இலக்கணத்தை கற்றுக்கொள்வோம் வாங்க.

விளித்தொடர் என்றால் என்ன?

தொகைநிலைத் தொடர் என்றால் என்ன:

 • தொகை என்றால் தொக்கி என்பது பொருள், தொக்கி என்றால் மறைந்து என்பது பொருள் ஆகும். எனவே தொகைநிலை தொடர் என்றால் மறைந்து வருதல் அதாவது தொடர்களின் இடையே மறைந்து வருவது தொகைநிலை தொடர் என்பதாகும்.
 • பெயர்ச்சொல்லோடு வினைச்சொல்லும் அல்லது பெயர்ச்சொல்லும் இணைந்து வரும் தொடரில் இடையில் வேற்றுமை உறுப்புகளோ, வினை பண்பு, முதலியவற்றில் உருபுகளோடு மறைந்து வந்து இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சொற்கள் ஒரு சொல் போல் நிற்குமானால் அதனை தொகைநிலை தொடர் என்று கூறுவர்.

தொகைநிலைத் தொடர்கள் எடுத்துக்காட்டு:

 • கரும்பு தின்றான் என்பது ஒரு தொடர் இதில் தொகைநிலை தொடர் மறைந்து வந்துள்ளது.
 • கரும்பை தின்றான் என்பது = கரும்பு + பை. பை என்ற வார்த்தை ப் +ஐ = ஐ.
 • கரும்பை என்று சொல்லும் பொழுது என்னும் வேற்றுமை உருபு மறைந்து வந்து கரும்பு தின்றான் என்று வந்துள்ளதால் இது தொகைத்நிலை தொடர் எனப்படும்.

தொகைநிலைத் தொடர்கள் வகைகளுக்கு எடுத்துக்காட்டு தருக:

 • தொகைநிலை தொடர்கள் ஆறு வகைப்படும். அவை பின் வருவன
 1. வேற்றுமைத்தொகை
 2. வினைத்தொகை
 3. பண்புத்தொகை
 4. உவமைத்தொகை
 5. உம்மைத்தொகை
 6. அன்மொழித்தொகை.
அணி இலக்கணம்

வேற்றுமைத்தொகை என்றால் என்ன:

 • வேற்றுமைத்தொகை என்றால் வேற்றுமை உருபுகள் மறைந்து வருவது வேற்றுமை தொகை எனப்படும். வேற்றுமை உருபுகள் ஐ, ஆல், கு, இன், அது, கண் போன்றவைகள் வேற்றுமை உருபுகள் ஆகும். அவற்றில் ஏதேனும் ஒன்று மறைந்து வந்து பொருள் தருவது வேற்றுமைத்தொகை எனப்படும்.

வினைத்தொகை என்றால் என்ன:

 • வினைத்தொகை என்பது காலம் காட்டும் இடைநிலையும் பெயரெச்ச விகுதியும் சொற்களுக்கு இடையில் மறைந்து வந்து பொருள் தருவது வினைத்தொகை எனப்படும்.

பண்புத்தொகை என்றால் என்ன:

 • பண்புத்தொகை என்றால் மை என்னும் பண்பு மிகுதியும் ஆகிய, ஆன என்னும் பண்பு உருபுகளும் மறைந்து வந்து பொருள் தருவது பண்பு தொகை எனப்படும்.

உவமைத்தொகை சான்று தருக:

 • உவமைத்தொகை என்பது போன்ற என்ற உவம உருபு மறைந்து வருவது உவமைத்தொகை எனப்படும்.

உம்மைத்தொகை சான்று தருக:

 • உம்மைத்தொகை என்றால் இரு சொற்களுக்கு இடையிலும் இறுதியிலும் உம் என்னும் இடைச்சொல் மறைந்து வருவது உம்மைத்தொகையாகும்.

அன்மொழித்தொகை என்றால் என்ன:

 • வேற்றுமை, வினை, பண்பு, உவமை, உம்மை ஆகிய தொகைநிலைத் தொடர்களில் அல்லாத வேறு சொற்கள் மறைந்து நின்று பொருள் தருவது அன்மொழித்தொகை எனப்படும்.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil