நிலநடுக்கம் பற்றிய தகவல்கள்..!|Earthquake Meaning in Tamil

நிலநடுக்கம் பற்றிய தகவல்கள்..!|Earthquake Meaning in Tamil

அனைவருக்கும் வணக்கங்கள் நண்பர்களே..! இன்றைய பதிவில் பார்க்க இருப்பது நிலநடுக்கம் பற்றிய தகவல் தான். பொதுவாக நாம் அனைவருக்கும் நிலநடுக்கம் எவ்வாறு ஏற்படுகின்றது அதற்கு காரணம் என்ன அதன் விளைவுகள் என்ன என்பதை பற்றியெல்லாம் சரியான புரிந்துணர்வு இருக்காது. அதனால் இந்த பதிவில் நிலநடுக்கம் பற்றிய தகவல்களை விரிவாக காணலாம். அதனால் பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்.

நிலநடுக்கம் என்றால் என்ன ? 

earthquake in tamil

பொதுவாக நிலநடுக்கம், பூகம்பம், பூமியதிர்ச்சி (Earthquake) என்பது பூமிக்கடியில் ஏற்படும் அழுத்தம் அதிகமாகி அதனுடைய சக்தி வெளியேற்றப்பட்டு தளத்தட்டுகள்(Plates) நகர்வதனால் ஏற்படும் அதிர்வு ஆகும்.

இந்த அதிர்வு நிலநடுக்கமானியினால் (seismometer) ரிக்டர் அளவை மூலம் அளக்கப்படுகிறது. அதாவது 3 ரிக்டருக்கும் குறைவாக ஏற்படும் அதிர்வை அளவிட முடியாது. அதே சமயத்தில் 7 ரிக்டருக்கு அதிகமாக ஏற்படும் அதிர்வால் பூமியில் பெரும் சேதங்களை ஏற்படுத்த முடியும்.

பொதுவாக ஒவ்வொரு வருடமும் 5,00,000 நிலநடுக்கங்கள் பூமியில் ஏற்படுகின்றன. ஆனால் இவற்றில் 1,00,000 நிலநடுக்கங்கள் மட்டுமே மக்களால் உணரப்படுகின்றன. புவியின் அனைத்துப் பகுதிகளிலும் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.

ஆனாலும் பேரழிவை ஏற்படுத்தும் நிலநடுக்கங்கள் அரிதாகவே ஏற்படுகின்றன. உலகின் 90 சதவீதத்திற்கும் அதிகமான நிலநடுக்கங்கள் பசுபிக் கடல் பகுதிகளிலேயே உருவாகின்றன.

நிலநடுக்கம் எவ்வாறு ஏற்படுகிறது?

பூமியின் அடியில் நகரும் பிளேட்டுகள் உள்ளது, அது 7 பிளேட்டுகள் பெரியதாகவும், 1 டஜன் சிறிய பிளேட்டுகளும் உள்ளது. இந்த 7 பிளேட்டுகளில் ஐந்து கண்டங்கள் மற்றும் பசிபிக் போன்ற இடங்கள் அடங்கும். இதன் அடியில் இருக்கும் பாறைகள் எரிமலை குழம்பு போல இருக்கும்.

இந்த பாறை குழம்பு பூமியின் சுழற்சியால் நகர்கிறது, மேலும் மேலே உள்ள பிளேட்டுகள் ஒன்றோடு ஒன்று உரசி நகர்கிறது. இந்த பிளேட்டுகளின் இடையே ஏற்படும் சிறிய உராய்வும் நிலநடுக்கம் ஏற்படுவதற்கு காரணமாக அமைகிறது.

நிலநடுக்கத்தின் வகைகள்:

பொதுவாக நிலநடுக்கம் மூன்று வகையான புவித்தட்டு அதிர்வினால் ஏற்படுகிறது அவைகளாவன.

  1. சாதாரண முறை புவித்தட்டு அதிர்வு
  2. மேற்தள்ளல் முறை புவித்தட்டு அதிர்வு
  3. சமாந்தர புவித்தட்டு அதிர்வு

நிலநடுக்கத்தின் விளைவுகள்:

  1. நிலம் நடுங்குதல் மற்றும் பிளத்தல் 
  2. மண்சரிவு மற்றும் பனிச்சரிவு
  3. தீவிபத்து  
  4. ஆழிப்பேரலை
  5. வெள்ளம்
  6. உயிர்ச் சேதங்கள்

இதையும் படியுங்கள் => நிலநடுக்கம், சுனாமி வருவதை சில உயிரினங்கள் மட்டும் முன்கூட்டியே அறிகிறதே அது எப்படி தெரியுமா?

இது போன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Today useful information in tamil