நில அபகரிப்பு புகார் மனு எழுதுவது எப்படி?

Land Grabbing Complaints Format in Tamil

நில ஆக்கிரமிப்பு புகார் கடிதம் | Land Grabbing Complaints Format in Tamil

உங்கள் கண் முன்னாடி ஒரு புறம்போக்கு நிலத்தை அல்லது வேறு ஒரு இடத்தையோ அரசியல்வாதி அல்லது தனிப்பட்ட நபர்கள் அல்லது அங்கு வசிப்பவர் அந்த இடத்தை அபகரிப்பு செய்துள்ளனர் என்றால், அந்த இடத்திற்கு சொந்தமானவர்கள் முதலில் செய்ய வேண்டியது என்னவென்றால் முதலில் அந்த பகுதி சேர்ந்த காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம். இருப்பினும் நாங்கள் அந்த காவல் நிலையத்திற்கு ஒரு நில அபகரிப்பு புகார் கடிதம் எழுதி தர வேண்டும். உங்களுக்கு அந்த நில அபகரிப்பு புகார் கடிதம் எழுத தெரியாது என்றால் தங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சரி இந்த பதிவில் நில அபகரிப்பு புகார் மனு எழுதுவது எப்படி? என்பதை பற்றி படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

காவல்துறை புகார் கடிதம் மாதிரி

நில அபகரிப்பு புகார் கடிதம்

தேதி: XXXX
இடம்:  YYYY

அனுப்புநர்:

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram, Youtube" சேனல Join" பண்ணுங்க: Pothunalam Telegram Pothunalam Youtube

தங்கள் பெயர்,
தங்கள் முகவரி,

பெறுநர்:

காவல் ஆணையர்,
மாவட்ட காவல்துறை அலுவலகம் முகவரி.

பொருள்: நில ஆக்கிரமிப்பு குறித்த வாத செய்தி.

மதிப்புற்குரிய ஐயா/அம்மா,

இக்கடிதத்தின் வாயிலாக தங்கள் துறையிடம் நான் சமர்ப்பிக்கும் புகார் என்னவென்றால், எனது சொந்த நிலத்தில் சட்டவிரோதமாக ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இது உடனடியாக காவல்துறையினரால் கையாளப்படாவிட்டால் பாதகமான உடமைக்கு வழிவகுக்கும்.

தொலைதூர கிராம/ நகர் பகுதியான (நிலத்தின் விபரங்கள்/ முகவரியில்) பயரிடப்படாத நிலம் ஒன்றை வாங்கியிருந்தேன். அந்த நிலம் வாங்கி ஒரு வருடம் கழிந்த நிலையில் நான் வெளிநாட்டிற்குச் சென்றுவிட்டேன் ஆதலால் பராமரிப்பின்றி இருந்த அந்த நிலத்தில் யாரோ ஒருவர் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்துள்ளார். மேலும் அவ்விடத்தில் குடிசையிட்டு விவசாயம் செய்து வருகிறார்.

இவ்விவகாரம் குறித்து காவல்துறையிடம் முறையாக புகார் அளிக்கிறேன். உரிய காலத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுத்து எனக்கு சொந்தமான நிலத்தை மீட்டுதருமாறு வேண்டிக்கொள்கிறேன்.

இப்புகாரின் அடிப்படை ஆதாரமாக எனது நில உரிமை பத்திரமும், ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தின் புகைப்படங்களையும் இக்கடித்ததுடன் இணைத்துள்ளேன்.

மேலும் இப்புகாரின் அடிப்படையில் எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு எனது முழு ஒத்துழைப்பையும் அளிக்க விருப்பமளிக்கிறேன்.

நன்றி,

இப்படிக்கு         
(தங்கள் கையொப்பம்)

 

மின்சாரம் புகார் கடிதம் மாதிரி | EB Complaint Letter Format in Tamil

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Today Useful Information in Tamil