பாகப்பிரிவினை சட்டம் | Baga Pirivinai Sattam in Tamil

Baga Pirivinai Sattam in Tamil

பூர்விக சொத்து சட்டம் | Baga Pirivinai Sattam in Tamil

சட்டம் என்பது ஒரு சமுகத்தில் வாழும் மக்கள் ஒவ்வொருவருக்கும் நன்மதிப்பையும், சமத்துவத்தையும் அடைவதற்கு உறுதுணையாக இருப்பது தான் சட்டத்தின் முக்கிய நோக்கமாக கருதப்படுகிறது. அந்த வகையில் நாம் இந்த பதிவில் பாக பிரிவினை சட்டம் என்றால் என்ன? இந்த சட்டம் எதற்காக பயன்படுகிறது, என்னென்ன சட்டங்கள் உள்ளன என்பதை விரிவாக இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க.

பாகப்பிரிவினை சட்டம்:

 • குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அல்லது வாரிசுகளின் முழு சம்மதத்தோடு சமமாக தந்தையின் பூர்விக சொத்தை பிரித்து கொள்ளலாம். ஆனால் குடும்ப உறுப்பினர்கள் அல்லது வாரிசுகளுக்கு பூர்விக சொத்தை சமமாக பிரிப்பதில் ஏதேனும் உடன்பாடு இல்லையெனில் பாகப்பிரிவினையை எதிர்த்து நீதி மன்றத்தில் வழக்கு தொடரலாம்.
 • உதாரணத்திற்கு ஒரு குடும்பத்தில் ஐந்து வாரிசுகள் இருந்து அதில் நான்கு வாரிசுகளுக்கு மட்டும் பூர்விக சொத்து பிரிக்கப்பட்டு ஒரு வாரிசுக்கு மட்டும் சொத்து கிடைக்கவில்லை எனில் அந்த பாகப்பிரிவினை செல்லாது என நீதி மன்றத்தில் வழக்கு தொடரலாம்.

தான பாத்திரம் – Baga Pirivinai Sattam in Tamil:

 • தனது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கு சொத்துக்களை மாற்றம் செய்வதற்கு பயன்படுவது தான் தான பாத்திரம்.
 • ஒருவர் தங்களுடைய பண தேவைகளுக்காக சொத்தை மாற்றம் செய்யும் போது அது சொத்து விற்பனை என்று கருதப்படுகிறது. ஆனால் தான பத்திரம் மூலம் சொத்தை மாற்றுவதன் மூலம் அது விற்பனையாக கருதப்படுவது இல்லை.
 • அதாவது தந்தை இறந்த பிறகு சகோதரர் அந்த சொத்தை அவரின் தங்கைக்கு தானமாக கொடுக்கலாம். அந்த தங்கை திருமணம் ஆன பிறகு சொத்தை தனது கணவனுக்கு தானமாக கொடுக்கலாம்.
 • சொத்துக்களை தான பத்திரம் மூலம் கொடுப்பதால் முத்திரை தாள் கட்டணம் இல்லாமல் சொத்தை உரிமம் செய்து கொள்ளலாம். ஆனால் இதை பதிவதற்கான கட்டணம் சொத்து வழிகாட்டி மதிப்பில் 1% அல்லது ரூ.10,000/- செலுத்த வேண்டும். இது தவிர பதிவு கட்டணம் ரூ.2,000/- கட்ட வேண்டும்.

பாகப்பிரிவினை சட்டம் – உயில்:

 • தந்தை தனிப்பட்ட முறையில் சம்பாதித்த சொத்துக்களை தனது குடும்ப வாரிசு அல்லாது பிற மனிதர்களுக்கு அல்லது பிடித்தவர்களுக்கு அல்லது ஆசிரமங்களுக்கு எந்த விதமான பிரச்சனைகள் இல்லாமல் சொத்துக்கள் போய் சேர்வதற்கு எழுதி வைக்க பயன்படுவது உயில் ஆகும்.
 • உயில் எழுதவில்லை எனில் அந்த சொத்து குடும்ப வாரிசுகளுக்கு சொந்தமாகிவிடும், மேலும் பூர்விக சொத்தை உயிலாக எழுத முடியாது. மது அருந்தி இருந்தாலோ அல்லது சுயநினைவு இல்லாமல் எழுதப்படும் உயில் செல்லாது. 18- வயது நிரம்பாமல் உள்ளவருக்கு உயில் எழுதப்படும் போது அவருக்கு ஒரு Guardian இருக்க வேண்டும்.

பெண்ணின் சொத்துரிமை – Partition Law in Tamil:

 • தந்தை அல்லது தாயின் வழிவரும் பூர்விக சொத்துக்களில் பெண்களுக்கு சம உரிமை உண்டு. ஒரு வேளை குடும்பத்தில் உள்ள அந்த பெண் சொத்து வேண்டாம் என கூறினால் அதனை மற்ற வாரிசுகள் பகிர்ந்து கொள்ளலாம்.
 • தந்தை இறந்த பிறகு ஒரு பெண் பூர்விக சொத்தில் உரிமை கோரமுடியும், இந்த சட்டம் 2005-ல் கொண்டு வரப்பட்டது. 25.03.1989-ஆண்டிற்கு முன்னர் திருமணம் ஆன பெண் சொத்தில் பங்கு கேட்க முடியாது, ஆனால் 25.03.1989- ஆண்டிற்கு பின் திருமணம் ஆன பெண் சொத்தில் பங்கு கேட்க முடியும்.
 • அதே போல் 25.03.1989-ல் பாகப்பிரிவினை செய்யப்பட்டிருந்தால் அப்போது பாகப்பிரிவினை உரிமை கூறமுடியாது. சொத்து விற்கப்படாமல் அல்லது பாகம் பிரிக்கப்படாமல் இருந்தால் உரிமை கோர முடியும்.

வாரிசு சான்றிதழ் – பாகப்பிரிவினை சட்டம் – இரண்டாவது மனைவிக்கு சொத்துரிமை:

 • தந்தை எதிர்பாராமல் இறந்து விட்டால் அப்பொழுது வங்கியில் சேமிக்கப்படும் பணம், பங்குச் சந்தையில் போடப்படும் முதலீடு, மியூச்சுவல் ஃபண்ட் போன்றவை நாமினியிடம் ஒப்படைக்கப்படும். ஒரு வேளை நாமினி இல்லாமல் இருந்தாலோ அல்லது வாரிசுகள் நாமினி மீது வழக்கு தொடர்ந்தாலோ அப்பொழுது வாரிசு சான்றிதழ் அடிப்படையில் அந்த சொத்துக்களை பெற்று கொள்ள முடியும். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்பினர்கள் குடும்பத்தில் இருந்தால் நீதி மன்றம் வழங்கப்படும் இறங்குரிமை சான்றிதழ் மூலம் சொத்துக்கள் கொடுக்கப்படும்.

இரண்டாவது மனைவிக்கு சொத்துரிமை:

 • ஒரு ஆணின் முதல் மனைவி உயிருடன் இருக்கும் போது இரண்டாவது திருமணம் செய்து கொண்டால் 2-வது மனைவிக்கு கணவனின் சொத்தில் உரிமை கிடையாது, ஏனனென்றால் இந்து திருமணச் சட்டம் இரண்டாவது திருமணத்தை அங்கீகரிக்காத காரணத்தால் 2-வது மனைவிக்கு கணவனின் பூர்விக சொத்தில் உரிமை இல்லை. ஆனால் கணவனின் தனிப்பட்ட சொத்தில் பங்கு உண்டு.
 • கணவனின் முதல் மனைவி உயிருடன் இல்லாத போது ஒரு ஆண் இரண்டாவது திருமணம் செய்து கொண்டால் அது சட்டப்படி செல்லும், இதனால் இரண்டாவது மனைவிக்கு சொத்தில் பங்கு கிடைக்கும்.
இந்திய இந்து திருமணங்கள் சட்டம்
தகவல் அறியும் உரிமை சட்டம்

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன் (Baby health tips in tamil), விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –>பொதுநலம்.com