பாரதியாரின் புனை பெயர்கள்
இந்திய விடுதலை போராட்ட வீரர்களுள் பாரதியும் ஒருவர். இவரை பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கிறார்கள். பாரதியை இந்த பெயர்களால் மட்டும் அழைக்காமல் பல புனை பெயர்களால் அழைத்து வருகிறார்கள். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீன தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார். பாரதி, இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். சரி வாங்க பாரதியாரை அழைக்கும் பல புனை பெயர்களை இந்த பதிவில் படித்து தெரிந்துக்கொள்ளலாம்.
பாரதியாரின் வாழ்க்கை குறிப்பு:
- பாரதியாரின் இயற்பெயர்: சுப்பிரமணியம்
- செல்லமாக அழைக்கும் பெயர்: சுப்பையா
- வசித்த ஊர்: எட்டயபுரம்
- தாய்/ தந்தையர்: சின்னசாமி ஐயர், இலட்சுமி அம்மாள்
- மனைவி பெயர்: செல்லம்மாள்
- பாரதியின் மகள் பெயர்: தங்கம்மாள், சகுந்தலா
- பிறப்பு (ம) இறப்பு காலம்: 11.12.1882-11.09.1921
பாரதியாரின் புனை பெயர்கள்:
காளிதாசன் |
காசி |
ரிஷி குமாரன் |
சக்திதாசன் |
சாவித்திரி |
ஓர் உத்தம தேசாபிமானி |
நித்திய தீரர் |
ஷெல்லிதாசன் |
பாரதிக்கு வழங்கிய சிறப்பு பெயர்கள்:
- புதுக் கவிதையின் முன்னோடி
- பைந்தமிழ்த் தேர்பாகன்(பாவேந்தர்)
- சிந்துக்குத் தந்தை, செந்தமிழ்த் தேனீ, புதிய அறம் பாட வந்த அறிஞர், மறம் பாட வந்த மறவன் (பாவேந்தர்)
- நீடு துயில் நீக்கப் பாடிவந்த நிலா(பாவேந்தர்)
- காடு கமழும் கற்பூரச் சொற்கோ(பாவேந்தர்)
- பாட்டுக்கொரு புலவன் பாரதி(கவிமணி)
- தற்கால இலக்கியத்தின் விடிவெள்ளி
- சென்னையின் தமிழ்க் கவிஞன்
- தேசியக்கவி
விடுதலைக்கவி
- உண்மைக் கவிஞன், உணர்ச்சிக் கவிஞன், உரிமைக் கவிஞன்
- குழந்தைக் கவிஞன், புதுயுகக் கவிஞன், கண்டனக் கவிஞன்
- காதற் கவிஞன், சுதந்திர கவிஞன், தெய்வக் கவிஞன்.
- அமரக்கவி
- முன்னறி புலவன்
- மகாகவி
- உலககவி
- தமிழ்க்கவி
- மக்கள் கவிஞர்
- வரகவி
- முண்டாசுக்கவி
பாரதியாரின் பொதுவான குறிப்புகள்:
- எட்டயப்புர சமஸ்தான புலவர்கள் “பாரதி” என்ற பட்டம் அளித்தனர்.
- தம்மை “ஷெல்லிதாசன்” என்று அழைத்துக்கொண்டார்
- தம் பூணூலை கனகலிங்கம் என்ற ஆதி திரோவிடற்கு அளித்தவர்
- தம் பாடல்களுக்கு தாமே மெட்டு அமைத்த கவிஞர்
- 1905இல் சக்கரவர்த்தினி என் இதழ் தோடங்கினோர்
- கர்மயோகி, பாலபாரத் ஆகிய இதழை நடத்தினார்
- சுதேசி மித்திரன் என்ற இதழின் துணையாசிரியர் ஆக பணிபுரிந்தார்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> |
Today useful information in tamil |