உலக புவி நாள் | World Earth Day in Tamil
ஆயிரக்கணக்கான உயிரினங்கள் வாழும் இடம்தான் புவி. இந்த புவியானது சுமார் 4.54 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உருவானது. புவியின் சுமார் 71% மேற்பரப்பு உப்பு நீர் கொண்ட பெருங்கடல்களாலும் மற்ற பகுதிகள் கண்டம், தீப கற்பங்கள் மற்றும் எல்லா உயிர்களுக்கும் முக்கியமான திரவ நீராலும் நிரப்பப்பட்டுள்ளது. புவியின் உருவம் துருவங்களில் தட்டையாகவும் நிலநடுக் கோட்டிற்கு அருகில் விரிவடைந்தும் உள்ள நீள்வட்ட கோளத்தைப் போல் காணப்படுகின்றது. இந்த பதிவில் சர்வதேச உலக புவி நாள் எப்போது கணக்கிடப்பட்டுள்ளது என்பதை இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளுவோம்..!
கோள்கள் பற்றிய தகவல்கள் தமிழில் |
சர்வதேச புவி நாள்:
வருடந்தோறும் ஏப்ரல் 22-ம் தேதி அன்று அனைத்து நாடுகளிலும் புவியின் சுற்றுச் சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, கடைப்பிடித்து வரும் சிறப்பான நாளாகும்.
புவியின் குறுக்கு வெட்டு தோற்றம்:
புவி நாள் ஏன் எழுந்தது:
ஐக்கிய அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் யுனெஸ்கோ மாநாடு ஒன்று 1969-ம் ஆண்டு நடந்தது. அந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்களுள் ஒருவர் ஜான் மெக்கானெல் (John McConnell). இவர் உலக அமைதிக்காகக் குரல் கொடுத்த ஒரு மாமனிதர்.
மனித குலமும் பிற உயிரினங்கள் வாழ்கின்ற பூமியின் அழகைச் சிறப்பிக்கவும், பூமியின் இயற்கைச் சூழலைக் மாசுபடுத்தாமல் பாதுகாக்க மக்களிடம் இயற்கை விழிப்புணர்வினை வலியுறுத்தியவர். இவர் விழிப்புணர்வோடு மட்டுமல்லாமல் வருடந்தோறும் புவிக்காக ஒரு சிறப்பான நாளினை கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
அதே நேரத்தில், ஐக்கிய அமெரிக்காவில் சுற்றுச்சூழலியல் நிபுணரும் மேலவை உறுப்பினருமான கேலார்ட் நெல்சன் என்பவர் சுற்றுச்சூழல் பற்றிய அறிவைப் பரப்பத் சரியான நாளாக 1970-ம் ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி உலக புவி நாளாக நடத்த அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை ஏற்று 20 மில்லியன் மக்கள் அந்த மாநாட்டில் கலந்துக்கொண்டனர். அன்று முதல் வருடந்தோறும் 175 நாடுகளில்ஏப்ரல் 22 அன்று புவி நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |