பேலன்ஸ் பார்ப்பது எப்படி? | Check Mobile Balance Online in Tamil
இப்போதெல்லாம் சிறிய குழந்தைகள் கைகளில் கூட மொபைல் இல்லாமல் இல்லை. அந்த அளவிற்கு நாடு வளர்ச்சி நிலையை அடைந்துள்ளது. சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஸ்மார்ட் போன் உபயோகிக்க ஆரம்பித்துவிட்டார்கள். பெரும்பாலான குழந்தைகளுக்கு கூட இப்போது மொபைலில் மொபைல் பேலன்ஸ், நெட் பேலன்ஸ் பார்க்க தெரிந்திருக்கிறது. ஆனால் ஒரு சில பெரியவர்களுக்கு இன்றும் தங்களுடைய மொபைலில் பேலன்ஸ் பார்ப்பதற்கு தடுமாறுகிறார்கள். அருகில் உள்ளவர்களிடம் மொபைலை கொடுத்து பேலன்ஸ் பார்க்க சொல்லுவார்கள். இந்த நிலை இன்றும் மாறாமல் தான் இருந்து கொண்டிருக்கிறது. மொபைலில் பேலன்ஸ் பார்க்க தெரியவில்லையா? கவலைய விடுங்க.. உங்களுக்கென்றே இந்த பதிவில் மொபைல் பேலன்ஸ் பார்ப்பது எப்படின்னு பதிவிட்டுள்ளோம்.. படித்து தங்களுடைய மொபைல் எந்த வகையை சேர்ந்ததோ அந்த மொபைலுக்கான எண்ணினை சரியாக தேர்வு செய்து பேலன்ஸ் சரிபார்த்து கொள்ளுங்கள்..
கேஸ் சிலிண்டர் புக் செய்வது எப்படி |
பேலன்ஸ் பார்ப்பது எப்படி?
மொபைல் நெட்வொர்க் | பேலன்ஸ் பார்க்கும் எண் |
ஏர்டெல் | *123# |
BSNL | *123# |
ஐடியா | *121# or *125# |
ரிலையன்ஸ் | *367# |
வோடபோன் | *146# |
ஜியோ | *333# |
தேவையில்லாத Calls மற்றும் SMS தொந்தரவு பிரச்சனையா?
உங்களுக்கு அடிக்கடி தேவையில்லாத அழைப்புகள், தவறான SMS வந்து உங்களை எரிச்சலடைய வைக்கிறதா? இந்த தொந்தரவிலிருந்து முற்றிலும் தப்பிக்க DND என்ற டூ-நாட் டிஸ்டர்ப் மோடு அம்சத்தை வைத்து இந்த பிரச்சனைக்கு தீர்வு காணலாம்.
நீங்கள் DND என்ற மோடை செயல்படுத்தியதும், ஸ்பேம் என்று கருதப்படும் தேவையற்ற அழைப்புகள் மற்றும் மெஸ்ஸேஜ்கள் வருவது நிறுத்துப்படும். இந்த சேவையை TRAI அறிமுகப்படுத்தியுள்ளது.
தேவையற்ற SMS-ஐ DND மூலம் தவிர்ப்பது எப்படி?
SMS வழியாக உங்கள் Vi எண்ணில் DND-ஐ செயல்படுத்த, நீங்கள் பின்வருமாறு ஒரு SMS அனுப்ப வேண்டும். 1909 என்ற எண்ணிற்கு ‘STOP 0’ என்ற எஸ்எம்எஸ் அனுப்பவும். STOP க்குப் பிறகு இடைவெளி இல்லாமல் நீங்கள் 0 டைப் செய்ய கூடாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும்.
ஆன்லைன் மூலம் மின்தடையை முன்னரே கண்டுபிடிப்பது எப்படி |
DND-ஐ மூலம் தேவையில்லாத வாய்ஸ் Calls-ஐ தடுப்பது எப்படி?
- step 1: உங்களுடைய ஸ்மார்ட் போனில் முதலில் Vi பயன்பாட்டினை பதிவிறக்கவும்.
- step 2: அடுத்து உங்களுடைய மொபைல் எண்ணை பதிவு செய்யவும்.
- step 3: My Account கிளிக் செய்து, DND விருப்பத்தைக் கண்டுபிடிக்கக் கீழே scroll செய்யுங்கள்.
- step 4: கிளிக் செய்தபிறகு நீங்கள் எதை தடுக்க விரும்புகிறீர்களோ அதை சரியாக தேர்வு செய்துக்கொள்ளவும்.
- step 5: உங்களுடைய DND கோரிக்கையானது நான்கு முதல் ஐந்து நாட்களில் செயல்முறை படுத்தப்படும்.
உதாரணத்திற்கு:
ஏர்டெல் பயனாளர்கள் கவனத்திற்கு:
- ஏர்டெல் நிறுவனத்திற்கான வெப்சைட் (www.airtel.in) திறந்து மற்றும் DND பக்கத்தில் செல்லவும்.
- நீங்கள் விரும்பினால் இந்த இணைப்பை நேரடியாக (https://www.airtel.in/airtel-dnd/) யில் செல்ல வேண்டும்.
- இப்பொழுது ஏர்டெல் மொபைல் சர்விஸ் பிரிவிற்கு சென்று Click Here ஆப்ஷனை க்ளிக் செய்யவும்
- இப்போது உங்கள் ஏர்டெல் எண்ணை உள்ளிடவும்.
- Get OTP யில் க்ளிக் செய்யவும். OTP ஐ என்டர் செய்த பிறகு, இறுதியில் அனைத்து விருப்பத்தையும் கொடுக்கவும்.
ரிலையன்ஸ் ஜியோ பயனாளர்கள் கவனத்திற்கு:
- உங்கள் போனில் My Jio பயன்பாட்டைப் பதிவிறக்கி லாகின் செய்துகொள்ளவும்.
- இப்போது இடது புறத்தில் உள்ள மெனு விருப்பத்திலிருந்து Setting-ற்கு செல்லவும்.
- இங்கே நீங்கள் DND விருப்பத்தை காண்பீர்கள்.
- நிறுவனம் உங்களுக்கு ஒரு கடிதம் கொடுக்கும், மேலும் 7 நாட்களுக்குள் DND மோட் செயல்படுத்தப்படும்.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |