பொருளாதாரம் என்றால் என்ன? | Porulatharam Enral Enna

What is Economics in Tamil

பொருளாதாரம் என்பதன் பொருள் யாது | What is Economics in Tamil

வணக்கம் நண்பர்களே இன்று தமிழ் பதிவில் பொருளாதாரம் என்றால் என்ன என்பதை அறிந்துகொள்வோம். பொதுவாக சமூக அறிவியல் புத்தகத்தில் கடைசியாக வருவது பொருளாதாரம். அதனை பற்றி தெரிந்துகொள்வது நல்லது. பொருளாதாரத்தை பற்றி சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தெரிந்துகொள்ள வேண்டும். ஏன் என்றால் பொருளாதாரத்தை பொறுத்தவரையில் இந்த கொரோனா காலத்தில் எல்லாரும் பின் அடைவில் இருக்கிறோம். அந்த வகையில் பொருளாதாரம் என்றால் என்ன என்பதை பற்றி தெளிவாக படித்து அறிந்துகொள்வோம்.

உயிர்வாயு என்றால் என்ன?

பொருளாதாரம் என்றால் என்ன..?

  • பொருளாதாரம் என்பது பொருட்களின் உற்பத்தி அதன் விற்பனை மற்றும் அதன் பயன்பாட்டையும் நிர்ணயிப்பது பொருளாதாரம் எனப்படும். ஒரு நாட்டின் உற்பத்தி அதன் விற்பனை மற்றும் பயன்பாட்டையும் வைத்து அந்த நாட்டின் பொருளாதாரத்தை சுலபமாக நிர்ணயித்துவிடலாம்.

பொருளாதார முறைகள் யாவை:

  • பொருளாதார முறைகளில் முதலில் சொல்வது முதலாளித்துவம் இதற்கு வேறு பெயர்கள் உள்ளது. அது சந்தை பொருளாதாரம் எனவும், தடையற்ற பொருளாதாரம் எனவும் கூறுவர்.
  • பொருளாதார முறைகளில் இரண்டாவதாக சொல்வது சமத்துவ பொருளாதார கொள்கை இதற்கும் வேறு பெயர்கள் உள்ளது. இந்த சமத்துவ பொருளாதாரத்தை தீவிரமாக செயல்படுத்தினால் கம்யூனிஸ்ட் பொருளாதாரம் (communist economy) எனவும், சோசியலிஸ்ட் பொருளாதாரம் (socialist economy) எனவும், கட்டளை பொருளாதாரம் (commanding economy) எனவும், திட்டமிட்ட பொருளாதாரம் (planned economy) எனவும் கூறுவர்.
  • பொருளாதார முறைகளில் மூன்றாவதாக சொல்வது கலப்பு பொருளாதாரம் (mixed economy) இந்த பொருளாதார முறையை பின்பற்ற கூடிய நாடுகளில் இந்தியாவும் உள்ளது. அதிகளவு எல்லா நாடுகளும் இந்த கலப்பு பொருளாதார முறையை செயல்படுத்தி வருகிறது.
பெரிய வியாழன் என்றால் என்ன?

பழமைப் பொருளாதாரம்:

  • பொருளாதார முறைகள் வருவதற்கு முன் பழமைப் பொருளாதாரம் (Traditional Economy) என்பதை செயல்படுத்தி வந்தார்கள்.
  • அந்த காலத்தில் பழமை பொருளாதாரம் என்பது தன் நாட்டிற்கு தேவையான பொருட்களை அவர்களே உற்பத்தி செய்தார்கள். அப்படி இல்லையெனில் தங்களுக்கு தேவையான பொருட்களை மற்ற நாட்டில் இருந்து பெற்றுக்கொண்டு அவர்களுக்கு தேவையுள்ள பொருட்களை கொடுத்து வந்தார்கள். இந்த முறைகளுக்கு பண்ட மாற்றுமுறை (Barter System) என பெயர்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil