வங்கி விடுமுறைகள் 2022 | Bank Holidays 2022 in Tamil

Advertisement

வங்கி விடுமுறைகள் 2022 ஏப்ரல் | Bank Holidays April 2022 in Tamil 

வங்கியானது நமது பண தேவைகளை பூர்த்தி செய்யும் முக்கியமான இடமாக விளங்குகிறது. நம்முடைய பணப் பரிவர்த்தனைகளை முன்கூட்டியே திட்டமிட்டு அதன்படி செயல்பட்டால் தேவையில்லாத அலைச்சல்களும் இருக்காது, நம்முடைய நேரமும் கெடாது. எனவே வங்கிகளின் வேலை நாட்கள், விடுமுறை தினம் ஆகியவற்றை முன்கூட்டியே தெரிந்துகொள்வது சிறந்தது. 2022-ம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் எத்தனை நாட்கள் வங்கிகள் இயங்கும், இயங்காது என்று பார்க்கலாம் வாருங்கள்.

2022 அரசு விடுமுறை நாட்கள்

வங்கி பொது விடுமுறை நாட்கள்:

ஏப்ரல் 1: வங்கி கணக்குகளின் வருடாந்திர மூடல் – (அனைத்து மாநிலத்திலும் விடுமுறை).

ஏப்ரல் 2: குடி பத்வா/உகாதி விழா/நவராத்திரியின் முதல் நாள்/தெலுங்கு புத்தாண்டு/சஜிபு நோங்கம்பாம்பா (சைரோபா) – பெலாபூர், பெங்களூர், சென்னை, ஹைதராபாத், இம்பால், ஜம்மு, மும்பை, நாக்பூர், பனாஜி மற்றும் ஸ்ரீநகர் ஆகிய இடங்களில் விடுமுறை.

ஏப்ரல் 4: சாரிஹுல்-ராஞ்சியில் விடுமுறை.

ஏப்ரல் 5 – பாபு ஜக்ஜீவன் ராம் பிறந்தநாள் – ஹைதராபாத்தில் விடுமுறை.

ஏப்ரல் 14 – டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் ஜெயந்தி/ மகாவீர் ஜெயந்தி/ பைசாகி/ தமிழ் புத்தாண்டு/ சைரோபா, பிஜூ விழா/ போஹர் பிஹு – ஷில்லாங் மற்றும் சிம்லாவைத் தவிர மற்ற இடங்களில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை.

ஏப்ரல் 15 – புனித வெள்ளி / பெங்காலி புத்தாண்டு / ஹிமாச்சல் நாள் / விஷு / போஹாக் பிஹு – ஜெய்ப்பூர், ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் தவிர மற்ற இடங்களில் விடுமுறை.

ஏப்ரல் 16 – போஹாக் பிஹு – கவுகாத்தியில் விடுமுறை.

ஏப்ரல் 21 – கரியா பூஜை – அகர்தலாவில் விடுமுறை

ஏப்ரல் 29 – ஷப்-இ-கத்ர்/ ஜுமாத்-உல்-விடா – ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் விடுமுறை.

வங்கி வார விடுமுறை நாட்கள்:

  • ஏப்ரல் 3 – ஞாயிற்றுக்கிழமை
  • ஏப்ரல் 9 – 2வது சனிக்கிழமை)
  • ஏப்ரல் 10 – ஞாயிற்றுக்கிழமை
  • ஏப்ரல் 17 – ஞாயிற்றுக்கிழமை
  • ஏப்ரல் 23 – நான்காவது சனிக்கிழமை
  • ஏப்ரல் 24 – ஞாயிற்றுக்கிழமை

தமிழகத்தில் எத்தனை நாட்கள் விடுமுறை:

  • ஏப்ரல் 2, 2022 – தெலுங்கு வருட பிறப்பு
  • ஏப்ரல் 9, 2022 – இரண்டாவது சனிக்கிழமை
  • ஏப்ரல் 14, 2022 – தமிழ் புத்தாண்டு
  • ஏப்ரல் 15, 2022 – புனித வெள்ளி
  • ஏப்ரல் 23, 2022- 4 வது சனிக்கிழமை
  • இது தவிர ஏப்ரல் 3 – ஞாயிற்றுக்கிழமை,
  • ஏப்ரல் 10 – ஞாயிற்றுக்கிழமை,
  • ஏப்ரல் 17 – ஞாயிற்றுக்கிழமை,
  • ஏப்ரல் 24 – ஞாயிற்றுக்கிழமை

மொத்தம் 9 நாட்கள் வங்கி விடுமுறையாகும்.

எச்சரிக்கை:

மேல்கூறிய விடுமுறை நாட்களில் தங்களுக்கு பண தேவையானது அதிகமாக இருக்கலாம். அதனால் வங்கி விடுமுறை நாட்களை சரியாக தெரிந்துகொண்டு அதற்கேற்ப திட்டமிட்டு செயல்படுவது நல்லது.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement