வினைமுற்று என்றால் என்ன? | Vinaimutru Endral Enna

Advertisement

வினைமுற்று என்றால் என்ன தமிழ் | Vinaimutru in Tamil

நம்முடைய பள்ளி வகுப்பில் இலக்கணம் ஒரு இன்றியமையாத பாடப்பகுதி. ஆங்கிலத்திற்கு எப்படி Grammar-ஓ அதே போன்று தமிழுக்கு இலக்கணம். ஒரு மொழிக்கான விதிகள் மற்றும் கூறுகளை எடுத்துரைப்பது இலக்கணம். அந்த வகையில் இந்த தொகுப்பில் இலக்கணத்தில் ஒன்றான வினைமுற்று என்றால் என்ன? மற்றும் அதன் வகைகள் எத்தனை என்பதையெல்லம் விரிவாக இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

வினைமுற்று என்றால் என்ன?

  • ஒரு வினை, எச்சப் பொருளில் அமையாமல், முழுமை பெற்று விளங்குவது. இவ்வாறு பொருள் முற்றுப் பெற்ற வினைச் சொற்களை முற்றுவினை அல்லது வினைமுற்று என்பர்.
  • அதாவது ஒரு செயல் முடிந்ததை குறிக்கும் சொல் வினைமுற்று எனப்படும். இது தினை, பால், எண், இடம், காலம் காட்டும் பயனிலையாக வரும்.

வினைமுற்று சான்று தருக:

  • கோகிலா வந்தாள் 
  • அருளரசு வந்தான் 

இதில் வந்தான், வந்தாள் எனும் செயல் முற்றுபெற்றதனால் வினைமுற்று ஆகும்.

  • மங்கை பாடினாள்
  • மயில் ஆடியது

இந்த தொடர்களில் பாடினாள், ஆடியது எனும் வினைச்சொற்கள் செயல் முற்றுப்பெற்றதை உணர்த்துவதால் இது வினைமுற்று எனப்படும்.

வினைமுற்று வகைகள் – Vinaimutru Ethanai Vagai Padum

  1. தெரிநிலை வினைமுற்று
  2. குறிப்பு வினைமுற்று
  3. ஏவல் வினைமுற்று
  4. வியங்கோள் வினைமுற்று
  5. உடன்பாடு வினைமுற்று
  6. எதிர்மறை வினைமுற்று

தெரிநிலை வினைமுற்று என்றால் என்ன?

  • ஆறு பொருட்களான செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் போன்றவற்றை வெளிப்படையாக தெரிவித்தால் அது தெரிநிலை வினைமுற்று எனப்படும்.

உதாரணம்:

ரேவதி மாலை தொடுத்தாள்

  • செய்பவன் – ரேவதி
  • கருவி – நார், பூ, கை
  • நிலம் – அவளுடைய இருப்பிடம்
  • செயல் – பூ கட்டுதல் (தொடுத்தல்)
  • காலம் – இறந்த காலம்
  • செய்பொருள் – மாலை

இவ்வாறு இந்த தொடரில் ஆறு பொருட்களையும் வெளிப்படையாக கூறுவதால் இது தெரிநிலை வினைமுற்று ஆகும்.

குறிப்பு வினைமுற்று:

இந்த வினைமுற்றில் தினை, பால், செய்பவன் போன்றவற்றை வெளிப்படையாக கூறி, காலத்தை வெளிப்படையாக கூறாமல் குறிப்பால் உணர்த்துவதால் இது குறிப்பு வினைமுற்று எனப்படும்.

(எ.கா) அவன் பொன்னன் 

இதில் பொன்னன் என்பது குறிப்பு வினையாகும். பொண்ணை உடையவனாய் இருந்தான், இருப்பான், இருக்கின்றான் என பொன்னன் என்பது முக்காலத்தையும் குறிப்பால் உணர்த்துகிறது.

பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் போன்ற ஆறின் அடிப்படையிலும் குறிப்பு வினைமுற்று தோன்றும்.

(எ.கா)

  • பொன்னன் – பொருள்
  • ஆரூரன் – இடம்
  • ஆதிரையான் – காலம்
  • கண்ணன் – சினை
  • கரியன் – குணம்
  • நடையன் – தொழில்

ஏவல் வினைமுற்று என்றால் என்ன?

கட்டளையிட்டு ஒரு செயலை செய் என்று கூறுவது ஏவல் வினைமுற்று எனப்படும். இந்த வினைமுற்று ஒருமை, பண்மை என இரண்டு வகைகளில் வரும்.

ஒருமை: இ, ஆ, ஆய் விகுதிகள்.

  • (எ.கா) வருதி, செவ்வாய்
  • நீ நட, நீ செய், நீ போ, நீ படி என்பவை விகுதி பெறாத வினைமுற்று.

பன்மை: இர், ஈர், மின், உம்

(எ.கா) வருவீர், வம்மின், வாரும்.

இலக்கணம் என்றால் என்ன?

வியங்கோள் வினைமுற்று:

க, இய, இயர் எனும் விகுதிகளைப்பெற்று வாழ்த்துதல், வைதல், விதித்தல், வேண்டல் ஆகிய பொருள்களில் வரும் வினைமுற்று வியங்கோள் வினைமுற்று எனப்படும்.

  • வாழ்க – வாழ்தல் பொருள்
  • ஒழிக – வைதல் பொருள்
  • உண்க – விதித்தல் பொருள்
  • கருணைபுரிக – வேண்டல் பொருள்.

உடன்பாடு வினைமுற்று:

  • தொழில் நிகழ்வதை காட்டும் வினைமுற்று உடன்பாடு வினைமுற்று எனப்படும்.

(எ.கா) தொடுத்தான், செய்வீர், கொடுத்தான்.

எதிர்மறை வினைமுற்று:

  • தொழில் நிகழாததை காட்டும் வினைமுற்று எதிர்மறை வினைமுற்று எனப்படும்.

(எ.கா) தொடுத்திலன், செல்லாதீர்

எட்டாம் வகுப்பு வினைமுற்று வினா விடைகள்

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement