வீட்டு வரி கட்டுபவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள்..!

Advertisement

வீட்டு வரி விவரம் | House Tax Details in Tamil

பொதுவாக அனைவரும் வீட்டு வரி கட்டுபவர்களா என்றால் அது சந்தேகம் தான். ஏனென்றால் பாதி பேர் வாடகை வீட்டில் தான் குடியிருப்பார்கள். சொந்த வீட்டில் உள்ள அனைவருமே விட்டு வரி கட்டுவது வழக்கமாக வைத்திருப்பார்கள். இந்த வரியை எதற்காக செலுத்துகிறோம் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா..? அல்லது இதில் உள்ள தேவைகளை பற்றி தான் உங்களுக்கு தெரியுமா..? சரி வாங்க இப்போது வீட்டு வரி கட்டுவதன் விவரங்களை தெரிந்துக்கொள்ளலாம்..!

வீட்டு வரி விவரங்கள்| House Tax Details in Tamil:

சொந்த வீடாக இருந்தால் அவர்கள் தான் இந்த வீட்டு வரியை செலுத்துவார்கள். அதில் இரண்டு ரசீதுகள் உள்ளது. அதில் 2 Copy இருக்கும். அதில் வீட்டு வரி செலுத்துவோருக்கு கொடுப்பார்கள்.

மற்றொரு Copy -யை அலுவலக Copy -யாக வைத்திருப்பார்கள். அதாவது கார்பன் பேப்பரில் எழுதுவார்கள். அதன் பின் பக்கம் இருக்கும் பக்கத்தில் பதிந்துவிடும். அதை பதிவு அலுவலகத்தில் பாதுகாத்து வரவேண்டிய முக்கியமானது.

இந்த ரசீதுகள் அனைத்தும் புத்தக வடிவில் தான் இருக்கும். அதில் கார்பன் பேப்பர் வைத்திருப்பார்கள். இது ஏன் எப்படி செய்கிறார்கள் என்றால் அதில் ஏதேனும் முறைகேடு ஏற்படாமல் இருக்கவேண்டும் என்பதற்காக தான்.

இந்த ரசீதில் பெனிசிலில் எழுத கூடாது. ஒயிட்னரில் எழுத கூடாது, அது உரிய அதிகாரம் உடையவர்கள் அந்த இடத்தில் முழுமையாக கையொப்பம் செய்யவேண்டும்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 பட்டாவை பத்திரமாக மாற்றுவது எப்படி.?

ஊராட்சிகள் தன்னிச்சையாக ரசீதுகளை அச்சியடித்து கொள்ள முடியாது. மாவட்ட கூட்டுறவு அச்சகத்தில் கொள்முதல் செய்யவேண்டும். அதற்கு கிராம ஊராட்சியில் தீர்மானம் நிறையவேற்றி ஒப்புதல் பெறவேண்டும். அதாவது அவர்களிடம் கேட்டு அதன் பின்பு தான் அச்சடிக்க முடியும்.

ஊராட்சியின் பதிவேட்டில் எத்தனை புத்தகங்கள் முன்பு உள்ளது. புதிதாக எத்தனை புத்தகம் வாங்குவது என்பதையும் பதிவு செய்யவேண்டும்.

இதனை தொடர்ந்து மேல் அதிகாரிகள் தான் இந்த புத்தகத்தையும் ஊராட்சியில்  உள்ள மற்ற ஆவணங்களையும் ஆய்வு செய்த பின்பு பதிவு செய்வார்கள்.

பட்டா சிட்டா மாற்றுதல் இனி எளிது.! அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil
Advertisement